உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tamil

உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tamil

கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே தாங்க முடியாத வெயிலால், எல்லோருக்குமே பெரும் அவஸ்தைதான்.

வெயிலால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு ஆற்றலை இழந்து உடல் அதிக வெப்பமடையும். இப்படி உடல் வெப்பம் அதிகமானால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

அதில் சிறுநீர் கழிக்கும் போது நீர் குத்தல், அல்சர் பிரச்சனை, தலை வலி, முகப்பரு இப்படி பலவற்றை சந்திக்கக்கூடும்.

உடல் சூடு குறைய சித்த மருத்துவம்

அதே போல் நாம் சாப்பிடு சில மருந்துகளும், நம் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். எனவே உடலை குளிர்ச்சிப்படுத்தும் மற்றும் உடலின் நீர்ச்சத்து அதிகரிக்கும் உணவுப் பொருட்களை அதிகம் உண்பது நல்லது.

அந்த வகையில் உடலை குளிர்ச்சியாக வைத்து ஒரு அற்புதமான வீட்டு வைத்தியம் ஒன்றைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

வெந்தயம்

உடல் வெப்பத்தை குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையான ஒன்று தான் வெந்தயம் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரவில் படுக்கும் பொழுது ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரையும் வெந்தயத்தையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

இப்படி வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிட்டாலே போதும் உடல் குளிர்ச்சி அடைந்து உடல் சூடு அடைவது, தடுக்கப்படும்.

மசூடு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

body heat reduce in tamil

ஊறவைத்த வெந்தயம் பயன்கள்

வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் மற்ற நன்மைகளைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவே கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆய்வுகளில் வெந்தயம் கொலஸ்டராலின் அளவை குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. மேலும், வெந்தயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்களான உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்ற செய்து குடல் புற்றுநோயிலிருந்து நம்மை விலகியிருக்கச் செய்யும்.

செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை நீங்குவதோடு, மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்றவைகளும், தடுக்கப்படும்.

அதுமட்டுமல்ல வெந்தயத்தில் உள்ள, பாலிஃபோனிக் குளோர்போனாய்டுகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரித்து சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும்.

மேலும் இதில் உள்ள பாலிஃபோனிக் உட்பொருட்கள் மது அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்படுவதை தடுக்கக்கூடியது.

இன்றைய காலத்தில் சந்திக்கும் ஒரு பிரச்சனைதான் ஆர்த்தடிஸ் எனும் எலும்பு மூட்டு வலி. இது, கடுமையான வலியுடன் வீக்கத்துடனும் காணப்படும்.

வெந்தயத்தில் உள்ள நோய் எதிர்ப்பு அலர்ஜி பண்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் வலியை குறைக்கக்கூடியது.

கோடை காலத்தில் கடைபிடிக்க வேண்டியது

பொதுவாக கோடை காலத்தில் நல்ல காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், காரமான உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பொழுது அது உடலின் மெட்டபாலிசத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி உடல் வெப்பத்தை மேலும் அதிகரிக்கும்.

எனவே, கோடையில் எப்போதும் அளவான காரம் கொண்ட உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும்.

மேலும் கோடையில் மற்ற காலங்களை வி , அதிக அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும்.

ஏனென்றால் சூரிய கதிர்கள் நம் சரும அதிக அளவில் படுவதால் வியர்வையின் மூலம் நம் உடலில் உள்ள நீர்ச்சத்துகள் குறைந்துவிடும்.

மேலும் நீர்ச்சத்து குறைவதால் உடலின் வெப்பநிலையும் அதிகரிக்கும். எனவே இக்காலத்தில் தண்ணீரை அதிக அளவில் குடித்து வந்தால் உடல் சூட்டை தணிக்க முடியும்.

உடல் உஷ்ணம் அறிகுறி

வைட்டமின் சி

முக்கியமாக, விட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்டர்ஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றை கோடை காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்கலாம்.

எனவே கோடைக்காலத்தில் vitamin C நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள் இதனால், உடல் சூடு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். பொதுவாக காலத்திற்கேற்ப சில மாற்றங்களை செய்து கொண்டாலே போதும். நோயில்லாமல் வாழ முடியும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning