முல்லை பூ மருத்துவகுணம் | Mullai Poo Uses in Tamil

முல்லை பூ மருத்துவகுணம் | Mullai Poo Uses in Tamil

முல்லைப் பூ தலையில் சூட மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. முல்லைப் பூ மட்டுமல்லாமல், இதன் இலை, வேர் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.

மேலும், பொடுகை போக்கக்கூடியது, காய்ச்சலுக்கு மருந்தாக விளங்குகிறது,, வயிறு மற்றும் வாய்ப்புண்களை, குணமாக்க வல்லது.

பாத வெடிப்பு, சேற்று புண்களை சரி செய்யும் தன்மை உடையது முல்லை பூ. பல்வேறு நலன்களை உள்ளடக்கிய முல்லை மல்லி இனத்தை சார்ந்தது. மணத்தை தரக்கூடியது, தூக்கத்தை தூண்டக்கூடியது, வலி நிவாரணியாக விளங்குகிறது.

முல்லை பூ மருத்துவகுணம்

மனத்தெளிவு

முல்லை மலரை தலையில் சூடிக்கொண்டு அதன் மனத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி, மனத்தெளிவு உண்டாகும்.

கண் பார்வை

முல்லை பூவின் சாற்றினை எடுத்து வாரத்திற்கு மூன்று முறை 2 அல்லது 4 துளிகள் வீதம் கண்ணில் விட்டு வரக் கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து கண் பார்வை குறைவு குணமாகும்.

மாதவிடாய்

ஒரு கைப்பிடி அளவுள்ள முல்லை பூவை எடுத்துக் கொண்டு அதைத் தண்ணிர் விட்டுக் காய்ச்சி அது கொஞ்சம் வற்றியதும் 15 மில்லி அளவு அதை இரண்டு முறை ஒரு நாளுக்குக் குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

mullai poo images

சொறி, சிரங்கு

சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும், கை சரிந்து கொண்டிருப்பதே முழு நேரமாக இருக்கும்.

எனவே, முல்லைப் பூவை நன்றாக அரைத்து உடல் முழுவதும் தடவ வேண்டும். அரை மணி நேரத்திற்கு பின்பு குளிக்க வேண்டும். மூன்று நாட்கள் இப்படி செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.

காய்ச்சல்

முல்லை பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் நோய்களை போக்கும் தன்மை கொண்டது. விளங்குகிறது.

முல்லைச் செடியின் இலைகளை பயன்படுத்தி , காய்ச்சலை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

முல்லையில் சுமார் பதினைந்து எடுத்து அதனுடன் அரை தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்து வர காய்ச்சல் குறையும்.

mullai poo haram images

தலைமுடி

பூக்களை நீர் விடாமல் அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலப் பதத்தில் காய்ச்சவும். மனமுள்ள தைலமான இதை வடிகட்டி தலைக்குத் தடவி வர பொடுகு இல்லாமல் போகும். தலை ஏற்படும் அரிப்பு, முடி உதிர்வு போன்றவை மாறும்.

மேலும்

  • முல்லை பூவை நன்றாக அரைத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மார்பில் கட்டி வரத் தாய் பால் சுரப்பு குறையும்.
  • முல்லை பூவின் சாற்றினை எடுத்து அதை மூக்கில் 3 துளி பிழிந்து விடத் தலைவலி வேகமாகக் குறையும்.
  • வயிற்றுப்புண், வாய்ப்புண் குணப்படுத்தப்படுகிறது. வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றுகிறது. வயிற்றிலுள்ள பூச்சிக்களை வெளியேற்றும் அற்புத மூலிகை ஆகிறது.

இவ்வளவு மகத்துவம் கொண்ட முல்லையை பயன்படுத்துவோம். நோயின்றி வாழ்வோம்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்

 

 

Related Posts

18 Comments

  1. Pingback: sell weapons
  2. Pingback: login altogel
  3. Pingback: 789bet
  4. Pingback: Sevink Molen
  5. Pingback: weed in marseille
  6. Pingback: fox888
  7. Pingback: 789bet
  8. Pingback: go to website
  9. Pingback: Hotpot
  10. Pingback: read article
  11. Pingback: ufa789
  12. Pingback: ufabet789

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning