நிலக்கடலை பயன்கள் | Nilakadalai payangal in Tamil

நிலக்கடலை பயன்கள் | Nilakadalai payangal in Tamil

ஒரு கைப்பிடி நிலக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

நிலக்கடலை, குளிர்காலத்தில் விளையும் ஒரு அருமையான பயிர்.

பொதுவாக இந்த நிலக்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்க செய்யும் உணவாகும்.

இதனால் குளிர்காலத்தில் தேவையான வெது வெறுப்புடன் உடலை வைத்திருக்கும்.

மகாத்மா காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு நிலக்கடலை.

உண்மைஉயில் இறைச்சி முட்டையை விட வேர்க்கடலையில் புரதச்சத்து அதிகம்.

இப்படி நிலக்கடலை எல்லோருக்கும் பிடித்த உணவாக இருந்தாலும் நிறைய பேருக்கு நிலக்கடலை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் என்ற தவறான எண்ணமும் உண்டு.

முக்கியமாக உலகில் சத்து மிகுந்த உணவுப் பொருள்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது இந்த நிலக்கடலை தான்.

சொல்லப்போனால் விலை உயர்ந்த பாதாம், பிஸ்தா, முந்திரி, இவற்றைவிட நிலக்கடலையில் அதிக அளவில் சத்துகள் உள்ளது.

உண்மையில் நிலக்கடலையை தினமும் ஒரு கைப்பிடி சாப்பிட்டால் சொல்லில் அடங்காத நன்மைகளை பெற முடியும். இதில் கிடைக்க கூடிய நன்மைகள் என்ன என்பதனை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

தினமும் நிலக்கடலையை ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் நம் உடல் தசைகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு தேவையான புரதச் சத்துகள் கிடைக்கும்.

அதே போன்று நமது உடலில் உள்ள என்டொவ்கிரைன் சுரப்பிகளை நன்றாக இயங்க செய்து உடலின் அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு உதவும்.

மேலும் உடல் வளர்ச்சிக்கும் குறைபாடுகளை சரி செய்வதற்கும் புரதம் அவசியமான ஒன்று.

அதே போன்று திசுக்களை உருவாக்குவது புரதமே. முடி, சருமம், கண், தசை, உறுப்புகள் இவை அனைத்துமே புரதத்தால் ஆனவை. எனவே வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஒரு கைப்பிடி அளவு இலக்கணம் சாப்பிடுவது நல்லது.

வலிமையான எலும்பு

நிலக்கடலையில் கால்சியம் மற்றும் வைடமன் டி- உள்ளதால், தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் எலும்புகள் வலிமை அடையும்.

இதனால் ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸ்டிரியோபோரோசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது.

சர்க்கரை நோய் குறைக்க

நிலக்கடலையில் உள்ள நார் சத்து இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

எனவே சர்க்கரை நோயாளிகளும் தினமும் தாராளமாக ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடலாம்.

மாரடைப்பு வராது

பல பேருக்கு உள்ள ஒரு அச்சம் நிலக்கடலை சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்று.

உண்மையில் இதில் உள்ள ட்ரெஸ்டெரெட்டால் இதய நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

இதில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகம் சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கேட்ட கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் பாதம் பருப்பினை விட நிலக்கடலையில் தான் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாகவே உள்ளது.

முக்கியமாக இதில் உள்ள ஒமேகா திபேக்கட்டியாசிஸ் இதயத்தை பாதுகாப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

குழந்தை பாக்கியம்

பெண்களைப் பொறுத்தவரையில் நிலக்கடலையில் போலிக் அமிலம் அதிகம் உள்ளதால் இனப்பெருக்கம் சிறப்பாக நடைபெறும். இதனால் குழந்தைப் பேற்றில் தடை இருக்காது.

ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். அதுமட்டுமல்ல நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கருப்பை சீராக செயல்படுவதோடு கருப்பை கட்டிகள் நீர்க்கட்டிகள் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.

ருவுற்ற பெண்கள் போலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் வழியுறுத்துகிறார்கள்.

அந்த வகையில் நிலக்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் கர்ப்பிணி பெண்களுக்குஅவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மூளை சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதாகக் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

புற்றுநோய் வராமல் தடுக்க

இதில் நிறைந்திருக்கும் சைடோஸ்ட்டிரால் எனப்படும் வேதிப்பொருள் வயிறு மற்றும் உடல் செல்களில் புற்று நோய் செல்கள் வளராதவாறு தடுக்க கூடியது.

மேலும் குடற்புண் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

மன அமைதி

அதே போன்று இதில் உள்ள ட்ரிப்டோஃபேன் நமது மூளையில் செரடோனின் எனப்படும் வேதிப் பொருளை சுரக்க செய்கிறது. இந்த செரடோனின் மனிதர்களின் மன இறுக்கத்தை தளர்த்தி மன அமைதி உண்டாக்க செய்கிறது.

ஞாபகசக்தி

தினமும் நிலக்கடலை சாப்பிடு நபர்களுக்கு மூளையின் செயல் திறன் அதிகரிப்பதோடு, கூர்மையான ஞாபக திறனும் உண்டாவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

காரணம் நிலக்கடலையில் உள்ள பல வேதிப்பொருள் உடலில் இருந்து மூளைக்கு ரத்தம் பாய்வதை தங்கு தடை இல்லாமல் பார்த்துக் கொள்வதால் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயலாற்றுகிறது.

இதில் உள்ள வைடமன் பி 3 மற்றும் நியாசின் வலுவான ஞாபகசக்தியும் கொடுக்கிறது.

முதுமையில் வரும் அல்ஸைமர் என்று சொல்லக்கூடிய தீவிர மறதி நோய் ஏற்படக் காரணம் மூளைக்கு தேவையான சத்துக்கள் இல்லாத உணவுகளை சாப்பிடுவது எனக் கூறப்படுகிறது.

அந்த வகையில் நில கடலில் உள்ள நியாசின் ஞாபக சக்தி வலுவடைய செய்வதோடு மூளையின் செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்கும் உதவுகிறது.
குழந்தைகளுக்கு உகந்தது

நிலக்கடலை, நிலக்கடலை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலமாக அவர்களின் உடல் வலிமை பெறுகிறது. மேலும் உடல் சீரான வளர்ச்சியும் அடைகிறது.

குழந்தைகளின் மூளை செயல்திறனும், சிறப்படைந்தது வயதிற்கேற்ற உடல் எடையும் கொடுக்கிறது.

முடி உதிர்தல்

இந்த நிலக்கடலையில் வைடமன் பி சத்து வகையை சார்ந்த பயோட்டின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது தலைமுடியின் ஆரோக்கியத்தை காத்து முடி உதிர்வதைத் தடுக்கிறது.

பித்தப்பையில் கல்

தினமும் ஒரு கைப்பிடி நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்க முடியும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பொதுவாக நிலக்கடலையை வேகவைத்தோ, வருத்து சாப்பிட்டு வரலாம்.

ஆனால் பச்சையாக நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் அவற்றின் முழுமையான சத்துகளையும் பெற முடியும் என்றும், ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊற வைத்தால் பித்தம் அதிலிருந்து நீங்கி விடும் என்றும் கூறப்படுகிறது.

உடல் எடை கூடும்

நிலக்கடலையில் கலோரிகள் அதிகம் உள்ளதால் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை மேலும் அதிகரிக்கும்.

எனவே தினமும் ஒரு கைப்பிடி போதுமானது.

பொதுவாக எதுவுமே எளிதாக கிடைத்துவிட்டால் அதன் அருமை நமக்கு தெரியாது. நிலக்கடலையும் அப்படித்தான். இதன் அருமை நமக்கு தெரியவில்லை என்று சொல்ல வேண்டும்.

உண்மையில் தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலையை சாப்பிட்டு பாருங்கள் ஏராளமான நன்மைகள் கிடைப்பதை கண்கூடாகக் காணமுடியும்.

இதனையும் படிக்கலாமே

கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)

பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil(Opens in a new browser tab)

மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்(Opens in a new browser tab)

முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)

அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)

உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா(Opens in a new browser tab)

முட்டை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா(Opens in a new browser tab)

உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil(Opens in a new browser tab)

English Overview

Here We have  நிலக்கடலை பயன்கள் | Nilakadalai payangal in Tamil. Its also Called as anilakadalai benefits or nilakadalai benefits in tamil or nilakadalai benefits tamil or nilakadalai during pregnancyornilakadalai health benefits in tamil or nilakadalai in payangal orn ilakadalai in tamil or nilakadalai maruthuvam in tamil or nilakadalai meaning in tamil or nilakadalai nanmaigal tamil or nilakadalai payangal in tamil or nilakadalai side effects in tamil or nilakadalai tamil or benefits of verkadalai or pachai verkadalai benefits or pachai verkadalai benefits in tamil or pachai verkadalai or verkadalai benefits or verkadalai benefits in tamil or verkadalai burfi benefits in tamil or verkadalai burfi in tamil or verkadalai in tamil or verkadalai nanmaigal or verkadalai nanmaigal in tamil or verkadalai uses in tamil or நிலக்கடலை or நிலக்கடலை தீமைகள் or நிலக்கடலை பயன்கள்or நிலக்கடலை மருத்துவ பயன்கள் or நிலக்கடலை நன்மைகள் or நிலக்கடலையின் பயன்கள் or வேர்க்கடலை பயன்கள் or வேர்க்கடலை தீமைகள் or வேர்க்கடலை நன்மைகள் or வேர்க்கடலையின் பயன்கள் or நிலக்கடலை பயன்கள்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning