கத்திரிக்காய் சாப்பிடுவார்களா நீங்கள் கட்டாயம் படியுங்கள்…..
கத்திரிக்காய யாரெல்லாம் சாப்பிடலாம்? யார் எல்லாம் சாப்பிட கூடாது? அதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படுகிறது என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
பொதுவாக சின்ன பசங்க மட்டும் இல்ல பெரியவங்களுக்குமே சில பேருக்கு கத்தரிக்காய் பிடிக்காது. ஆனால் அதில் நிறைய சத்துக்கள் இருக்கிறது.
கத்திரிக்காய் ஊதா, பச்சை, ஹேபரேட் என மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள்
- வைடமின் பி 1
- வைட்டமின் பி 2
- வைட்டமின் ஏ
- வைட்டமின் சி
- நார்ச்சத்து
கத்திரிக்காய் பயன்கள்
கத்திரிக்காய் அதிகமாக உணவில் சேர்த்து வரும் பொழுது இதய தசைகள் வலுப்பெற்று, இரத்த ஓட்டமானது இதயத்திற்கு சீராக செல்கிறது.
எனவே இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
அதிகமாக தண்ணீர் குடிக்காமல் இருக்கிறது. உப்பு சம்பந்தமான உணவு பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுகிறது.
இந்த சிறுநீரக கற்களை சரிசெய்ய கத்திரிக்காய் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கலாம்.
கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது, அதில் உள்ள நார்சத்து உடலுக்கு கிடைக்கும். இதனால் செரிமான கோளாறுகள் சரி செய்யப்பட்டு மலச்சிக்கல் குணமாகும்.
இதில் உள்ள நீர் சத்தானது உடல் சூட்டைத் தணிக்கின்றது.
மேலும் மூலம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது.
உடலில் இரும்புச்சத்து என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அளவுக்கு அதிகமாக உடலில் இரும்புச்சத்து இருந்தால் தான் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கத்தரிக்காய் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும் பொழுது நமது உடலில் அளவுக்கு அதிகமாக இருக்க கூடிய இரும்புசத்தின் அளவை சரிசெய்கின்றது.
கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
எனவே கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் சாப்பிட்டு வரும்பொழுது உடல் எடையானது குறைக்கப்படுகிறது.
இதில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
கத்தரிக்காய் உணவில் சேர்த்து வரும் பொழுது நுரையீரல் ஆனது சுத்தம் ஆக்கப்பட்டு சுவாச பிரச்சனைகள் சரி செய்யப்படுகிறது.
கத்திரிக்காயில் உள்ள பைடோநியூட்ரியன்ஸ் மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது.
இதன் மூலம் நல்ல நினைவாற்றலை பெறலாம்.
கத்திரிக்காயில் உள்ள வைடமன் சி உடலில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது.
எனவே கிருமிகள் மூலம் ஏற்படும் நோய் தொற்றுகள் போன்றவற்றை தவிர்க்கலாம்.
இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து உடலை பாதுகாக்கிறது.
கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அது தலைக்கு ஈரப்பதத்தை தருகிறது.
எனவே தலை முடி உதிர்வு, தலைமுடி வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
கனிமச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், வைடமன்கள் போன்றவை அதிக அளவு நிறைந்துள்ளதனால் கத்தரிக்காய் சாப்பிட்டு வருவதன் மூலம் சருமத்தை இளமையோடு வைக்கலாம்.
இது சருமத்தில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை சரி செய்து சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
கத்தரிக்காய் இலும் நிகோடின் உள்ளது. ஆனால் இது புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பயன்படுகிறது.
கத்தரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
மேலும் இது உடல் சோர்வையும் நீக்குகிறது. இதில் உள்ள லூட்டின் போன்ற அன்டிஆக்ஸடன்ட்கள் கண் பார்வை திறனை மேம்படுத்துகிறது.
தீமைகள்
இதுபோன்று எண்ணற்ற நன்மைகள் கத்திரிக்காயில் இருந்தாலும், ஒரு சில பக்க விளைவுகளும் இதில் உள்ளது.
உடலில் சொறி, சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்திரிக்காய் உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இது உடலுக்கு சூடு தரும் காய் என்பதால் புண்கள் மீது அரிப்பை ஏற்படுத்தும்.
எனவே புண்கள் ஆற நீண்ட நாட்கள் ஆகும்.
கத்திரிக்காயில் சோழன் என்று வேதிப்பொருள் அதிக அளவு உள்ளது.
எனவே கத்திரிக்காயை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ளும் பொழுது தொண்டை பகுதியில் வீக்கம், குமட்டல், தோலில் தடிப்பு, அரிப்பு போன்றவையும் ஏற்படலாம்.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் கத்திரிக்காயை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொண்டால் அது அதிக உதிரப்போக்கு ஏற்படுத்தும்.
கருவுற்று இருக்கும் ஆரம்ப காலத்தில் பெண்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கத்தரிக்காய்க்கு கரு சிதைவை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
கத்திரிக்காயை உணவில் அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது அது வயிற்றில் வாயு தன்மையை ஏற்படுத்தும்.
மேலும் செரிமான பிரச்சனைகள் போன்ற கோளாறுகளையும் ஏற்படுத்தலாம்.
இதனால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
முத்தின கத்திரிக்காயை உணவில் சேர்த்து சமைக்கும் பொழுது உடலில் அரிப்பு, புண், சிரங்கு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
சர்க்கரை நோயாளிகள் உடலில் அதிக இரத்த அழுத்தம் கொண்டவர்கள் கத்திரிக்காய் உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு பல நன்மைகள் கத்திரிக்காயில் இருந்தாலும், அவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது உடலுக்கு சில கேடுகளும் விளைவிக்கும். எனவே அளவோடு எடுத்துக் கொண்டு பயன் பெறுவோம்.
இதனையும் படிக்கலாமே
Milagu Benefits in tamil(Opens in a new browser tab)
சுண்டைக்காய் பற்றி இது வரை அறியாத மறுத்துவ பயன்களின் பட்டியல்(Opens in a new browser tab)
நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)
திராட்சை ஏன் சாப்பிடவேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்(Opens in a new browser tab)
கிராம்பு பயன்கள் | Kirambu Benefits in Tamil(Opens in a new browser tab)
English Overview
Here We have brinjal benefits in tamil.It is all so called கத்திரிக்காய் or கத்திரிக்காய் பயன்கள் or கத்திரிக்காய் மருத்துவகுணங்கள் or கத்திரிக்காய் நன்மைகள் or kathirikaior brinjal benefits in tamil or kathirikai payangal in tamil or brinjal tamil or kathirikai uses in tamil or kathirikai nanmaigal in tamil or kathirikai Maruthvagunam or Brinjal Medical benefits in tamil
5 Comments
Comments are closed.