ஆப்பிள் பழத்தின் நன்மைகள் | Apple Benefits in Tamil
நாம் தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் போதும் மருத்துவ மனை செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்ற கருத்தினை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஏனென்றால் அந்த அளவிற்கு வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன.
இந்த சத்துக்கள் அனைத்தும் உடலை வலுவாக வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல் எந்தவித நோயையும் நமது உடலை தாக்காத வகையில் ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. அதனால் தான் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் செல்வதற்கு முன்னதாக அனைவரும் ஆப்பிள் வாங்கி செல்கின்றனர்.
மேலும் இந்த ஆப்பிள் உடலை மட்டும் இன்றி சருமத்தினையும் அழகாக வைத்துக் கொள்ள உதவி புரிகிறது.
ஆப்பிள் சாப்பிட பிடிக்காதவர்கள் ஆப்பிளை ஜூஸ் போன்று கூட குடிக்கலாம் நாம் எந்த அளவிற்கு ஆப்பிள் எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு உடலானது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
எடை குறைக்க
உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆப்பிள்ளை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. ஏனென்றால் இந்த ஆப்பிளில் உள்ள பயோ ஆக்டிவ் சேர்மங்கள் குடலில் நன்மை பயக்கக் கூடிய பாக்டீரியாவினை அதிகரிக்கிறது.
இந்த பாக்டீரியாக்கள் உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்க செய்து உடல் எடையினை குறைக்கின்றது. மேலும் ஒரு கப் அளவு ஆப்பிளில் 2.6 கிராம் அளவு நார்ச்சத்தானது அடங்கியுள்ளது.
இது செரிமானத்தினை மெதுவாக ஆக்குவதோடு மட்டும் இல்லாமல், உணவு உண்டார் போல் திருப்தியான ஒரு உணர்வை தருகிறது. ஆகவே பசி உணர்வினை குறைத்து அதிகம் சாப்பிடுவதனை தடுக்க முடியும். இதனால் எடை குறைக்க ஆப்பிள் முக்கிய பங்கு வகுக்கின்றது.
சர்க்கரை நோய்
வெயில் காலங்களில் உடல் சூட்டினை குறைப்பதற்காக நீர்ச்சத்துக் கொண்ட உணவுகள் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீர்ச்சத்து அதிகம் உள்ள பழத்தில் ஆப்பிளானது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்பிளில் நீர்ச்சத்து மட்டும் இன்றி மாவு சத்தும் அடங்கியுள்ளது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி சாப்பிடக்கூடிய உணவுக்கு ஏற்றவாறு சரிசம அளவில் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஆப்பிள் ஒன்று அல்லது இரண்டு கீற்றுகளாக சாப்பிட்டு வரலாம்.
சுமார் 38 ஆயிரம் பெண்களிடம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னராக நடத்தப்பட்ட ஒரு தொற்றுநோய் ஆய்வில் ஆப்பிள் பற்றி தெரிய வந்தது என்னவென்றால், ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு ஆப்பிள் வரை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோயானது வருவதற்கான வாய்ப்பானது 28 சதவீதமாக குறைகின்றது.
மேலும் கணையத்தில் உள்ள செல்கள் சேதம் அடைவதானது தடுக்கப்படுகின்றது.
கண்கள் ஆரோக்கியம்
ஆப்பிளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் குவர்செடின் போன்றவை பெரிதும் காணப்படுகின்றது. இது கண் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கின்றது. லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற கரோட்டினாய்டுகளின் விழித்திறை நிறத்தினை அரிய உதவுகிறது.
மேலும் இதில் உள்ள ஆன்ட்டி ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய கண்புரை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க கூடிய வைட்டமின் சி சத்தானது ஆப்பிளில் அதிகம் உள்ளது.
ஒரு நாளுக்கு நமது உடலுக்கு தேவைப்படுகின்ற 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளடக்கி உள்ளது. ஆகவே ஆப்பிளை தினசரி சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
அழகான சருமம்
இதில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் சருமத்தினை இளமையுடன் வைத்துக் கொள்வதற்கு உதவுகின்றது.
மேலும் ஆப்பிள் சாப்பிட்டு வருவதன் மூலமாக அதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆனது செல் அழிவினை தடுத்து சருமத்தினை பொலிவான தோற்றத்தோடு வைத்துக் கொள்ள பெரு உதவி புரிகிறது.
மேலும் முகச்சுருக்கத்தினை போக்குவதற்கு ஆப்பிள் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர் ஆப்பிள் என நன்றாக அரைத்து சில நாட்கள் உங்களது முகத்தில் தேய்த்து வருவதன் மூலமாக விரைவில் முகச்சுருக்கமானது நீங்கி சருமம் புது பொலிவுடன் தோற்றமளிக்கும்.
இதய ஆரோக்கியம்
ஆப்பிள் உள்ள பைபர் ரத்த அழுத்தத்தினை சீராக வைத்துக் கொள்வதற்கு பயன்படுகின்றது. மேலும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து உடல் நிலை பாதுகாக்கிறது.
ரத்த நாளங்களை தளர்த்துவதற்கு ஆப்பிள் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்தானது உதவுகின்றது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழத்தினை சாப்பிட்டு வந்தாலோ அல்லது ஜூஸ் போன்று குடித்து வந்தாலோ நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் இதில் உள்ள வைட்டமின் சி சத்தானது இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் உதவுகின்றது.
புற்றுநோய்
ஆப்பிள் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் பொழுது நுரையீரல் மற்றும் பெருங்குடல் மற்றும் குடல் பாதையில் ஏற்படக்கூடிய புற்று நோய்களின் அபாயத்தினை குறைக்கும்.
ஏனென்றால் ஆப்பில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஆரோக்கியமான செல்கள் மற்றும் டிஎன்ஏ வினை சேதப்படுத்தக்கூடிய ஃப்ரீரேடிக்கல்ஸ்களை முற்றிலும் அகழிக்கின்றன.
ஆறு வாரங்களுக்கு ஒரு முறை ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் 17 சதவீதம் புற்றுநோய் வராமல் உடலினை பாதுகாக்கலாம்.
கொலஸ்ட்ரால் நீங்க
உடலில் தேவையற்ற கெட்ட கொலஸ்ட்ரால்கள் சேருவதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது கடையில் விற்கக்கூடிய எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடுவதால் தான்.
இந்த ஆப்பிள் பழத்தில் பெக்டின் என சொல்லக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்தானது அடங்கியுள்ளது.
ஆகவே ஆப்பிளை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் ஆனது கரைந்து உடல் ஆரோக்கியமாகவும் தேவையற்ற கொலஸ்ட்ரால்கள் எதுவும் சேராமலும் உடல் கட்டுக்கோப்பாகவும் இருக்கும்.
ஆப்பிள் தீமைகள்
இந்த ஆப்பில் ஆனது சர்வதேச அளவில் அனைவராலும் அதிக அளவில் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. ஆகவே இதனுடைய விளைச்சல் மற்றும் அறுவடைக்காக அதிக அளவிலான பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட ஆப்பிள் பழத்தினை சாப்பிட்டு வரும் பொழுது உடலுக்கு எண்ணற்ற பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆப்பிள் விதைகளில் இயற்கையாகவே சைனைட் உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது செரிமான கோளாறுகள் ஏற்படும். ஒரே நேரத்தில் ஒரு கப் அளவு ஆப்பிள் விதையினை சாப்பிட்டு வந்தால் மரணம் ஏற்பட கூட வாய்ப்பு உள்ளது.
இதனையும் படிக்கலாமே
- மொச்சை கொட்டை பயன்கள் | Mochai Kottai Health Benefits
- புளி மருத்துவ பயன்கள் | Tamarind Medical Benefits
- பிரண்டை மருத்துவ குணங்கள் | Pirandai Benefits in Tamil
- நார்ச்சத்து மிகுந்த உணவுகள் | Fiber Rich Foods in Tamil
- ஆஸ்துமா முற்றிலும் குணமாக | Best Good for Wheezing in Tamil
- பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் | How to Reduce Pitham in Tamil
- கலாக்காய் பயன்கள் | Kalakai Benefits in Tamil
- உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்
13 Comments
Comments are closed.