காளான் பயன்கள் | Mushroom Benefits in Tamil
காளான் பெரும்பாலானோரின் விருப்பமான உணவாக மாறி வரக்கூடிய ஒன்று. சுவை மிகுந்ததாகவும், சத்துக்கள் அதிகம் கொண்டதாக இருப்பதோடு ஏராளமான மருத்துவ பண்புகளையும் கொண்டது இந்த காளான்.
காளான்களில் பல வகைககள் இருக்கிறது. அவற்றில் சில விஷத்தன்மை கொண்ட காளான்களும் இருக்கின்றன.
சாப்பிட உகந்த வகை காளான்களில் மற்ற உணவுகளில் இல்லாத பல அரிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
mushroom tamil
காளானில் உள்ள சத்துக்கள்
- காப்பர்
- வைட்டமின் கே
- வைட்டமின் சி
- வைட்டமின் டி
- வைட்டமின் பி
- மினரல்சத்துக்கள்
- பொட்டாசியம்
- சோடியம்
- ஆன்ட்டி ஆக்சைடுகள்
இவ்வளவு சத்துக்கள் கொண்ட இந்தக் காளானை சாப்பிடும்போது நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் மற்றும் குணமாகக்கூடிய நோய்கள் என்ன என்பதனை பற்றி பார்ப்போம்.
இருதய ஆரோக்கியம்
அவ்வப்போது உணவுகளில் காளான் சேர்த்து சாப்பிட்டு வர இருதயம் ஆரோக்கியமாக இருக்கும். காளானில் குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிகளவு பொட்டாசியம் சத்துக்கள் அடங்கி இருக்கிறது.
ரத்த அழுத்தம், மற்றும் ரத்தத்தில் இருக்கக்கூடிய கொழுப்பைக் கட்டுப்படுத்தி, இருதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கும். அதுமட்டுமில்லாமல் இருதய சுவர்களுக்கு நல்ல வலு கொடுக்கக்கூடியது இந்த காளான்.
எனவே பலவீனமான இருதயம் உடையவர்கள் மற்றும் இருதயம் சம்பந்தமான பிரச்சனையில இருப்பவர்கள் காளான் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
ரத்த சுத்திகரிப்பு
ரத்தத்தை சுத்தமாக்கக் கூடியது இந்தக் காளான். காளானில் உள்ள lentysine என்னும் வேதிப்பொருள்கள் உடலில் கலந்துள்ள நச்சுப் பொருட்கள், அதாவது toxinல வந்து வெளியேற்றும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதன் மூலமாக, உடல் புத்துணர்ச்சி பெறும்.
வளரும் குழந்தைகள்
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இந்தக் காளான். நூறு கிராம் காளானில் 35 சதவீதம் புரதம் அடங்கி இருக்கிறது.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது இந்த காளான்.
ஆகவே வளரும் குழந்தைகளுக்கு காளானை உணவாக கொடுத்து வருவது மிகவும் நல்லது. அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
உடல் நலக்குறைவு
நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக உடல் எடையை இழந்தவர்கள் உடலைத் தேற்றுவதற்கு இந்தக் காளான் மிகவும் உதவியா இருக்கும். எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது இந்த காளான்.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வர விரைவில் இளைத்த உடல் தேறும்.
கொலஸ்ட்ரால்
கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கக்கூடியது காளான். அதிகப்படியான புரோட்டின் குறைந்த அளவு கார்போஹைடிரேட் அதிக அளவு பைபர் மற்றும் கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடிய ஒரு சில வகை என்சைம்களும் அடங்கி உள்ளது.
இவை இரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். எனவே அதிக கொழுப்பு மற்றும் ரத்தக்குழாயில் அடைப்பு போன்ற பிரச்சனையினால் அவதிப்படுவபவர்கள்
காளானை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
கொலஸ்ட்ரால் அளவுகளும் சீராகும். அதோடு இருதய அடைப்பும் நீங்கும்.
ரத்த சோகை
ரத்த சோகையினால், அவதிப்படுவபவர்களுக்கு நல்லது இந்த காளான். பொதுவாக ரத்த சோகையி இருப்பவர்கள் உடல் சோர்வு, தலை வலி, ஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சனையினால் அவதிப்படுவார்கள்.
ரத்தசோகைக்கு அடிப்படை காரணமாக இருப்பது, இரும்புச்சத்து குறைபாடு. இந்தக் காளானில், அதிக அளவு இரும்புச் சத்து இருக்கிறது.
காளானை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும்போது நம் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைத்துவிடும்.
இதன் மூலமாக ரத்த உற்பத்தியும் அதிகரிக்கும். ரத்த சோகை பிரச்சனையினால் அவதிப்படுவபவர்கள் இந்தக் காளானை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது இந்தக் காளான். காளானில் கொழுப்பு இல்லை, கார்போஹைட்ரேட்டும் இல்லை.
இதில் அதிக அளவு புரோட்டின், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கி இருக்கிறது.
இதைவிட அதில் நிறைய தண்ணீர் மற்றும் பைபர் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட இயற்கையாகவே காளான் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடியது.
சர்க்கரை நோயினால் அவதிப்படுறவங்கள் இந்தக் காளானை சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். அது மட்டும் இல்லாமல் நாளடைவில் சர்க்கரை நோயும் குணமாகும்.
mushroom benefits in tamil
இதனையும் படிக்கலாமே
- ஜாதிக்காய் பொடி பயன்கள் | Jathikai Benefits in Tamil Language(Opens in a new browser tab)
- ஆமணக்கு எண்ணெய் பயன்கள் | Amanakku Oil Uses in Tamil(Opens in a new browser tab)
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
- கம்பு பயன்கள் | Kambu Benefits in Tamil(Opens in a new browser tab)
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil(Opens in a new browser tab)
- பனங்கற்கண்டு நன்மைகள் | Panakarkandu Uses in Tamil(Opens in a new browser tab)
- நாயுருவி பயன்கள் | Nayuruvi Plant Uses in Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்.
disadvantages of eating mushroom
9 Comments
Comments are closed.