இஞ்சி டீ நன்மைகள் | Ginger Tea Benefits in tamil
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள் இஞ்சி. இந்த இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பி காம்ப்ளக்ஸ், மற்றும் மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து, கால்சியம் போன்ற கனிம சத்துக்களும் பலமாக உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் நம் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் சத்துகளாகும்.
முக்கியமா குளிர்காலத்தில் தினமும் இஞ்சி எடுத்துக் கொள்ளும் பொழுது குளிர்காலத்தில் ஏற்படும் பல நோய்கள் நம்மை அண்டவே அண்டாது.
பொதுவா சமையலில் அதிகம் இஞ்சியை சேர்த்து வந்தாலும், இஞ்சியை டீ வடிவில் குடிக்கும் பொழுது நமக்கு பல நன்மைகள் கிடக்கிறது.
அந்த வகையில் குளிர்காலத்தில் தினமும் ஒருமுறை இஞ்சி டீ ஏன் கட்டாயம் குடிக்க வேண்டும்? இப்படி குடிப்பதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதைப் பற்றி மிகத் தெளிவாக இங்கே பார்ப்போம்.
இஞ்சி டீ தயாரிக்கும் முறை
இதற்கு தேவையான பொருட்கள் என்று பார்த்தால் ஒன்றரை டம்ளர் தண்ணீர், நசுக்கிய ஒரு சிறிய துண்டு இஞ்சி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி தேன் போன்றவை.
முதலில் இந்த தண்ணீரை அடுப்பில் வைத்து லேசாக கொதி வந்ததும் அதில் நசுக்கிய இஞ்சியை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்து இஞ்சியில் உள்ள சாரம் முழுவதும் அந்த தண்ணீரில் இறங்கியதும், அடுப்பிலிருந்து இறக்கி குடிக்கும் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
முக்கியமாக, நல்ல சூடாக இருக்கும் பொழுது எலுமிச்சை சாறு சேர்க்கக் கூடாது. காரணம் நல்ல சூடான நிலையில் சேர்த்தால் எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும்.
எனவே, வெதுவெதுப்பான நிலையில் சேர்க்க வேண்டும். அதே போன்று இஞ்சியின் தோலை நீக்கிய பிறகே பயன்படுத்த வேண்டும். இப்படி தினமும் ஒரு வேளை சாப்பிடலாம். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
இப்படி குளிர்காலத்தில் தினமும் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி
பொதுவா மழை மற்றும் குளிர்காலத்தில்தான் நோய்த்தொற்று அதிகரிக்கும். எனவே எல்லோருமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.
அந்த வகையில் இஞ்சி டீயில் இஞ்சி, எலுமிச்சை மற்றும் தேன் இந்த மூன்றுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
எனவே இந்த இஞ்சி டீயை தினமும் ஒருமுறை குடித்தால் எந்த நோயும் கிட்ட நெருங்காது.
சளி,இருமல்
குளிர்காலத்தில்தான் கப நோய்கள் அதிகரிக்கும். அதாவது, இருமல், சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற தொந்தரவு உள்ளவர்கள் தினமும் இஞ்சி டீ குடிப்பது அவசியம். உண்மையில் சாதாரண சளி, இருமல், வறட்டு இருமல், மற்றும் நுரையீரல் தொடர்பாக ஏற்படும் புற்றிற்கும் இந்த இஞ்சி டீ மிக நல்லது.
இந்த இஞ்சி டீ மார்பில் கட்டியிருக்கும் சளியை கரைக்கக்கூடியது. அதே போன்று ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு தரும் இந்த இஞ்சி டீ.
அஜீரண பிரச்சனை
குளிர்காலம் தீவிரமடையும் இந்த நேரத்தில் அஜீரண பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உணவுகளை ஜீரணிக்கும் சக்தி கொண்ட குடல் செயல்பாட்டில் மந்தம் ஏற்படும்.
எனவே ஜீரண உறுப்புகளை செயல்பட வைக்க இந்த இஞ்சி டீயை தினமும் குடித்து வருவது நல்லது.
குளிர்காலங்களில் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடு பொழுது செரிமானமாவதில் தாமதம் உண்டாகும்.
ஆனால் இந்த இஞ்சியை உணவில் சேர்க்கும் பொழுது இது கொழுப்பை கரைத்து வெளியேற்றுவதால் செரிமானம் வேகமாகிறது.
மலச்சிக்கல்
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த இஞ்சி டீயை குடித்து வந்தால் உடனே பலன் கிடைக்கும்.
அதுவும் காலையில் எழுந்தவுடன் இந்த இஞ்சி டீயை இளம் சூட்டில் அருந்தி வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் நீங்கி விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
இதய ஆரோக்கியம்
குளிர்காலத்தில் ரத்த நாளங்கள் குருவுவதால் இதயத்தின் வேலைப்பளு அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலில் ரத்த ஓட்டம் தடைப்படுகிறது.
அதே சமயம் இந்த ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள், இஞ்சி டீயில் இருப்பதால் ரத்த ஓட்டத்தை அதிகரித்து மற்ற சத்துக்களையும், ஆக்சிஜனையும் உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்ல உதவி செய்கிறது. மேலும் செல் வளர்ச்சியையும் தூண்டுகிறது.
முக்கியமாக இது கொழுப்புகளை ரத்தக் குழாய்களில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
உண்மையில் இதயத்தை பலப்படுத்தும் மருத்துவ குணம் இஞ்சி உண்டு என்பதால் சீன மருத்துவத்தில் இஞ்சியில் இருந்து எடுத்த ஒரு வித எண்ணெயை இதய நோய்களை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.
உடல் வலி
குளிர்காலத்தில் சில நோய்களின் தீவிரம் அதிகரிக்கும். குறிப்பா உடலில் வீக்கம் ஏற்படும் பகுதிகளான மூட்டு வலி, இடுப்பு வலி, ஸ்பான்டைலிடிஸ் ஆகியவற்றில், வலி, தீவிரமடையலாம் அந்த வகையில் இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் என்ற ஒரு பொருள் சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.
எனவே இந்த இஞ்சி டீயை தினமும் எடுத்துக் கொள்ளும் பொழுது எலும்பு சம்பந்தமான நோய்களான எலும்புப்புரை முடக்குவாதம், கீல்வாதம் ஆகியவற்றால் ஏற்படும் வலிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
தசை மற்றும் இதர பிடிப்புகளை தீர்க்கவும் செய்கிறது.
சர்க்கரை நோய்
இந்த இஞ்சி டீ சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட வேண்டிய பானம் ஆகும். உண்மையில் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க தவறினால் அதிக சர்க்கரை, குறைந்த சர்க்கரை என்று பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
எனவே இதனை கட்டுப்படுத்த தினமும், சூடான இஞ்சி டீயை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
புத்துணர்ச்சி
தொடர்ந்து நாள்பட்ட ஒற்றைத் தலை வலி, tensionஆல் வரக்கூடிய தலை வலி நீங்குவதற்கு இந்த இஞ்சி டீயை, தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் இந்த இஞ்சி டீ அருந்துவதால் மனஅழுத்தம் நீங்கி மூளையின் செயல்பாட்டில் ஒரு வித புத்துணர்ச்சி ஏற்படும்.
இஞ்சியில் உள்ள உயிர் செயலில் கலவைகள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் மூளையில் ஏற்படும் அழற்சியை தடுத்து நோய் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும்
எனவே, நீங்களும் இந்த குளிர்காலத்தில் தினமும் ஒருமுறை இஞ்சி டீ குடித்துப் பாருங்கள்.
இதை காலையில் மட்டும்தான் குடிக்க வேண்டுமா? என்றால் மாலை மற்றும் எந்த நேரத்திலும், தாராளமாக குடிக்கலாம்.
உண்மையில் காலை எழுந்ததும் காஃபி, டீ குடிப்பதற்கு பதிலாக இந்த இஞ்சி டீயை குடித்துப் பாருங்கள். எந்த ஒரு நோயும், கிட்ட நெருங்கவே நெருங்காது.
இதனையும் படிக்கலாமே
- அதிமதுரம் பயன்கள் | Athimathuram Uses in Tamil
- மூங்கில் அரிசி பயன்கள் | Bamboo Rice Health Benefits in Tamil
- ஓமம் மருத்துவ பயன்கள் | Omam Benefits in Tamil
- ஆப்பிள் பழத்தின் நன்மைகள் | Apple Benefits in Tamil
- பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் | How to Reduce Pitham in Tamil
- சப்ஜா விதை நன்மைகள் | Sabja Seeds Benefits in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
தினமும் கரும்பு ஜூஸ் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்