அகில் கட்டை பயன்கள் | Agil Payangal
அகில் கட்டை பிசின் போன்றது . இது மருந்தாக பயன்படுகின்றது. அகிலில், காமம் பெருக்கி, வெப்பம் அகற்றி, வெப்பம் உண்டாக்கி, பித்தநீர் பெருக்கி, வீக்கம் முறுக்கி ஆகிய தன்மைகள் உள்ளன.
வியர்வை நாற்றம்
அகில் கட்டை ஐம்பது கிராம் , ஏலக்காய் ஒன்று, சுக்கு ஒரு துண்டு எடுத்து தண்ணீர் இருநூறு மில்லி இட்டு, கொதிக்க வைத்து கொள்ளவும். இதை இளம் சூடாக குடித்து வர நன்கு வியர்வை பெருகும்.
இதை தொடர்ந்து ஒரு மாதம் அருந்தி வந்தால், வியர்வை ர நாற்றம் போகும். வேர்க்குரு முகப்பரு போன்றவை வராது.
சிறுநீரக கல்
சிறுநீரை அதிகப்படுத்தி சிறுநீரகத்தில் படிந்துள்ள உப்புகளையும் வெளியேற்றும்.
அகில் கட்டை, தான்றிக்காய், கீழாநெல்லி, சோம்பு, சுக்கு, மிளகு, திப்பிலி போன்றவற்றை, சம அளவாக எடுத்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
அதனை ஆறவிட்டு, வடிகட்டி காலை, பகல், இரவு மூன்று வேலையும், நூறு மில்லி வீதம் தொடர்ந்து, அறுபது நாட்கள் அருந்திவரவும்,
பித்தப்பையில் உள்ள கற்கள், சிறுநீரில் கரைந்து வெளியேறும். வலியும் இல்லாமல் நன்றாக குணமாகும்.
தலைவலி,மூக்கடைப்பு
அகில் கட்டை பத்து கிராம், சுக்கு பத்து கிராம், மிளகு இரண்டு, மஞ்சள் இருபது கிராம், எடுத்து அம்மியில் நீர் விட்டு நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.
அதனை நெற்றில் பற்றாக போட்டு வருவதன் மூலமாக தலை வலி உடனே குணமாகும்.
அகில் கட்டை பத்துகிராம் மிளகு மூன்று, தும்பையிலை ஐந்து கிராம், உலர்ந்த மஞ்சள் பத்து கிராம், திப்பிலி ஐந்து கிராம், சுக்கு ஐந்து கிராம் எடுத்து நன்றாக தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.
அதனை நெருப்பு தணலில் போட்டு புகை வர செய்து, அறை கதவு மட்டும் ஜன்னலை மூடிவிட்டு, சிறிது நேரம் மூச்சுப்பயிற்சி செய்து வர, மூக்கடைப்பு, சதை அடைப்பு நீங்கி நன்கு குணமாகும்.
ஒரு சிலருக்கு மூச்சு திணறல் இருக்கும் அவர்கள் கதவினை திறந்து வைத்து பயிற்சி செய்யவும்.
விந்தணு அதிகரிக்க
அகில் கட்டை இருபது கிராம், அரிசி பொடி ஐம்பது கிராம், பாதம் இரண்டு, முந்திரி இரண்டு, லவங்கம் இரண்டு, ஜாதி காய் இரண்டு, ஏலக்காய் ஒன்றை எடுத்து கருவேலம் பிசின் விட்டு அரை பட்டாணி அளவு உருட்டி வைத்து கொள்ள வேண்டும்.
அதனை நிழலில் உலர்த்தி, காலை, மாலை இரண்டு வேலை வீதம் கொடுத்து, பால் அருந்தி வர, தூக்கத்தில் விந்து வெளியேறுவது அடிக்கடி சிறுநீரில் விந்தணு வெளியேறுவது, உணர்ச்சியின்மை போன்றவை நீங்கும்.
விந்தணுக்கள் என்பது சதவீதத்திற்கு மேல் பெருகும்.
பூஜ்ஜியம் சதவீதம் உள்ளவர்களுக்கும், நூற்றி இருபது மில்லியனுக்கு மேல் உற்பத்தியாகும்.
கை, கால் எரிச்சல்
அகில் கட்டை தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்திலிருந்து உள்ளங்கால் வரை பூசிவர, கை, கால் எரிச்சல், நமச்சல் விலகி, தளர்ந்த தோல் இறுகி, நன்கு வன்மை அடையும்.
தலைபாரம், மூக்கடைப்பு
அகில் கட்ட இருபது கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, மஞ்சள்,நொச்சியிலை, தும்பை இலை, நத்தை சூரி இலை, இம்பூரல், தைவேளை, யானை நெருஞ்சில், இவை அனைத்தும் வகைக்கு பதினைந்து கிராம் எடுத்து கொள்ளவும்.
மேலும் நல்லெண்ணெய் முந்நூறு மில்லி, பசு நெய் நூறு கிராம், வேப்பெண்ணை இருபது மில்லி, நீலடி முத்து எண்ணெய் ஐந்து மில்லி, இலுப்பை எண்ணெய் இருபது மில்லி ஆகியவற்றை சிறு தீயில் எரித்து நன்கு கரகரப்பான பதம் வந்ததும், தைலத்தினை இறக்கி பதப்படுத்தி வைத்து கொள்ள வேண்டும்.
பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளும், ஆண்கள் புதன், சனி கிழமைகளிலும் முப்பது மில்லி வீதம் தலையில் தேய்த்து ஊற வைக்கும் பொது தொண்டயில இருந்து சளி கரைந்து கொண்டே இருக்கும். மூக்கில் நீர் வடியும்.
பின்பு ஒரு மணி நேரம் கழித்து, சுரைக்காய் மூலிகை குளிக்கும் பொடி கடலை மாவு தலையில் தேய்த்துக் குளித்து உடனே துணியில் துடைத்துவிடவும்.
பின்னர் சுக்கு, மிளகு, ஏலக்காய், மஞ்சள் சேர்ந்த பாலை சூடா அருந்தி விட்டால் அவர்களை பற்றிய மண்டையடி, தலைபாரம், குத்தல், மூக்கடைப்புஅனைத்தும் விலகும்.
குளிர்ந்த தன்மையுடைய காய்கறிகளை தவிர்த்து, கொழும்புகளில் சுக்கு மிளகு, மஞ்சள் அதிகமாக சேர்க்க வேண்டும்.
இதனையும் படிக்கலாமே
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
- தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா(Opens in a new browser tab)
- பெருஞ்சீரகம் பயன்கள் | PerunJeeragam Uses(Opens in a new browser tab)
- காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?(Opens in a new browser tab)
- மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits(Opens in a new browser tab)
4 Comments
Comments are closed.