பிரண்டை மருத்துவ குணங்கள் | Pirandai Benefits in Tamil
தமிழ் மொழியினை வளர்த்த சித்தர்கள் தான், சித்த மருத்துவ முறையையும் உருவாக்கினார். நமது நாட்டில் இயற்கையில் விளைகின்ற பல்வேறு மூலிகைகள் குறித்து சித்தர்கள் ஆராய்ச்சி செத்துள்ளனர்.
ஆகவே சித்தர்கள் ஒவ்வொரு மூலிகைக்கும் அதற்குண்டான மருத்துவ குணங்களையும் கண்டறிந்து எழுதி வைத்துள்ளனர்.
அந்த வகையில் சித்தர்களால் மிகவும் போற்றப்பட்ட ஒரு மூலிகை தான் பிரண்டை.
பிரண்டையை சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.
சிறிது நேரம் ஒதுக்கி தெரிந்து கொள்ளுங்கள் அதற்க்கு பின்னர் நீங்கள் பிரண்டையை தேட தொடங்கி விடுவீர்கள் என்பது நிச்சயம்.
சுறுசுறுப்பு
பிரண்டை தண்டுகளை நன்கு சாப்பிடு போது, அது உடலுக்கு சிறந்த பழத்தை கொடுக்கின்றது.
பிரண்டையில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல இருக்கின்றன.
இதை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நல்ல உற்சாகத்தையும், சுறுசுறுப்பு தன்மையையும் கொடுக்கின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி
பிரண்டை காரச்சத்து அதிகம் நிறைந்த ஒன்று. எனவே இதில் உள்ள காரசத்தானது நமது ரத்தத்தில் கலந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றது.
பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற ஒரு சில கிருமிகளால் ஏற்பட கூடிய நோய், ஜுரம் போன்றவையும் ஏற்படாமல் தடுக்க கூடிய தன்மை பிரண்டைக்கு உண்டு.
பற்கள் உறுதி
பல்லுக்கு உறுதி அளிக்கின்றது. இனிப்பு அதிகம் உள்ள பொருட்கள உண்பதாலும், உடலில் ஏற்படும் சத்து குறைபாட்டாலும் பற்களில் சொத்தை ஏற்படுதல், பற்களின் வேர்கள் வழுவிழப்பது, ஈறுகளில் ரத்தம் வழிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
பிரண்டை அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு பற்கள் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
வாயு பிரட்சனை
இன்று பலரும் சரியான உணவின்மை காரணமாக வாயுத் தொல்லைக்கு ஆளாகிறார்கள்.
வயிற்றில் வாயு கோளாறு ஏற்பட்டு அவதி படுபவர்கள் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால், வாயுத் தொல்லை, அஜீரணக் கோளாறுகள் போன்றவை நீங்கும்.
குடலில் தங்கிய அழுக்குகள் மற்றும் நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துகின்றது.
எலும்பு ஆரோக்கியம்
பிரண்டையின் சிறப்பு என்னவென்றால் எலும்பு தொடர்பான பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணமாக இருப்பது தான் மிக முக்கியமான காரணம்.
எலும்பு தேய்மானம் தொடர்பான தொந்தரவு உள்ளவர்கள் பிரண்டை ரசம் வைத்து சாப்பிட்டு வருவது எலும்புகளின் ஆரோக்கியதிற்க்கு மிகவும் நல்லது.
எலும்பு முறிவின் காரணமாக அவதி படுபவர்கள் பிரண்டையை எடுத்து அதனை வாரத்தில் ஒரு முறையாவது துவையலாக செய்தோ அல்லது சட்னியாகவோ சாப்பிட்டு வந்தால் உடைந்த எலும்புகள் வேகமாக கூடும்.
கொழுப்பினை குறைக்க
பிரண்டை உடலில் தங்கும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது.
பிரண்டையை பக்குவப்படுத்தி சாப்பிடுவதன் மூலமாக இதில் உள்ள அணைத்து சத்துக்களும் ரத்தத்தில் கலந்து நரம்புகளில் இருக்க கூடிய கொழுப்புகளினை கரைக்கிறது. மேலும் அடைப்புகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கின்றது.
இதனால் இதயத்திற்கு நன்கு ரத்தம்சீராக செல்லும் ஆகவே இதய நலனை பாதுகாக்கின்றது.
சர்க்கரை நோய்
நீரிழிவு மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த இயற்கை உணவுகளில் ஒன்றாக பிரண்டை இருக்கின்றது.
இதில் நிறைந்திருக்கும் காரத்தன்மை உடலில் ஓடும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அதிகரிக்காமல் தடுக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் இழக்கும் உடல் பலத்தை மீண்டும் தருகின்றது.
மூலம்
ஆசன வாயில் உள்ள சதையிலும், ஆசன வாய்க்குள்ளும் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்புதான் மூலம்.
மூலம் பாதிப்பின் காரணமாக அவதிப்படுபவர்கள் தினசரி சிறிது பிரண்டை துண்டினை எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வருவதன் மூலமாக மூலம் மிக விரைவில் குணமாக தொடங்கும்.
உடல் வலி
மிக முக்கியமாக பிரண்டை அனைத்து விதமான வழிகளையும் நீக்குகின்றது. அது மூட்டு வலியாக இருந்தாலும் சரி, இடுப்பு வலியாக இருந்தாலும் சரி.
எனவே வலிகள் நீங்க பிரண்டை துவையல் செய்துமூன்று வாரம் தொடர்ந்து சாப்பிடவும்.
அவ்வாறு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அணைத்து வலிகளும் குணமாகும்.
பிரண்டை கிடைக்காதவர்கள் கவலைப்பட தேவையில்லை. உங்கள் ஊரில் உள்ள அணைத்து நாட்டு மருந்து கடைகளிழும் பொடியாக கிடைக்கின்றது.வாங்கிக் கொள்ளுங்கள்.
இதனையும் படிக்கலாமே
- உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா(Opens in a new browser tab)
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
- முட்டை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா(Opens in a new browser tab)
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)
- அழுகண்ணி மூலிகை | Alukanni Mooligai(Opens in a new browser tab)
- ஓரிதழ் தாமரை பயன்கள் | Orithal Thamarai Side Effects(Opens in a new browser tab)
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
தயாவது செய்து எங்கள் வலைதளத்தின் பக்கத்தினை படிக்கவும்.
20 Comments
Comments are closed.