நீர்முள்ளி விதை பயன்கள் | Neermulli Vidhai Powder Benefits in Tamil
இந்த நீர் முள்ளி விதையில் பல விதமான பயன்கள் உள்ளது.
ஒரு நீர் நிறைந்த டம்ளரில் சிறிது நீர் முள்ளி விதைய போட்டு விட்டு அதில் ஒரு நீர்முள்ளி விதைய மட்டும் எடுக்கச் சொன்னால் எடுக்க முடியாது.
ஏனென்றால் இந்த நீர்முள்ளி விதை நீர் சேர்ந்த உடனே கொழகொழப்பாகிவிடும். இந்த நீர்முள்ளி விதையை, ஈரப்பதம் இல்லாத மிக்ஸியில் பொடி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், ஒன்றாக சேர்ந்து கொழகொழப்பாகிவிடும்.
உடல் பலம்
இந்த நீர்முள்ளி விதை ஆண்களுக்கு அபார சக்தியை கொடுக்கக்கூடியது. நீர்முள்ளி விதைப்பொடி. நெரிஞ்சில் விதைப்பொடி, வெள்ளரி விதைப்பொடி. இந்த மூன்றையும் சம அளவு எடுத்து கசாயம் போல் சாப்பிட்டு வந்தால் கல்லடைப்பு நீங்கும், சிறுநீரகம் வலுப்படும். உடல் வலுப்படும். விந்து கட்டும்.
அதுமட்டுமல்லாமல் உடலில் உள்ள கெட்ட நீர்கள் வெளியேறி உடல் வளம் பெறும்.
நீர்முள்ளி விதை ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
மூட்டு வலி
வாதத் தன்மையால் தோன்றும், மூட்டு வலியை சரி செய்து, மூட்டுகளுக்கு வலுவைக் கொடுக்கக் கூடியது.
சிறுநீரகம்
இந்த நீர்முள்ளி விதை உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. உடல் சூட்டினால் ஏற்படும் மேக நோய்கள், நீர் சுருக்கு, நீர்க்கடுப்பு மற்றும் நீர் எரிச்சல் போன்ற சிறுநீரக தொற்று நோய்களை சரி செய்கிறது.
மேலும், சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, சிறுநீரகத்தை வலுப்படுத்தும் சக்தி இந்த நீர்முள்ளி விதைக்கு உண்டு.
சிறுநீரகக் கோளாறை, சரி செய்து சிறுநீரகத்தை வலுப்படுத்தும். கல்லடைப்பை சரி செய்யும்.
சர்க்கரை
சர்க்கரை நோயின் அளவை, கட்டுப்படுத்தும் சக்தியும், இந்த நீர்முள்ளி விதைக்கு உண்டு. உடலுக்கு பலத்தை அழிக்கும் மருந்துகளிலும், தாய்ப்பாலை அதிகரிக்கும் மருந்துகளிலும் இந்த நீர்முள்ளி விதை பயன்படுகிறது.
நீர்முள்ளி குடிநீர்
நீர்முள்ளி நெருஞ்சில், சுரைக்கொடி, வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், சோம்பு, கடுக்காய்த்தூள், நெல்லிக்காய், தாந்தரிக்காய், இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் குடிநீர் நீர்முள்ளி குடிநீர் எனப்படும்.
இந்த நீர்முள்ளி குடிநீர், உடலுக்கு வளத்தை அளிக்கும் மற்றும் பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாகவும் கொடுக்கப்படுகிறது.
இந்த நீர்மூழ்கி குடிநீர் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நீர்முள்ளி துணை கொண்டு மணலை கயிராக திரிக்க முடியும். இத்தகைய சக்தி வாய்ந்தநீர்முள்ளி உடல் உஷ்ணத்தைக் குறைத்து விந்தை கட்டும். மேலும், ஆண்மையை அதிகரிக்கும். உடலை வலுப்படுத்தும்.
இதனையும் படிக்கலாமே
- முருகை மரத்தின் பயன்கள் | Moringa Tree Benefits
- தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா
- மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits
- நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?
- முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
5 Comments
Comments are closed.