பாரிஜாதம் மருத்துவ பயன்கள் | Parijatham Palnt in Tamil
பாரிஜாதம் பூவினை தேவலோக மலர் என்று அழைப்பர். மேலும் இதற்கு இரவு மல்லி, பவளமல்லி என வேறு பெயர்களும் உள்ளது.
இந்த பூவானது சிறிய வெள்ளை நிற இதழ்களும், ஆரஞ்சு நிற காம்புகளும் கொண்டிருக்கும். இந்த பாரிஜாத பூவானது பூஜைக்கு மட்டுமானது இல்லை. இதில் பல்வேறு உடலுக்கு நன்மைகள் தரக்கூடிய மருத்துவ பயன்கள் உள்ளன.
பாரிஜாத பூ மட்டுமில்லாமல் பாரிஜாதம் மரமும் இலையும் நமக்கு எண்ணற்ற மருத்துவ பயன்களை தருவதாக மருத்துவ டிக்சா பவ்சார் கூறியுள்ளார்.
இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்பு, நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்பு ஆகியவை உள்ளன. அது மட்டும் இல்லாமல் பல்வேறு நோய்களை குணமாக்க கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது.
மேலும் நம் அனைவருக்கும் அறிந்த தேசிய கீதத்தினை பாடிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் கூட பாரிஜாதம் மலர்களைப் பற்றி வர்ணித்துள்ளார்.
பொதுவாக இந்த பாரிஜாத மலரானது இரவில் பூக்கக்கூடிய மல்லிகை என்று அழைக்கப்படுகின்றது.
வரட்டு இருமல்
ஒரு சிலருக்கு நீங்காத வறட்டு இருமல் பிரச்சனைகள் இருக்கும். இவர்கள் பாரிஜாதம் மர இலையினை நன்றாக அம்மியில் போட்டு அரைத்து, சாறு பிழிந்து அந்த சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக வறட்டு இருமலுக்கு தீர்வு கிடைக்கும்.
மூட்டு வலி
மூட்டு வலியினால் அவதிப்படுபவர்கள் பாரிஜாதம் மரத்தின் பட்டை மற்றும் இலை மற்றும் பூ ஆகியவற்றை சம அளவில் 5 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை 200 மில்லி தண்ணீரில் சேர்த்து டிக்காஷன் போன்று தயாரித்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் மூன்று முறை குடித்து வருவதன் மூலமாக மூட்டு வலியில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.
படபடப்பு குணமாக
படபடப்பானது உடல் ரீதியான பிரச்சினை மட்டும் இல்லை. மனரீதியான ஒரு பிரச்சனை என்றும் கூட கூறலாம். இந்த பாரிஜாத மலரானது மனரீதியான பாதிப்புகளை சரி செய்யவும் பயன்படுகின்றது.
அரோமாதெரபி என்னும் நறுமண மூலிகை எண்ணெய் சிகிச்சை முறையில் பாரிஜாத பூவின் எண்ணெயும் பயன்படுகிறது. மன அழுத்தம் மற்றும் மன பதற்றத்தினை குறைப்பதற்கு இந்த சிகிச்சை செய்யப்படுகின்றது.
இந்தப் பூவின் வாசமானது மூளையில் செராட்டோனின் நன்றாக சுரக்க வழிபடுகிறது இதனால் பதற்றம் குறைந்து மனம் அமைதி பெறும்.
அலர்ஜியை சரி செய்ய
பாரிஜாதம் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆனது அலர்ஜியை சரி செய்கிறது. பாரிஜாத இல்லையை நீர் ஆவியில் நன்றாக வேக வைத்து எண்ணெய் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது.
இந்த எண்ணெய் அலர்ஜி இருக்கக்கூடிய இடங்களில் தடவி வருவதன் மூலமாக நல்ல பலன் கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
இந்த பாரிஜாத இலையில் இருக்கக்கூடிய எத்தனால் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்கு உதவுகின்றது.
பவளமல்லி என்று அழைக்கப்படும் பாரிஜாதத்தில் 20 அல்லது 25 இலைகள் மற்றும் மலர்களை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை சரி பாதி அளவு வரும் வரை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி, மூன்றாகப் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிரிக்கப்பட்ட மூன்று பகுதி என்னையும் மூன்று வேலைகளும் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு இரண்டு மாதங்கள் பின்பற்ற வேண்டும்.
சர்க்கரை நோய்
பாரிஜாத செடியின் பல்வேறு பகுதிகள் ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் விகிதத்தினை சராசரியாக வைத்துக் கொள்வதற்கு உதவுகின்றது.
பாரிஜாத பூவின் கரைசல் ஆனது சர்க்கரை நோயினை தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.
ஆரோக்கியமான தலைமுடி
ஒரு சிலருக்கு தலை முடியானது அதிக அளவில் உதிரும் தலைமுடி உதிர்வதை கட்டுப்படுத்துவதற்கு பவளமல்லி மலர்கள் உதவுகின்றது.
மேலும் தலையில் உள்ள பேன் பொடுகு போன்றவற்றை போக்கவும் உதவுகின்றது அது மட்டும் இல்லாமல் இளநரை வழுக்கை இது தொடர்பான பிரச்சனைகளுக்கு இது சிறந்த தீர்வினை தருகிறது.
இதனையும் படிக்கலாமே
- சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம் | Kidney Stone Treatment in Tamil
- ஆளி விதை பயன்கள் | Ali Vithai Benefits in Tamil
- தைராய்டு குணமாக எளிய வழிகள் | Thyroid Symptoms in Tamil
- ஊமத்தங்காய் பயன்கள் | Umathai benefits in tamil
- நார்ச்சத்து மிகுந்த உணவுகள் | Fiber Rich Foods in Tamil
- பூங்கார் அரிசி பயன்கள் | Poongar Rice Benefits in Tamil
- மைதா மாவு தீமைகள் | Maida Side Effects in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
7 Comments
Comments are closed.