தேங்காய் பூ பயன்கள் | Coconut Flowers Benefits Tamil
தேங்காய் பூ தேங்காய் நம் எல்லாருக்கும் தெரிந்த ஒரு அற்புதமான உணவு. ஆனால் இந்த தேங்காய் பூ பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நன்கு முக்கிய தேங்காயை மண்ணில் புதைத்து வைத்து மூன்று நான்கு மாதங்கள் கழித்து பார்க்கும் போது தேங்காய் முளைவிட்டு வளர ஆரம்பித்திருக்கும். இந்த முளைவிட்ட தேங்காயின் உட்பகுதியில் இருக்கக்கூடிய கருவளர்ச்சிதான் தேங்காய் பூ.
தேங்காய் பூவை தேங்காய் சீம்பு தேங்காய்க்கரு, Coconut Apple, Sprouted Coconut என பல பெயர்கள் உள்ளன.
தேங்காயை விடவும் தேங்காய் பூவில் பல மடங்கு சத்துக்கள் அதிகம். அதிகப்படியான வைட்டமின் சி, வைட்டமின் பி1, பி3, பி5, பி6, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், அயன் என ஏராளமான சத்துக்கள் நிறைந்தது இந்த தேங்காய்ப்பூ.
அதிக சத்துக்கள் மட்டும் இல்லாமல் நம் உடலில் ஏற்படக்கூடிய தீராத நோய்களையும் எளிதில் குணமாக்கும் ஆற்றல் இந்த தேங்காய் பூக்கு உண்டு.

நோய் எதிர்ப்பு சக்தி
தேங்காய் பூவிலே பார்த்தீங்கன்னா, நோய் எதிர்ப்பு மண்டலம், வளமாக இருக்க தேவையான, வைட்டமின் சி, ஒமேகா மூன்று, ஒமேகா ஆறு கொழுப்பு அமிலம் அதிக அளவில் உள்ளது.
இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது. மேலும் இது ஒரு வைரஸ், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், அதிக அளவில் நிறைந்துள்ளது.
இதன் காரணமாக, பல்வேறு நோய் கிருமிகளிடமிருந்தும், வியாதிகளிடமிருந்தும், பாதுகாக்கக்கூடியது இந்த தேங்காய் பூ.
செரிமான கோளாறு
இந்த முளைவிட்ட தேங்காய் சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை வேண்டுமானாலும் சாப்பிடலாம். எளிதாக ஜீரணிக்கக்கூடியது. இதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் செரிமானம் சார்ந்த தொந்தரவுகளான, அஜீரணம், அசிடிட்டி, வயிற்றுப் புண் போன்ற பிரச்சனைகளையும் குணமாக்கும்.
இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து குடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளை எளிதில் வெளியேற்றும். இதன் மூலமாக மலச்சிக்கலும் நீங்கும்.
ரத்த சர்க்கரை
பொதுவாக தேங்காயில் இனிப்புச் சத்து உண்டு என்பதினால் சர்க்கரை நோயாளிகள் அதிகம் சேர்க்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இந்த முளைவிட்ட தேங்காய் பூ, இன்சுலினை தூண்டி இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி செய்யும்.
இதன் மூலமாக சர்க்கரை நோயாளிகள் எந்த பயமும் இல்லாமல் இந்த தேங்காய் பூவை சாப்பிடலாம். ரத்த சர்க்கரையின் அளவுகளும் சீராக இருக்கும்.
புற்றுநோய்
இதில் அதிகப்படியான ஊட்டச்சத்து எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்துள்ளது. இது புற்றுநோய் கட்டிகள் உருவாகறதுக்கு காரணமாக இருக்கக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல் என்னும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும்.
இதன் மூலமாக பல்வேறு விதமான புற்றுநோய் வராமலும் தடுக்கக்கூடியது தேங்காய் பூ.
