சுண்டலின் நன்மைகள் | Benefits of Chives
சுண்டலில் பழுப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வகைகள் உள்ளன. இதில் அதிகளவில் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவது பழுப்பு நிற சுண்டல்.
பழுப்பு நிற சுண்டலில் கொழுப்பு குறைவு மற்றும் நார்ச்சத்துக்கள் , வைட்டமின்கள் ,கனிமச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
சுண்டலின் பயன்களை பற்றி கூறவேண்டும் என்றால் அடுக்கடுக்காக கூறிக்கொன்டே போகலாம்.
உடலின் எடையினை குறைக்க விரும்புபவர்களில் இருந்து ஜிம்மிற்கு சென்று உடலினை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் வரை அனைவரும் முதலில் சாப்பிட வேண்டிய ஒண்டு சுண்டல்தான்.
இவளவு சத்துக்களும் உடைய சுண்டலை பற்றி நம் அனைவருக்கும் தெரியாத நற்குணங்களை பற்றி இங்கே பார்ப்போம்.
உடலின் எடை குறைய
உடலின் எடையினை குறைக்க உணவில் அதிகளவு பைபர் சேர்த்துக்கொள்வது மிகவும் பயன் தரக்கூடிய ஒன்று.
அவ்வகையில் பழுப்பு நிற சுண்டலில் கரையக்கூடிய , கரையாத பைபர் இரண்டும் உள்ளது.
கரையக்கூடிய பைபர் நமது உடலில் என்ன செய்யும் என்றால் தேவையில்லாத கழிவுகள் அனைத்தையும் ஜெல்லாக வெளியேற்றுகிறது.
கரையாத பைபர் உடலில் என்ன செய்யும் என்றால் மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகள் அனைத்தையும் சரிசெய்கிறது.
பசி கட்டுக்குள் வர
சுண்டல் வயிறை மிக எளிதில் நிறைவை உணரச்செய்து பசியுணர்வினை கட்டுப்படுத்தப்படும்.
வேகவைக்க பட்ட சுண்டலுடன் தண்ணீர் குடிப்பதன மூலம் பசி கட்டுக்குள் வரும்.
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தி சுண்டலில் அதிகபடியான அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது.
இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும். பழுப்பு நிற சுண்டல் ஆரோக்கியத்தினை பாதுகாப்பதுடன் எளிதில் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதில் இருந்து நமது உடலை பாதுகாக்கிறது.
சுருக்கமாக கூறவேண்டும் எனில் பழுப்பு நிற சுண்டல் நமது உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக திகழ்கிறது.
இதய ஆரோக்கியம்
இதயத்தின் ஆரோக்கியத்தில் சுண்டலல் தனித்துவம் பெற்றுள்ளது.
இதில் சியானிடின், பைடோநியூட்ரியன்ட் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், ஆந்தோசயனின் மற்றும் டெலிபிண்டின் போன்ற பல சத்துக்கள் நிறைந்து உள்ளது.
பழுப்பு நிற சுண்டல் இரத்த நாளங்களை பாதுகாப்பதுடன் இரத்தத்தில் உள்ள விஷத்தன்மையினை அதிகரிக்காமல் பாதுகாக்கின்றது.
இதன் மூரமாக இதயத்தின் ஆரோக்கியம் உறுதிசெய்யபடுகிறது.பழுப்பு நிற சுண்டலில் மெக்னீசியம் கணிசமான அளவிலும் மற்றும் போலேட் உள்ளது.
போலேட் ஹோமோசைஸ்டீன் அளவினை குறைக்கிறது, இதன் மூலம் தமனிகளின் வீக்கம், பக்கவாதம்,மாரடைப்பு ஆகியவற்றினால் ஏற்படுகின்ற தமனிகளின் சுருக்கதினை குறைக்கின்றது.
கொழுப்பை குறைக்க
கொழுப்பை குறைக்க உதவுகிறது சுண்டல். இதில் உள்ள கரையக்கூடிய பைபர் நமது உடலில் உள்ள பித்த அமிலங்களின் அளவினை குறைத்து அவை உடலால் உறிஞ்சப்படுவதினை தடுக்கின்றது, இதன் மூலமாக உடலில் உள்ள கொழுப்பின் அளவானது கட்டுப்படுத்தப்படுகிறது.
தினசரி 3/4 கப் சுண்டல் சாப்பிடு வருவதன் மூலமாக உடலில் உள்ள மொத்த கொழுப்புகளின் கிளிசரைடுகளை குறைக்கின்றது.
சர்க்கரை நோய் குணமாக
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை பழுப்பு நிற சுண்டல் குறைக்கிறது.
சுண்டலில் உள்ள கரையக்கூடிய பைபர் இரத்தம் சர்க்கரை உறிஞ்சுவதினையும் மற்றும் வெளியிடுவதினையும் கட்டுப்படுத்துகின்றது.
அதுமட்டுல்லாமல் குறைவான கிளைசெமிக் அளவினை கொண்ட சுண்டல் நமது உடலில் மெதுவாக செரிமானம் அடையும் ஆகவே பசியின்மையினை கட்டுப்படுத்தும்.
இது சர்க்கரையின் அளவினை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். தினசரி 1/2 கப் சுண்டல் என தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் ஒரே வாரத்தில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு இயல்பு நிலைக்கு வரும்.
முடி வளர்ச்சி
முடி வளர்ச்சிக்கு பழுப்பு நிற சுண்டலில் வைட்டமின் பி6 மற்றும் ஜிங்க் சத்துக்கள் உள்ளன.
இரண்டு சத்துக்களும் முடியின் ஆரோக்கியத்தினை பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றது.
பழுப்பு நிற சுண்டல் உங்கள் முடியின் வலிமையை அதிகரித்து முடி நீளமாக வளர உதவுகின்றது.
முடியின் நிறத்தினை பாதுகாக்கிறது. பழுப்பு நிற சுண்டலில் உள்ள புரோட்டின் மற்றும் மக்னீசியம் முடியின் நிறத்தை பாதுகாக்கிறது அதாவது முடியின் நிறம் கபழுப்பு நிறமாக மாறாமல் தடுக்கின்றது.
5 Comments
Comments are closed.