வைட்டமின் பி12 சத்து அதிகம் உள்ள உணவுகள் | Vitamin B12 Rich Foods in Tamil
உடல் ஆரோக்கியமாக இருக்க அனைத்து வைட்டமின்களுமே மிக முக்கியம்.
ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நன்மைகளை உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கிறது. அதே சமயம் இன்றைய, முறையற்ற உணவு முறையால் அனைத்து வைட்டமின் சத்துக்களும் நமக்கு கிடைத்து விடுகிறதா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
காரணம் நம்மில் சில பேர் சரிவிகித உணவுகளை சாப்பிடுகிறோமா? என்பது சந்தேகம்தான். அந்த வகையில் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரக்கூடிய வைட்டமின் பி12 சத்து பற்றிதான் இங்கே பார்க்கப் போகிறோம்.
இரண்டு வகை வைட்டமின்கள்
பொதுவாக வைட்டமின்கள் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நீரில் கரையக்கூடியவை. மற்றொன்று, கொழுப்பில் கரையக்கூடியவை.
இதில் வைட்டமிகள், A, D, E, K ஆகியவை, கொழுப்பில் கரையக்கூடியவை. வைட்டமின் B மற்றும் C ரெண்டும், நீரில் கரையக்கூடியவை. மேலும், இந்தவைட்டமி B ல் நான்கு வகைகள் உள்ளன.
இவற்றில் மிக முக்கியமான ஒன்று சயனோ கோபால மீன் என்று அழைக்கப்படும் வைட்டமின் பி12. இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் என்பதால் தேவைக்கு அதிகமாக கிடைத்தாலு, உடலில் தங்காமல் சிறுநீர் மூலமாகவோ வியர்வை மூலமாகவோ எளிதாக வெளியேறிவிடும்.
அதாவது வைட்டமின் களை பொறுத்தவரையில் நமது உடலில் குறைந்தாலும் இருந்தாலும் நல்லதல்ல. முக்கியமாக கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் கள் உடலில் தங்கினால் அவை பல்வேறு உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.
ஆனால், வைட்டமின் B 12ஐ பொறுத்தவரையில் எ ந்த பிரச்சனையும் இல்லை இது, நீரில் கரையக்கூடிய வைட்டமின் என்பதால் தேவைக்கு அதிகமாக கிடைத்தாலும் உடலில் தங்காமல் சிறுநீர் மூலமாகவோ, வியர்வை மூலமாகவோ எளிதாக வெளியேறிவிடும்.
வைட்டமின் பி 12 சத்து ஏன் மிக முக்கியம்?
நம் உடலின் ரத்த உற்பத்திக்கும், மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கும் வைட்டமின் பி 12 மிக மிக அவசியம்.
அதாவது ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய, இரும்பு சத்து எப்படி முக்கியமோ அதே போன்று, இந்த வைட்டமின் B12 சத்து முக்கியம்.
சொல்லப்போனால் நமது உடலில் ஹீமோகுளோபின் குறைவதற்கு வைட்டமின் B12 குறைபாடும் மிக முக்கிய காரணம்.
முக்கியமாக நம் உடலால் தானாகவே வைட்டமின் சத்துக்களை தயார் செய்ய முடியாது. சாப்பிடும் உணவுகள் மூலமே வைட்டமின் சத்துக்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதே போன்று இது, இதயத்திற்கு வலு சேர்ப்பதற்கும், நரம்பு செல்கள் ஆரோக்கியமாக வைத்திருக்கும் உதவுகிறது.
மேலும் நம் உடலின் செல்களில் இருக்கும் டி என் ஏ க்கள் வேலை செய்வதற்கும், ரத்தத்தில் ஆக்ஸிஜனை கொண்டு செல்வதற்கும் வைட்டமின் B2 சத்து முக்கியம்.
வைட்டமின் பி 12 குறைபாட்டின் அறிகுறி
இவர்களுக்கு எந்த வேலையிலும் சரியாக கவனம் செலுத்த முடியாது. சின்னதாக ஒரு வேலை செய்தால் கூட உடல் சோர்வு ஏற்படும்.
அதே போன்று கொஞ்ச தூரம் நடந்தாலே கை, கால் மூட்டுகளில், வலி ஏற்படும். முக்கியமாக கை, கால்களில், ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.
அடிக்கடி ஓய்வெடுக்க தூண்டும். மேலும் வாய்ப்புண் மற்றும், நாக்கு வெந்து, சிவப்பாதல், தோல் தொடர்பான பிரச்சனைகள் காதுகளில், சத்தம் வருதல், வெளிரிய சருமம் போன்றவை இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
யாருக்கெல்லாம் வைட்டமின் பி12 பற்றாக்குறை வரும்
இதே போன்று, யாருக்கெல்லாம் வைட்டமின் B12 குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று பார்த்தால் சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுகின்றவர்களுக்கு, மது அருந்துபவர்களுக்கு, எடை குறைப்புக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் வாயுக்கோளாறு, அடிக்கடி மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கு மற்றும் அதிகமாக விரதம் இருப்பவர்களுக்கு, பாலூட்டும் பெண்களுக்கு இந்த குறைபாடு ஏற்படலாம்.
அதிகமாகும் பொழுது அனீமியா எனப்படும், ரத்த சோகை, ஞாபக மறதி, போன்ற பாதிப்புகளும்
உண்டாகலாம்.
வைட்டமின் பி12 உள்ள உணவுகள்
உண்மையில் இந்த சத்தானது சைவ உணவை காட்டிலும் அசைவ உணவுகளிலே அதிகம் உள்ளது. சைவம் மட்டும் சாப்பிடுகிறவர்கள் இப்பொழுது பார்க்கப்போகும் உணவுகளை எடுத்துக் கொண்டால், ஓரளவுக்கு இந்த சக்தி பெற முடியும்.
காளான்
காளானில், பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் இருப்பதோடு வைட்டமின் பி12 சத்தும் இருப்பதால் இந்த குறைபாடு இருந்தால் காளானை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.
சோயா பால்
பாலில் கால்சியத்திற்கு அடுத்து வைட்டமின் பி12 சத்துதான் அதிகம். இதே போன்று சோயாப்பாலில் கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின் பி12 அதிகம். எனவே,வைட்டமின் பி12 குறைபாடு இருப்பவர்கள் சோயா பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பாதாம் பால்
பாதாம் பாலிலும் கலோரிகள் குறைவு மற்றும் வலிமையான வைட்டமின் பி12 சத்துக்கள் அதிகம்.
அசைவ உணவு
அசைவ உணவை எடுத்துக் கொண்டால் முட்டையில் ஏராளமான சத்துக்களோடு வைட்டமின் பி 12 சத்தும் நிறைந்துள்ளது.
அதிலும், முட்டையின் மஞ்சள் கருவில் வெள்ளைப் பகுதியை விட அதிகம் உள்ளது. இதே போன்று மத்தி மீன், சாலமன், காளான் கெளுத்தி, சூறை போன்ற மீன்களில் அதிக அளவு வைட்டமின் பி 12 சத்து நிறைந்துள்ளது.
இந்த மீன்கள் அனைத்தும் நம் உடலுக்கு ஆரோக்கியமானவை. இவைகள் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் என்ற இதய ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கியமான சத்தும் நிறைந்துள்ளது.
அதே சமயம் இந்த மீன்களை அதிக நேரம் வறுக்காமல் குழம்பு போன்று செய்து சாப்பிட்டால்தான் இந்த சத்துக்கள் முழுவதும் கிடைக்கும்.
வைட்டமின் பி12 அதிகம் உள்ள மற்றொரு கடல் உணவு நண்டாகும். நண்டில் குறைந்த கொழுப்பு சத்துகள் புரதம், மற்றும் ஜிங்க் போன்றவை நிறைந்துள்ளது.
அசைவ உணவான நண்டில்,ஃபோலேட்கள், இரும்பு சத்து மற்றும் செலினியம் என்ற ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. மேலும், இதில் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலமும் அதிகமாக உள்ளது. இது உடலில், நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை நீக்கக்கூடியது.
மேலும்
எனவே, வைட்டமின் பி 12 குறைபாடு உள்ளவர்கள், இந்த உணவுகளை சாப்பிட்டால் நல்ல பலனை பெற முடியும். மேலும், இந்த உணவுகள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதோடு இரும்பு சத்தையும் அதிகரிக்கிறது.
இதனால் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. முக்கியமாக மூளை மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
இந்த வைட்டமின் பி12, சைவ உணவை காட்டிலும் அசைவ உணவுகளில்தான் அதிகம் உள்ளது. வைட்டமின் பி12 சத்துக்கள் நிறைந்த மாத்திரைகளும் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையுடன் வாங்கி சாப்பிடலாம் ஊசியாகவும் போட்டுக் கொள்ளலாம்.
இதனையும் படிக்கலாமே
- அதிமதுரம் பயன்கள் | Athimathuram Uses in Tamil
- ஓமம் மருத்துவ பயன்கள் | Omam Benefits in Tamil
- கசகசா பயன்கள் | Kasa Kasa Health Benefits in Tamil
- பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா | Dandruff Treatment in Tamil
- அவல் நன்மைகள் | Aval Benefits in Tamil
- உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா
- பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
6 Comments
Comments are closed.