வெண்ணெய் மருத்துவ குணங்கள் | Butter Benefits in Tamil

வெண்ணெய் மருத்துவ குணங்கள் | Butter Benefits in Tamil

உடல்நிலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், நோய்களினை விலக்கி வைக்கவும் சத்தான உணவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் அவசியம்.

அதற்கு நாம் சரியான உணவு முறைகளை தேர்ந்தெடுப்பது அவசியமான ஒன்று. அதில் வெண்ணெய் ஒரு பகுதியாகும். வெண்ணெய் நமது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதனை பற்றி பார்ப்போம்.

இதில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது. ஆனால் அளவாக எடுத்துக்கொள்ளும் போது வெண்ணெய் நமக்கு ஆரோக்கியத்தினை கொடுக்கும். இன்று வெண்ணையின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

வெண்ணையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

  • தண்ணீர் 15 .87 கிராம்
  • ஆற்றல் 717 கிலோ கலோரி
  • புரதம் 0.85 கிராம்
  • கார்போஹைட்ரேட் 0.06 கிராம்
  • கால்சியம் 24 மில்லி கிராம்
  • இரும்பு சத்து 0.02 மில்லி கிராம்
  • மெக்னீசியம் 2 மில்லி கிராம்
  • பாஸ்பரஸ் 24 மில்லி கிராம்
  • பொட்டாசியம் 24 மில்லி கிராம்
  • சோடியம் 643 மில்லி கிராம்
  • துத்தநாகம் 0.09 மில்லி கிராம்
  • தியாமின் 0.005 மில்லி கிராம்
  • நியாசின் 0.042 மில்லி கிராம்
  • வைட்டமின் பி6 0.003 மில்லி கிராம்
  • வைட்டமின் ஈ 2.32 மில்லி கிராம்

butter meaning in tamil

வெண்ணை என்றால் என்ன | What is Butter in Tamil ?

ஆரோக்கியமான வெண்ணெய் என்பது பாலினை நன்றாக காய வைத்து அந்த பால் மிதமான சூட்டில் இருக்கும் போது சிறிது பிரைமோரினை அதில் போட்டு மூடி வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு ஏழு முதல் எட்டு மணி நேரத்திற்கு பிறகு பால் தயிராக துவைந்து இருக்கும். துவைத்த தயிரினை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கடைய வேண்டும்.

அவ்வாறு கடையும் பொழுது வெண்ணையானது தயிரில் இருந்து பிரிந்து மேற்பரப்பில் வரும். அந்த வெண்ணெயினை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி

வெண்ணெய் ஒரு சிறந்த பூஞ்சை எதிர்ப்பான் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியாக்கள் நிறைந்தது. இந்த வெண்ணெயினை உணவுடன் சேர்த்து உட்கொண்டு வருவதன் மூலமாக நோய் தொற்றுகள் எளிதில் நம் உடலை அடையாது.

இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தினை சீராக செயல்படுவதற்கு உதவுகிறது.

சருமம்

இந்த வெண்ணையானது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. இதில் செலினியம், வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்து காணப்படுவதால் இது சருமத்தினை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

வெண்ணெய் மருத்துவ குணங்கள்

புற்றுநோய்

ஒரு ஆய்வு அறிக்கை ஒன்றில் வெண்ணையில் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே உணவில் அளவாக சேர்த்து வருவதன் மூலமாக உடலில் புற்றுநோய் தாக்கத்தினை குறைக்கலாம்.

மூட்டு வலி

நாள்பட்ட மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் வெண்ணை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் மூட்டுகளில் ஏற்படக்கூடிய உராய்வானது தடுக்கப்படுவதன் மூலமாக மூட்டு வலி ஏற்படாது.

ஆகவே இந்த வெண்ணெய் மூட்டு வலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

எவ்வளவு வெண்ணை சாப்பிடலாம் ?

தினசரி ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சாப்பிடுவது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, இருந்தாலும் என்னை எடுத்துக் கொள்வதற்கு முன்னதாக ஒரு உணவியல் நிபுணர் ஆலோசனை பெற்று சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஏனென்றால் அவர் உங்களது உடல் நலத்திற்கு ஏற்ப எந்த அளவு வெண்ணையினை தினசரி சேர்த்துக் கொள்ளலாம் என்ற விகிதத்தினை சரியாக குறிப்பிடுவார்.

Butter Benefits in Tamil

வெண்ணெய் தீமைகள் |  Side Effects of Butter in Tamil

எதுவுமே அளவாக உண்டு வந்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியும் உண்டு.

  • வெண்ணெயினை அதிகமாக சேர்த்து வருவதன் மூலமாக உடலில் உள்ள உறுப்புகளில் கொழுப்பு சேர வாய்ப்புகள் உள்ளது.
  • வெண்ணெயினை அதிகமாக சேர்த்து வருவதன் மூலமாக இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
  • வெண்ணெயினை அதிகமாக சேர்த்து வருவதன் மூலமாக உடல் எடை அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளது.
  • வெண்ணெயினை அதிகமாக சேர்த்து வருவதன் மூலமாக பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தில் Disclaimer  பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning