காலையில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | தயாரிக்கும் முறை

காலையில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | தயாரிக்கும் முறை

காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் சீரகத் தண்ணீர் குடிப்பதை சிலர் தினசரி பழக்கமாக வைத்திருக்கிறார்கள். சீரகம் நம்முடைய சமையலில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொதுவான மசாலாப் பொருள்.

சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது கொதிக்க வைத்தோ குடிப்பதை தான் நாம்  பொதுவாக சீரகத் தண்ணீர் என்று சொல்கிறோம். இதை குடிப்பதால் செரிமானம் நன்றாகும், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று பலர் கூறுகின்றனர்.

ஆனால் இதில் உண்மையில் என்ன பயன்கள் இருக்கலாம்? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? சீரகத் தண்ணீரை எப்படி தயாரிப்பது?என்பதனைப பற்றி இங்கு விரிவாக பார்ப்போம்.

சீரகத் தண்ணீரால் கிடைக்கக்கூடிய நன்மைகள்

1. செரிமானத்திற்கு உதவலாம்

சீரகம் பாரம்பரியமாக செரிமானத்துடன் தொடர்புடைய உணவுப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு சிலருக்கு சாப்பிட்ட பின்பு  ஏற்படும் வயிற்று உப்புசம், வயிற்று அசௌகரியம்  போன்ற சிரமம் ஏற்படும் பொழுது  சீரகம் உதவியாக இருக்கலாம். அதனால் சீரகத் தண்ணீர் சிலருக்கு லேசான பானமாக இருக்கக்கூடும்.

ஆனால் அடிக்கடி அஜீரணம், வயிற்றுவலி அல்லது வேறு செரிமானப் பிரச்சனைகள் ஏதேனும்  இருந்தால், சீரகத் தண்ணீரை மட்டும் குடித்தால் சரியாகும் என கருதாமல்   அதற்கான காரணத்தை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

சீரகம் பாரம்பரியமாக உணவு மற்றும் செரிமானத்துடன் தொடர்புடையதாக பயன்படுத்தப்படுகிறது.
சீரகம் பாரம்பரியமாக உணவு மற்றும் செரிமானத்துடன் தொடர்புடையதாக பயன்படுத்தப்படுகிறது.

2. ஆன்டி-ஆக்ஸிடன்ட் சேர்மங்கள் உள்ளன

சீரகத்தில் சில இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சேர்மங்கள் உள்ளன.

இந்த சேர்மங்கள் உடலில் ஏற்படக்கூடிய  ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்கொள்ளும் செயல்பாடுகளுடன் தொடர்புடையவை. ஆகவே  சீரகத்தை உணவின் ஒரு பகுதியாக அளவாக சேர்த்துக்கொள்வதே  ஒரு நல்ல உணவுப் பழக்கம்.

3. ரத்தச் சர்க்கரை தொடர்பாக ஆய்வுகள் உள்ளன

சீரகத்தில் உள்ள  ஒரு சில சேர்மங்கள் ரத்தச் சர்க்கரை மற்றும் உடலில் குளுக்கோஸ் பயன்படுத்தப்படும் விதம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், இதை வைத்து சீரகத் தண்ணீர் சர்க்கரைய கட்டுப்படுத்தும்  என்று சொல்லி விட முடியாது.

சர்க்கரை நோய்க்கான  மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவர் பரிந்துரைத்த சிகிச்சையை தொடர்ந்து பின்பற்றுவதே நல்லது.

காலையில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்,

4. இரும்புச்சத்து கிடைக்கும் 

சீரகத்தில் இரும்புச்சத்து உள்ளது. நம்முடைய உடலில் ஹீமோகுளோபின் உருவாவதற்கு இரும்புச்சத்து  மிக முக்கியமான ஒன்று.

அதனால் உணவில் சீரகத்தை சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறிதளவு இரும்புச்சத்தானது நமது உடலிற்க்கு  கிடைக்கலாம்.

ஆனால் ஒருவருக்கு ரத்த சோகை இருந்தால் சீரகத் தண்ணீர் மட்டும் குடித்தால் அந்த பிரச்சனை சரியாகிவிடும் என்று நினைக்கக்கூடாது.

தேவையான பரிசோதனைகளை செய்து, மருத்துவர் கூறும் சிகிச்சையைப் பின்பற்றுவது முக்கியம்.

Click To Buy 

5. இதய ஆரோக்கியம் 

சீரகத்தில் காணப்படும் சில இயற்கையான  சேர்மங்கள் மற்றும் அவற்றின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சீரகம் மற்றும் கொழுப்பு, கொலஸ்ட்ரால் போன்ற சில உடல்நல அளவுகளுக்கு இடையிலான தொடர்பும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சீரகத் தண்ணீர் இதய நோயை குணப்படுத்தும் என்று கூறுவதற்கு போதுமான ஆதாரம் இல்லை. இதய நோய் அல்லது கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நிறுத்திவிட்டு சீரகத் தண்ணீரை மட்டும் பயன்படுத்தக்கூடாது.

சீரகத் தண்ணீரை எப்படி தயாரிப்பது?

சீரகத் தண்ணீரை வீட்டிலேயே மிகவும் எளிதான முறையில்  தயாரிக்கலாம்.

முறை 1: ஊறவைத்து தயாரிப்பது

இரவு தூங்க சொல்லும் முன்னரே ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு  சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊறவைக்கலாம்.

காலையில் எழுந்த பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம்.

முறை 2: கொதிக்க வைத்து தயாரிப்பது

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு  தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு சீரகம் சேர்க்கவும்.  சில நிமிடங்கள் லேசாக கொதிக்க வைக்கவும்.  பின்னர் சிறிது  நேரம் ஆற வைக்கவும். ஆறிய பின்னர்  வடிகட்டி குடிக்கலாம்.

எந்த முறையைப் பயன்படுத்தினாலும் அளவோடு எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

“இயற்கையானது என்பதால் அதிகமாக எடுத்துக்கொண்டால் அதிக நன்மை கிடைக்கும்” என்று எண்ணக்கூடாது.

சீரகத் தண்ணீரை ஊறவைத்தும் அல்லது கொதிக்க வைத்தும் தயாரிக்கலாம்.
சீரகத் தண்ணீரை ஊறவைத்தும் அல்லது கொதிக்க வைத்தும் தயாரிக்கலாம்.

சீரகத் தண்ணீரை எப்போது குடிக்கலாம்?

பலர் காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனால் அனைவரும் கட்டாயமாக வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும்  என்று எந்த ஒரு பொதுவான விதியும்  இல்லை.

உங்களுக்கு ஏற்ற உணவுப் பழக்கம் மற்றும் உடல்நிலையைப் பொறுத்து எடுத்துக்கொள்ளலாம்.

குடித்த பிறகு வயிற்றில் அசௌகரியம் அல்லது வேறு பிரச்சனை ஏற்பட்டால் தொடர்ந்து பயன்படுத்தாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

பொதுவாக உணவில் பயன்படுத்தப்படும் அளவிலான சீரகம் பலருக்கும் பரிச்சயமான உணவுப் பொருளாக இருந்தாலும், சீரகத் தண்ணீரை தினசரி அதிக அளவில் எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள்  ஒரு சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

கர்ப்பம் அல்லது பாலூட்டும் காலத்தில் இருப்பவர்கள், diabetes மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள், இதய நோய் அல்லது வேறு நீண்டகால உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் தினசரி சீரகத் தண்ணீரை வழக்கமாக்குவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

மேலும், ஏற்கனவே மருத்துவர் பரிந்துரைத்த எந்த மருந்தையும் சீரகத் தண்ணீருக்காக நிறுத்தக்கூடாது.

சீரகத் தண்ணீர் உடல் எடையை குறைக்குமா?

சீரகத் தண்ணீர் குடித்தாலே உடல் எடை குறையும் என்று உறுதியாக கூற முடியாது.

உடல் எடை குறைவதற்கு நாம் சாப்பிடும் உணவின் மொத்த அளவு, உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் தினசரி வாழ்க்கை முறை போன்ற பல விஷயங்கள் முக்கியம்.

அதனால் சீரகத் தண்ணீரை மட்டும் நம்பி எடை குறைக்க முயற்சிப்பதைவிட, ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது முக்கியம்.

how to reduce weight in tamil language

சீரகத் தண்ணீர் ஒரு மருந்தா?

இல்லை. சீரகத் தண்ணீரை ஒரு ஆரோக்கியமான பானமாக பார்க்கலாம்; ஆனால் அதை எந்த ஒரு நோய்க்கும் மாற்று மருந்தாக கருதக்கூடாது.

குறிப்பாக diabetes, இதய நோய், ரத்த சோகை அல்லது வேறு நீண்டகால உடல்நலப் பிரச்சனை இருந்தால், வீட்டில் பயன்படுத்தும் பானங்களை மட்டும் நம்பாமல் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவது அவசியம்.

முடிவாக

சீரகம் நம்முடைய சமையலில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு எளிய மசாலாப் பொருள். அதை தண்ணீரில் ஊறவைத்து அல்லது கொதிக்க வைத்து குடிப்பது பலருடைய தினசரி பழக்கமாக உள்ளது.

சீரகத்தில் உள்ள சில இயற்கை சேர்மங்கள் காரணமாக செரிமானம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் செயல்பாடுகள் போன்ற சில விஷயங்களில் பயன் இருக்கக்கூடும். அதே நேரத்தில், சீரகத் தண்ணீருக்கு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ சக்தி இருப்பதாக கூறுவதற்கு போதுமான ஆதாரம் இல்லை.

எனவே சீரகத் தண்ணீரை அளவோடு பயன்படுத்துவதுடன், நல்ல உணவு, போதுமான தூக்கம், உடற்பயிற்சி மற்றும் தேவையான மருத்துவ பராமரிப்பு ஆகியவற்றையும் கவனிப்பதே முக்கியம்.

முக்கிய குறிப்பு: இந்த கட்டுரை பொதுவான சுகாதாரத் தகவலுக்காக மட்டுமே. தனிப்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் அல்லது மருந்துகள் தொடர்பான சந்தேகங்களுக்கு தகுதியான மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

இதனையும் படிக்கலாமே 

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Update Thamizha

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning