தும்பை இலை மருத்துவ பயன்கள் | Thuthumbai Ilai Uses In Tamil
அதிக அளவு மூலிகைகளில் மிகச்சிறந்த மூலிகை செடி என்று பார்க்கும் வகையில் மிகவும் முக்கயமானது தும்பை செடி.
வெள்ளை நிற பூக்களைக் கொண்டு பசுமை நிறத்தில் வாடாத இலைகளைக் கொண்டு சற்று குறுகிய வண்ணம் இருக்கும்.
தும்பை செடியின் பத்து பயன்களை பற்றி பார்ப்போம்.
ஜலதோஷம்
தும்பை இலைச்சாற்றுடன் சிறிது தேன் கலந்து தினமும் இருவேளை பருகி வர அடிக்கடி ஏற்படும் ஜலதோஷ பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
கொசுவை விரட்ட
தும்பை இலை மற்றும் வேப்பிலை இவை இரண்டையும் சேர்த்து, அனல் மூட்டினால், அதனால் வரும் புகையால் கொசுக்கள் வராமல் தடுக்கலாம்.
இந்தப் புகை, நாம் சுவாசிக்கும் போது, உடல் நலமாக இருக்கும்.
மாதவிலக்கு
தும்பை இலை காட்டாமணி இலை இவற்றை சரி விகிதத்தில் கலந்து அரைத்து, விரல் நுனி அளவு எடுத்து பாலில் கலந்து தினமும் அருந்தி வர பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிலக்கு பிரச்சனை குணமாகும்.
கருப்பை பிரச்சனை
தும்பை இலையை, ஆட்டுப்பாலில் இட்டு, காய்ச்சி அந்த பாலை தொடர்ந்து பருகி வர கருப்பை பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
மிக முக்கியமாக இந்த மருந்து எடுத்துக் கொள்ளும்போது நாம் அன்றாடம் சாப்பிடு உணவில் , உப்பு, புளி, காரம். கண்டிப்பாக சேர்க்கக் கூடாது.
மூலம்
தும்பை இலையுடன் துத்தியில சாறு எடுத்து பாலில் கலந்து அருந்தி வர உள் மூலம், வெளி மூலம். மூலம் உள்ளிட்ட அனைத்து வகை மூல வியாதிகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
குழந்தைகளின் ஆரோக்கியம்
தும்பை இலையுடன் ஓமம் செய்த அளவு சேர்த்து அல்லது சோமவள்ளி இலைகளை சேர்த்து குடித்தால் குழந்தைகளுக்கு சூட்டினால் வரக்கூடிய வயிற்றுப்போக்கு மாதம் மற்றும் வயிற்றுப் பொறுமை குணமாகும்.
தும்பை இலை மற்றும் பாசிப்பருப்புடன் கலந்து கொதிக்க வைத்து சாப்பாட்டில் பருப்பு போல மசித்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தொண்டை சல இன்னல்கள் குணமாகும்.
ஆறாத காயங்கள்
தும்பை இலைச் சாற்றை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி ஆறாத காயங்கள் மற்றும் புண்கள் மீது தடவி வந்தால் விரைவில் புண் ஆறிவிடும்.
கண் பார்வை
தும்பை இலை பாலில் கலந்து சூடாக்கி பருகி வர கண் பார்வை குறைபாடுகள் சரியாகும்.
தேள் கடி
தேள் கடித்தவர்களுக்கு தும்பை இலை சாற்றை நாலு துளி அளவு எடுத்து, தேனில் கலந்து தேள் கடித்த இடத்தில் தும்பை இலை, சாற்றால் தேய்த்து விட விஷம் குறைந்து விடும்.
இதனையும் படிக்கலாமே
முருகை மரத்தின் பயன்கள் | Moringa Tree Benefits(Opens in a new browser tab)
பெருஞ்சீரகம் பயன்கள் | PerunJeeragam Uses(Opens in a new browser tab)
மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்(Opens in a new browser tab)
பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil(Opens in a new browser tab)
மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits(Opens in a new browser tab)
உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil(Opens in a new browser tab)
தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா(Opens in a new browser tab)
காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?(Opens in a new browser tab)
நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)
அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
5 Comments
Comments are closed.