தைராய்டு சுரப்பு
ஒரு சில பேருக்கு தைராய்டு ஹார்மோன் மிக அதிக அளவிலோ அல்லது குறைவான அளவிலோ சுரக்கும். இப்படி சீரற்று சுரக்கும் தைராய்டு ஹார்மோனை சீராக்கும் ஆற்றல் இந்த தேங்காய் பூக்கு உண்டு.
மேலும் தைராய்டு சுரப்பில் இருக்கக்கூடிய செல்களை சீர்படுத்த தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
இருதய ஆரோக்கியம்
பொதுவாக தேங்காயில saturated effect என்னும் கொலஸ்ட்ரால் அதிக அளவில் இருப்பதினால் இது LDL கொலஸ்ட்ராலை எளிதில் அதிகரிக்கும்.
ஆனால் முளைவிட்ட தேங்காய்ப்பூ LDL என்ன கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து HDL என்ன நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
இதன் மூலமாக கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக இருப்பதோடு இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமலும் பாதுகாக்கக்கூடியது இந்த தேங்காய்ப்பூ.
சிறுநீரக பிரச்சனை
தேங்காய்ப்பூ சாப்பிடும்போது அது உடலில் அமிலகார அளவு என்று சொல்லக்கூடிய PH அளவை சீராக வைக்க உதவி செய்யும்.
உடலின் அமிலத்தன்மை காரணமாக உண்டாகும் சிறுநீரகக் கற்கள் வராமலும் தடுக்கும். இது மட்டும் இல்லாமல் சிறுநீரகத் தொற்றுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படக் கூடியது இந்த தேங்காய்ப்பூ.
மாதவிடாய்க் கோளாறுகள்
பெண்களுக்கு ஏற்படக்கூடிய,முக்கியமான பிரச்சனைகள்ல ஒன்று கடுமையான மாதவிடாய் என்னும் இரத்தப்போக்கு கோளாறு.
தேங்காய் பூவில் இருக்கக்கூடிய சத்துக்கள் அதிக உதிரப்போக்கு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
இது மட்டும் இல்லாமல் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களை நடுநிலைப்படுத்தி ஒழுங்கற்ற மாதவிடாயை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் உள்ளது.
உடல் எடை குறைய
தேங்காயில்கலோரிகள் மற்றும் கொழுப்பு அதிகம் என்பதினால் , உடல் எடை அதிகமாக இருக்கிறவங்க, தேங்காயை தவிர்ப்பது உண்டு.
ஆனால் தேங்காய் பூவில் கலோரிகள் மிகவும் குறைவு. மாறாக உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்பை கரைக்கும். எனவே அதிக உடல் எடை இருப்பவர்கள் எந்தவித பயமும் இல்லாமல் இந்த தேங்காய் பூவை சாப்பிட்டு வரலாம்.
சரும ஆரோக்கியம்
தேங்காய் பூவில் சருமத்திற்கு தேவையான ஒமேகா மூன்று, ஒமேகா ஆறு போன்ற நல்ல கொழுப்பு அமிலங்கள் மிகுதியாக இருக்கிறது.
இதன் காரணமாக சருமம் பொலிவாக இருப்பதற்கு உதவி செய்யும். மேலும் சருமத்தில் ஏற்படக்கூடிய வெண்புள்ளிகள், பருக்கள், தேமல் போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கக்கூடியது இந்த தேங்காய்ப்பூ.
இதனையும் படிக்கலாமே
- வாந்தி நிற்க பாட்டி வைத்தியம் | How To Stop Vomiting in Tamil
- கோதுமை மருத்துவ பயன்கள் | Kothumai Benefits in Tamil
- கை கால் மூட்டு வலி நீங்க | Mootu Vali Maruthuvam in Tamil
- பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் | How to Reduce Pitham in Tamil
- முதுகு வலி குணமாக | Muthugu Vali Remedy in Tamil
- ஊமத்தங்காய் பயன்கள் | Umathai benefits in tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்.