எட்டி மரம் நன்மைகள் தீமைகள்
நாம் இன்று எட்டி மரத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
எட்டி மரம் தெய்வீக மூலிகைகளில் ஒன்றாகும். எட்டி மரம் ஒரு நடுத்தர மரம்.
எல்லா நிலங்களிலும் வளரக்கூடியது. இது எப்போதும் பசுமையாக இருக்கும் தாவரம்.
இது சுமார் பதினெட்டு அடி உயரம் வரை வளரக்கூடியது.
இதன் இலை பச்சையாக இரண்டு அங்குல அகலத்தில் ஐந்து முதல் ஒன்பது சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும்.
எட்டி மரம் உள்ள நாடுகள்
இதன் தாயகம் தென்கிழக்கு ஆசியா.
எட்டி மரம் தென் அமெரிக்கா, பர்மா, தாயலந்து, வட ஆஸ்திரேலியா,சீனா, இலங்கை, கம்போடியா, வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளில் பரவலாக உள்ளது.
விஷத்தன்மை உள்ள பகுதி
இலை, வேர், காம்பு பட்டை ஆகிய அனைத்தும் விஷத்தன்மை உடையது. உயிரையும் கொள்ளும் அளவிற்கு விஷத்தன்மை கொண்டது.
அதனால் இதை கவனத்துடன் கையாள வேண்டும்.
மருந்தாக பயன்படும் பகுதி
எட்டி மரத்தின் விதைகள், பட்டை, வேர், கட்டை ஆகிய பகுதிகள் மருந்தாக பயன்படுத்தப் படுகின்றன.
எட்டி விதைகள் அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
எட்டி மரத்தின் வடக்கு பக்கம் சென்ற வேர் மாந்திரீகம் செய்யப் பயன்படும்.
இதன் பொதுவான குணம் வெப்பத்தை உண்டாக்கும்.
வாயுவை முற்றிலும் அகற்றும் தன்மை கொண்டது. மேலும் சிறுநீரை பெருக்கும்.
நரம்பு மண்டலத்தை இயக்கும். வயிற்று வலி, வாந்தி, அடி வயிற்று வலி, குடல் எரிச்சல், இரத்த ஓட்டம், கண் வியாதி, மன அழுத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், தலைவலி, மாதவிடாய் பிரச்சனைகள், மூச்சுத்திணறல் போன்றவற்றை குணப்படுத்தும்.
இந்திய மருத்துவத்தில் அபின், மிளகு உடன் சம அளவில் மாத்திரையாக செய்யப்பட்டு, வெற்றிலை சாறுடன் நரம்பு மண்டல நோய்களுக்கு மருந்தாகிறது.
சீன மருத்துவத்தில் எட்டி விதைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட களிம்பு முக முடக்கு வாதம் நோய் ஆன வெள் உனக்கு வாதத்தை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
ஆறாத புண்கள்
இதன் இலைகளை அரைத்து, நாள்பட்ட உரியும் காயங்கள் மற்றும் புண்களுக்கு பற்று போடப்படுகிறது.
விதை மருந்து நக்ஸ்வாமிகா எனப்படுகிறது. இது பல விதமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
வயிற்றுப்போக்கு சீதபேதி, வலிப்பு நோய், காய்ச்சல், நீரிழிவு, காலரா, கால் கை வலிப்பு, மூட்டுவலி, நரம்பு மண்டல நோய்கள், தூக்கமின்மை, முடக்குவாதம், ஆண் மலடு, வாந்தி ஆகியவற்றில் மிகக் குறைந்த அளவில் மருந்தாக பயன்படுகிறது.
இதன் வேர் பட்டை இருபது கிராம் எடுத்துக்கொண்டு இருநூறு மில்லி லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி குடிநீராக மூன்று வேளை கொடுக்க காலரா, வாந்தி, பேதி குணமாகும்.
வாதம்
இதன் சூரணத்தை வெந்நீரில் ஒன்று முதல் இரண்டு கிராம் கொடுக்க வாத வலி தீரும்.
சொறி சிரங்கு
மரப்பட்டை பத்து கிராம் நூறு மில்லி லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி மேலே தடவ சொறி சிரங்கு, ஆறாத புண் குணமாகும்.
நரம்புகளை சீராக்கும். எட்டி மரம் எட்டிக் கொட்டையால் கருமேகம், ஜன்னி குஷ்டம், வாத வலி, கரப்பான் பைத்தியம் தீரும் என்று ஒரு பழம்பாடல் கூட உண்டு.
விஷத்தன்மை கொண்டது
இலை, வேர், காம்பு பட்டை விஷத்தன்மை உடையது. உயிரையும் கொள்ளும். அதனால் இதை கவனத்துடன் கையாள வேண்டும்.
முக்கிய குறிப்பு
இது மற்றொரு வலை தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்தி.
ஆகவே இதில் விஷத்தன்மை அதிகம் நிறைந்துள்ளதால் இதனை பயன்படுத்து உங்கள் விருப்பம்.
இதனை சரியான அளவில் பயன்படுத்த தவறி ஏதேனும் பாதிப்போ பக்கவிளவோ ஏற்பட்டால் எங்களது வலைத்தளம் பொறுப்பேற்க்காது.
இதனையும் படிக்கலாமே
முருகை மரத்தின் பயன்கள் | Moringa Tree Benefits
தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா
மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits
நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
18 Comments
Comments are closed.