முள்ளங்கி பயன்கள் | Mullangi Benefits in Tamil

முள்ளங்கி பயன்கள் | Mullangi Benefits in Tamil

முள்ளங்கி பயன்கள் Mullangi Benefits in Tamil

நமது முன்னோர்கள் கூறியதாவது உணவே மருந்து, மருந்தே உணவு என்று கூறியுள்ளனர்.

அன்றாட வாழ்வில் நாம் தினசரி சாப்பிட கூடிய உணவுகளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன.

முள்ளங்கியில் உள்ள எண்ணற்ற மருத்துவ குணம் பற்றி பார்ப்போம். தவறாமல் முழுவதும் படியுங்கள்.

வாரத்தில் இரு முறையாவது முள்ளங்கி சாப்பிட்டு வருவதன் மூலமாக பல நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கலாம்.

இரத்த அழுத்தம்

கால்சியம் சத்து, கந்தகம், ஆகியவை முள்ளங்கியில் அதிகம் காணப்படுகின்றது. ரத்த அழுத்தத்தை குறைக்கும் பொட்டாசியம் சத்தானது முள்ளங்கியில் அதிகமாக இருக்கின்றது.

உடலில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவை சமநிலைப்படுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

முள்ளங்கி பயன்கள் Mullangi Benefits in Tamil

புற்றுநோய்

புற்றுநோயை எதிர்த்து போராட கூடிய பைட்டோகெமிக்கல் முள்ளங்கியில் இருக்கின்றது. இது டி என் ஏ பாதிப்பை தடுத்து புற்றுநோய் வராமல் தடுக்கின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி

முள்ளங்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அது நெஞ்சில் தேங்கியுள்ள சளியை முறித்து, உடனடி நிவாரணத்தை கொடுப்பதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றது.

முள்ளங்கி பயன்கள் Mullangi Benefits in Tamil

சர்க்கரை

முள்ளங்கியில் நார்ச்சத்தானது அதிக அளவிலும் மற்றும் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவான அளவிலும் இருக்க கூடிய காரணத்தினால் இருப்பதால் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவானது கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுகின்றது.

மலச்சிக்கல்

நார்ச்சத்து நிறைந்த உனவவான முள்ளங்கி உணவில் அதிகம் சேர்த்து வந்தால் அது செரிமான அமிலத்தைச் சுரந்து, நாம் சாப்பிடு உணவுகளை எளிதில் செரிமானம் அடைய செய்து மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கின்றது.

முள்ளங்கி சாற்றுடன் சிறிது தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால், மலச்சிக்கல் பிரச்சனை தீர்வாகிறது.

முள்ளங்கி பயன்கள் Mullangi Benefits in Tamil

சிறுநீரக கல்

முள்ளங்கி சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுப்பது மட்டுமின்றி, அதனைக் கரைக்கவும் உதவுகின்றது.
தினமும், ஐம்பது மில்லி முள்ளங்கிக் சாற்றுடன் நீர் கலந்து குடித்து வந்தால் கற்கள் கரைந்து சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

முள்ளங்கி பயன்கள் Mullangi Benefits in Tamil

எடை குறைய

இதில் கலோரிகள் குறைவாகவும், நார் சத்து அதிகமாகவும் இருக்கின்றது. எனவே, இதை அடிக்கடி உணவுடன் அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவாக குறையும்.

உடல் குளிர்ச்சி

உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் இயல்பு உடையது முள்ளங்கி. கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை குறைப்பதில் முள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கின்றது.

முள்ளங்கி பயன்கள் Mullangi Benefits in Tamil

மேலும்

முள்ளங்கி கீரையில் அதிக அளவில் கால்சியம் சத்து இருக்க கூடிய காரணத்தினால் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

முள்ளங்கியின் அணைத்து பகுதிகளுமே (கிழங்கு, இலை, விதை) உடலுக்கு பயனளிக்க கூடியது.

முள்ளங்கி சாரானது உடலில் உள்ள அணைத்து பகுதிகளுக்குமே சென்று மூளை முடுக்குகளில் இருக்க கூடிய அழுக்குகளை வெளியேற்றும்.

குறிப்பாக சிறுநீரகம், சிறுநீர்ப்பை, போன்றவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்சின்கள் வைரஸ்கள் போன்றவற்றை வெளியேற்ற உதவும்.

கல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்து நோய்கள் வராமல் தடுக்கும்.

முள்ளங்கி பயன்கள் Mullangi Benefits in Tamil

முள்ளங்கி ஜூஸ்

முள்ளங்கியை அரைத்து, அதனை எடுத்து குடிப்பது என்பது முடியாத ஒன்று. எனவே அரைத்து வடிகட்டி வைத்த முள்ளங்கி சாறினை கேரட் அல்லது ஆப்பிள் சாற்றுடன் சேர்த்து குடிக்கலாம்.

வெள்ளை முள்ளங்கி மட்டுமே, மருத்துவ குணம் வாய்ந்தது. சிவப்பு முள்ளங்கி, சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.

இதனையும் படிக்கலாமே

Related Posts

2 Comments

  1. Pingback: som777

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning