புளிச்ச கீரை பயன்கள் | Pulicha Keerai Benefits in Tamil

புளிச்ச கீரை பயன்கள் | Pulicha Keerai Benefits in Tamil

புளிச்ச கீரையில் உள்ள சத்துக்கள்

  • ஈரம் – 86.4கி
  • புரதம் – 1.7கி
  • கொலுப்பு – 1.1கி
  • தாது உப்புகள் – 0.9கி
  • சர்க்கரை சத்து – 9.9கி
  • சக்தி – 56KCAL
  • சுண்ணாம்பு சத்து – 172 மி.கி
  • பாஸ்வரம் – 40 மி. கி
  • இரும்பு – 5.0மி.கி
  • மாவுப்பொருள் – 2.98UG
  • தையமின் – 0.07 மி.கி
  • ரிபோஃபிளேவின் – 0.39கி
  • நியாசின் – 1.1மி.கி
  • வைட்டமின் சி – 20 மி.கி

gongura leaves in tamil

காய்கறி, பழத்தினை அதிகம் சாப்பிடுவது போலவே கீரைகளையும், அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர சொல்லி உள்ளனர் இயற்கை வழி மருத்துவ சிகிச்சை நிபுணர்கள்.

நாம் எத்தனையோ வகையான கீரைகளை உண்ணுகின்றோம். அதில் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு கீரைதான் புளிச்ச கீரை.

இந்த புளிச்சைக் கீரையை சாப்பிடுவதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன? என்பதனை பற்றி தெளிவாக இங்கு நாம் பார்ப்போம்.

புளிச்சக்கீரை பயன்கள்

புற்றுநோய்

இந்த புற்று நோயானது மனித குலத்தினையே பயமுறுத்திக் கொண்டு வருகின்றது.

இக்காலகட்டத்தில் புற்றுநோய் என்பது, உடலில் செல்களில் ஏற்படக்கூடிய, மாற்றத்தினால் உண்டாகிறது.

இந்த புற்றுநோயானது உடலில் உள்ள, பல்வேறு பாகங்களை பாதிக்கிறது. புளிச்ச கீரையினை அதிக அளவில் சாப்பிட்டு வருவதன் மூலமாக செல்கள் அனைத்தும் நன்கு வலுப்பெற்று புற்றுநோய் விளைவிக்கக்கூடிய செல்களின் வளர்ச்சியினை தடுக்கிறது.

இதனால் புற்றுநோய் நமக்கு உண்டாவதற்கான வாய்ப்பு குறைகின்றது.

குடல் புண்

அலுவலகத்தில் பணிபுரிபவர்களும் கல்லூரிகளுக்கு செல்பவர்களும் காலை வேளைகளில் அவசரம் அவசரமாக செல்வதால் காலை உணவினை தவிர்க்கின்றனர்.

இதனால் ஒரு சிலர் நேரம் கடந்து உணவினை சாப்பிடுகின்றனர். அது மட்டும் இல்லாமல் அதிகம் காரம் நிறைந்த சாப்பிடுகின்றனர். இவர்களுக்கு வயிற்றின் குடற்பகுதிகளில் புண்கள் உண்டாகின்றது.

இந்த புண்கள் உண்ட உணவு செரிமானம் செய்வதில் பிரச்சனையினை உண்டாக்குகின்றது.

ஆகவே, உங்களுக்கு பிடித்த வகையில் புளிச்சகீரையினை சமையல் செய்து, சாப்பிட்டு வருவதன் மூலமாக, குடல் புண்கள் குணமாகும்.

pulicha keerai benefits

மாதவிடாய்

இந்த மாதவிடாய் நிகழ்வு என்பது இயற்கையாக ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வு. ஆனால் ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் நாட்கள் தள்ளிப் போகுதல், அடிவயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

இத்தகைய காலத்தில் புளிச்ச கீரையினை உணவில் பெண்கள் அதிக அளவில் சாப்பிட்டு வருவதன் மூலமாக மாதவிடாய் பிரச்சனைகள் குணமாகும்.

தோல் வியாதி

தோல் வியாதிகளுக்கு இந்த புளச்சிக்கீரையானது ஒரு அருமருந்தாக உள்ளது. இந்த புளிச்ச கீரையினை மை போன்று, நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, இது போன்ற ஒரு சில தோல் வியாதிகள் இருக்கும் இடங்களில் தடை மூலமாக இந்த பிரச்சனைகள் சரியாகும்.

மேலும் இதனை நன்கு பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதன் மூலமாக தலைமுடி, தோல் போன்றவற்றின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவுகிறது.

pulicha keerai in tamil

ரத்த சோகை

உடலில் ஓடுகின்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியானது குறைவதன் மூலமாக ரத்த சோகையானது ஏற்படுகின்றது

இந்த புளிச்ச கீரையில்வைட்டமின் சக்தியானது அதிக அளவில் நிரம்பி உள்ளது. ஆகவே, இது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை ஏற்படாமல் உடலினை பாதுகாக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த புளிச்ச கீரையில் நோய் எதிர்ப்பு சக்தியானது இயற்கையிலேயே அதிக அளவில் உள்ளது. இந்த புளிச்ச கீரையினை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக ரத்தத்தில் பரவக்கூடிய நோய்க்கிருமிகளை முற்றிலும் அழித்து நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்கின்றது.

இது மட்டும் இல்லாமல் பல்வேறு தொற்று கிருமிகளிடம் இருந்தும் நமது உடலினை பாதுகாக்கக்கூடிய ஒரு கவசமாக இது விளங்குகிறது.

ரத்த அழுத்தம்

வயது ஆக ஆக ரத்த அழுத்ததினை சீராக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இந்த புளிச்ச கீரையினை சாப்பிட்டுவதன் மூலமாக, அவர்களுடைய ரத்த அழுத்தமானது, சீராக இருக்கும்.

மேலும் ரத்த அழுத்தமானது அதிகமாக வரும் பொழுது இதய நோய் பக்கவாதம் இது போன்ற, ஒரு சில நோய்கள் ஏற்படாமலும் தடுக்க கூடிய, ஆற்றல் இந்த புளிச்ச கீரைக்கு உள்ளது.

pulicha keerai image

கொலஸ்ட்ரால்

இந்த கொலஸ்ட்ரால் என்பது என்னவென்றால் உடலில் இருக்கக்கூடிய, கேடு விளைவிக்கக் கூடிய கொழுப்புகள் ரத்தத்தில் படிந்துள்ளது தான்.

இந்த புளிச்ச கீரையானது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அழிக்கக்கூடிய சக்தி கொண்டது.

எனவே, இந்த புளிச் கீரையினை, வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வருவதன் மூலமாக ரத்தத்தில் கரைந்துள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையினை அதிகரிக்காமலும் பாதுகாக்கிறது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.

 

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning