ஆடாதோடைபயன்கள் | Adathodai Uses in Tamil
நம்மை படைத்த இறைவன் கூடவே நமக்கு நோய் தாக்குதல் ஏதேனும் ஏற்பட்டால் உதவும் வகையில், பல வகையான அரிய மூலிகைகளையும் படைத்து வைத்திருக்கின்றான்.
அதுதான் இயற்கையின் அருட்கொடை. மனிதர்களின் உடலில், எந்தவித வியாதிகளும் அணுகாமல்
ஆரோக்கியமாக வாழ வழி செய்யும் மூலிகைகளே காய கற்ப மூலிகைகள் ஆகும். அதில் ஒன்று தான் ஆடாதோடை .
ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும்.
ஆடாதோடை சிறு செடியாகவும் ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை போன்ற உருவில் இருக்கும்.
ஆடுகள் தொடாத இலை என்ற காரணத்தினால் இது ஆடுதோடா இலை என்ற பெயர் பெற்றது. காலப்போக்கில் இதன் பெயர் மருவி ஆடாதோடா என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் பெயர் மருவி ஆடாதோடை என பெயர் பெற்றுள்ளது.
இதன் மகத்துவம் தெரிந்தவர்கள் குறைவுதான். இதன் அனைத்து பாகங்களும், அற்புத மருத்துவ குணம் நிறைந்தது.
ஆடாத்தோடை அதிக அளவு கரியமுள்ள வாயுவை பிராண வாயுவை வெளியிடுகின்றது. இது அதிக அளவு ஆக்னீசனை வெளியிடுவதால், இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர்.
இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை கொண்டது. நம்மை அன்றாடம் விடாமல் துரத்துகின்ற சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும்.
எந்த வகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை எளிதில் வளரக்கூடிய தன்மை கொண்டது.
நெஞ்சு சளி
நெஞ்சு சளி, அதனுடன் வலி, உடலில் தசைப் பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள்.
இது சிறந்த நிவாரணியாக பயன்படுகின்றது.
நுரையீரல்
மனித உடலில், நுரையீரல் முக்கிய உறுப்பாகும். இது சுவாசக் காற்றை, வாங்கி அதிலுள்ள பிராண வாயுவை பிரித்து எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகின்றது.
நுரையீரல் நன்கு செயல்பட்டால்தான் ரத்தம் சுத்தமடையும். இதனால், நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய, சிறப்பு வாய்ந்த நுரையீரலை பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது.
இது நுரையீரல் காற்று சிற்ற அறைகளில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகின்றது.
குழந்தைகளின் ஆரோக்கியம்
குழந்தைகளுக்கு நெஞ்சு சளியால் ஏற்படும் இரைப்பை உடனே சரிசெய்ய ஆழத்தோட இலைகளை மையாக அரைத்து நெஞ்சில் தடவி வர நெஞ்சுச்சொளி உடனே கரைந்து சுவாசம் சீராகும்.
தூதுவளை இலை, ஆடாதோடை இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து காய வைத்து, பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் காலை மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.
சளி தொல்லை கிட்டவே நெருங்காது. நுரையீரல் பழம் பெரும்.
ரத்த சுத்தகரிப்பு
ரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடாதோடை க்கு உண்டு.
ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டான சளி, இருமல், இரைப்பு ஆகியவை நீங்கும்.
நெஞசுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் பார்த்துக் கொள்ளும்.
இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச் சளி, இருமல், குத்து இருமல், தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.
நெஞ்சுவலி
எதிர்பாராத விதமாக மார்பு பகுதியில் அடிபட்டு அந்த வலியால் வேதனை அடையும் நேரங்களில், ஒரு ஆடாதோடை இலைய இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட உடனடியாக வலி குறையும்.
இது ஒரு அரிய முதலுதவியாகும்.
ஜுரம், சளி, இருமல்
ஆடாத்தோட இலைகளை நன்கு அலசி நீரில் காய்ச்சி மூன்றில் ஒரு பங்காக நீர் வற்றும் வரை வைத்திருந்து பின்னர் தேனுடன் கலந்து பருகிவர, ஜுரம், சளி, இருமல், உடல் வலி மற்றும் ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் நீங்கும்.
இந்த பாதிப்புகள் தீரும் வரை தினமும் இந்த முறையில் இலைகளை நீரில் இட்டு காய்ச்சி பருகி வரலாம்.
எலும்புருக்கி நோய்
மனிதனை கொள்ளும் கொடிய வியாதியாக கருதப்படும் எலும்புருக்கி வியாதிக்கு, இது முதல் மருந்தாகும். முறையாக நாற்பத்தி எட்டு நாட்கள் பருகி வர கொடிய பாதிப்புகளை கொடுக்கும், டிபி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். காச நோய் முற்றிலும் விலகும்.
மேலும்
ஆடாதோடை இலைகளுடன், திப்பிலி, அதிமதுரம், ஏலக்காய் போன்ற மூலிகைகளை கலந்து பருகி வர நாள்பட்ட இருமல், இலைப்பு மற்றும் ஜுரம் போன்ற பாதிப்புகள் அகலும்.
ஆடாதோடை இலை சாற்றை தேனுடன் கலந்து பருகி வர ரத்தக் கொதிப்பு மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் விலகிவிடும்.
ஆடாத்தோட இலைகளை, அரைத்து பாதி எலுமிச்சை அளவு உட்கொண்டு பிறகு சுடுநீர் பருகிவர உடலின் உள்ளே உள்ள கட்டிகள், தோல் நமைச்சல், சொறி மற்றும் பூச்சிகள் கடிப்பதால் உண்டான விஷங்கள் விலகிவிடும்.
இது போல எண்ணற்ற நற்பலன்களை நமக்கு தரக்கூடிய இந்த ஆடாதோட , ஒரு அற்புத மூலிகை மட்டுமல்ல, மனித உடலுக்கு நீடித்த ஆயுள் கொடுக்கும் ஒரு காயகற்ப மூலிகையுமாகும்.
இதனையும் படிக்கலாமே
- பெருஞ்சீரகம் பயன்கள் | PerunJeeragam Uses(Opens in a new browser tab)
- திராட்சை ஏன் சாப்பிடவேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
- முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
- மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits(Opens in a new browser tab)
- நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)
- காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?(Opens in a new browser tab)
- தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா(Opens in a new browser tab)
3 Comments
Comments are closed.