அம்மான் பச்சரிசி பயன்கள் | Amman Pacharisi in Tamil
இந்தியா, ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்க போன்ற நாடுகளில் பெரும்பாலும் அம்மான் பச்சரிசி காணப்படுகிறது.
பெயர் காரணம்
இதனுடைய விதைகள் வடிவத்திலும், சுவையிலும் குருணை அரிசி போன்று இருப்பதால் பச்சரிசி என்றும் தாய்ப்பாலினை அதிகப்படுத்துவதாழும் இது அம்மான் பச்சரிசி என்ற பெயர் பெற்றது என கூறப்படுகின்றது.
தாய்ப்பால் சுரப்பு
குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள் ஒரு சிலருக்கு குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும்.
தாய்மார்கள் இந்த அம்மான் பச்சரிசி பூக்களை பசும்பாலில் அரைத்து காலை வேளை பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பும் அதிகரிக்கும்.
வெள்ளைப்படுதல்
வெள்ளைபடுதல் பிரச்சனை உள்ளவர்கள் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து, மோரில் கலந்து காலை வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகும்.
நகச்சுத்தி
இந்த அம்மான் பச்சரிசி பாலை நகச்சுத்தி உள்ள இடத்தில் விட்டு வரவும். இதனை தினசரி நகச்சுத்தி சரியாகும் வரை செய்து வரவும்.
வித்தை காட்ட
இந்த அம்மான் பச்சரிசியை கொன்டு ஒரு விதமான வித்தை கூட செய்யலாம்.
அம்மன் பச்சரிசி இந்த பாலை வைத்து, ஒரு வெள்ளைகாகிதத்தில் படம் வரைய வேண்டும். இந்த படம் யார் கண்களுக்கும் தெரியாது.
ஆனால், இந்த படம் வரையப்பட்ட காகிதத்தினை நெருப்பிலிட்டு எரிக்கவும். அந்த சமயத்தில் நெருப்புடன் சேர்ந்து வரையப்பட்ட படம் கருப்பு நிறத்தில் தெரியும்.
இது ஒரு எளிய வித்தைதான். இதை அனைவரும் செய்து பார்க்கலாம்.
உடல் வலு பெற
அம்மான் பச்சரிசி மற்றும் தூதுவளை இவை இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து கூட்டு வைத்து அதோட தேங்காய் துருவல் மற்றும் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெரும்.
நரம்புகள் வலு வரும். சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில், இந்த அம்மான் பச்சரிசி பங்கு மிக முக்கியமானதாகும்.
அம்மான் பச்சரிசி இலை, மிளகு மூன்று, மற்றும் வேப்பிலை சிறிதளவு சேர்த்து அரைத்து அதிகாலை சாப்பிட்டு வந்தால் உடல் வலு பெரும்.
அம்மான் பச்சரிசி இலை, தூதுவளை இலை, இரண்டையும் சம அளவு கலந்து, துவையல் போல் அரைத்து சாப்பிட்டு வந்தால், உடல் வலு வரும்.
மரு குணமடைய
இந்த அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வரவும். இவ்வாறு செய்து வருவதன் மூலமாக மரு கூடிய விரைவில் சரி ஆகிவிடும். மரு இருந்ததிற்க்கான அடையாளம் கூட எதுவும் இருக்காது.
மருவானது உதிர்ந்துவிடும்.
இதனையும் படிக்கலாமே
- பெருஞ்சீரகம் பயன்கள் | PerunJeeragam Uses(Opens in a new browser tab)
- திராட்சை ஏன் சாப்பிடவேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
- முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
- மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits(Opens in a new browser tab)
- நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)
- காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?(Opens in a new browser tab)
- English blog
4 Comments
Comments are closed.