தினமும் கரும்பு ஜூஸ் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்
தினமும் கரும்பு ஜூஸ் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம். இது கோடை காலம் என்பதால் அங்கங்கே கரும்பு சாறு விற்கும் கடைகளும், புதிது புதிதாக முளைக்க தொடங்கியாச்சு. உண்மையில் இந்த கரும்பு சாற்றில் ஏராளமான நன்மைகள் உள்ளன.
கரும்பு சாற்றில் நிறைய நன்மைகள் உள்ளது என்பதை விட அதன் ஒவ்வொரு நன்மைகளும் உங்களுக்கு தெரிந்தால் தான் இதன் உண்மையான மதிப்பு புரியும்.
அந்த வகையில் இங்கே தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன? ஏன் கட்டாயம் இதை அருந்த வேண்டும்? யாரெல்லாம் கண்டிப்பாக அருந்த வேண்டும்? முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் அருந்தலாமா? இது போன்ற பல உண்மைகளை தெரிந்து கொள்ள இறுதிவரை படியுங்கள்.
உடல் வெப்பம்
பொதுவாக கோடைகாலம் என்றாலே அதிக வெப்பத்தால் நீர் இழப்பு ஏற்பட்டு உடல் எளிதில் வறட்சி அடைந்து விடும். அதிலும் நிறைய பேர் அடிக்கடி rest room செல்ல தயங்கி தண்ணீர் அதிகமாகவும் அருந்தமாட்டார்கள்.
இதனால் உடல் சூடு அதிகரித்து நீர்த்தாரை எரிச்சல், நீர் குத்தல், தொற்றுகளால், பிறப்புறுப்பில் அரிப்பு போன்றவை ஏற்படும். இவற்றை சரி செய்யும் தன்மை இந்த கரும்பு சாறுக்கு உண்டு.
அதிலும் இயல்பாகவே உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இவர்கள் தினமும் ஒருடம்ளர் கரும்பு சாறு குடித்தால் இந்த பிரச்சனைகளை வராமல் தடுக்கலாம். முக்கியமாக இந்த கரும்பு சாற்றை குடித்த உடனேயே உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதை உணர முடியும்.
நோய் எதிர்ப்பு சக்தி
முக்கியமாக இதில் ஆன்டிஆக்ஸிடென்ட், இரும்பு சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பிற எலக்ட்ரோலைட்டுகள் என நிறைய சத்துக்கள் உள்ளதால் இவன் உடலில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
நீர் சத்து
அதே போன்று கோடையில் ஏற்படும் அதிக நீர் இழப்பால் உடலில் நீர் சத்து குறைந்து ஒட்டுமொத்த உடல் இயக்கமும் பாதிப்புக்குள்ளாகும்.
எனவே உடல் இயக்கத்திற்கு நீர் சத்து அவசியம். அந்த வகையில் இந்த கரும்பு சாறு உடலில் ஏற்படும் வறட்சியை போக்கக்கூடியது என்பதால் தினமும் கரும்பு ஜூஸ் குடித்தால், நீர் இழப்பை ஈடு செய்ய முடியும்.
இப்பொழுது வேறு எந்த வகையில் இந்த கரும்புஜூஸ் நமக்கு பயன் தருகிறது என்பதையும் பார்ப்போம்.
பொதுவாக நம்மை சுற்றிலும் மாசு படிந்துள்ளதால் நாம் சாப்பிடுகிற உணவுகள் அருந்தும் நீர் சுவாசிக்கும் காற்று இவைகள் மூலம் நம் உடலில் அதிக அளவு மாசுகள் சேர்ந்து விடுகிறது. உண்மையில் உடலில் மாசுகள் சேர்ந்தால் அதுவே பல உடல்நலப் பிரச்சனைகளை கொண்டு வந்து விடும்.
உடல் தூய்மையாக
அந்த வகையில் இந்த கரும்பு ஜூஸ் மாசுகளையும் நச்சுத்தன்மையை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தரும் ஆற்றல் கொண்டது.
எனவே தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் அருந்தி வரும் பொழுது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறி உடலை தூய்மைப்படுத்துகிறது.
செரிமான பிரட்சனை
பலருக்கும் சாப்பிட்ட உணவு முழுமையாக செரிமானம் அடையாமல் போவதற்கு காரணம் அவர்களின் வயிற்றில் உள்ள செரிமான அமிலங்களின் சுரப்பி ஏற்படும். ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குறைபாடுகளே காரணம்.
இந்த கரும்பு சாறு உணவு செரிமானத்திற்கு உதவும் அமிலங்களின் சுரப்பை அதிகப்படுத்தும். எனவே செரிமான பிரச்சனை உள்ளவர்கள் கரும்பு ஜூஸ் அடிக்கடி குடித்து வந்தால் வயிறு மற்றும் குடல் சுத்தமாகும். அதே போன்று வயிற்றுப் புண்களையும் இந்த கரும்பு சாறு குணப்படுத்துகிறது.
இரத்த சோகை
இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் கரும்புஜூஸ் உடன் தேன் கலந்து குடித்து வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நீங்கும்.
அதிலும் பெண்கல் பொறுத்தவரையில் மாதவிடாய், பிரசவம் இவற்றின் போது அதிக இரத்த இழப்பு ஏற்படுவதால் இவர்கள் அடிக்கடி கரும்பு சாறு குடித்து வருவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கல்லீரல் ஆரோக்கியம்
இந்த கரும்பு சாறு, நமது உடலின் முக்கிய உறுப்பான, கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது. நமது உடலில் அதிக பணிகளை செய்வதும் இதுதான்.
பொதுவாக கல்லீரல் பாதிப்படைவதற்கு மது அதிகம் அருந்துவது மட்டுமல்ல முறையற்ற உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதாலும் கல்லீரலில் கொழுப்புகள் அதிகம் சேர்ந்து பாதிப்பு ஏற்படுத்தும்.
அந்த வகையில் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க அடிக்கடி கரும்பு ஜூஸ் அருந்தி வருவது நல்லது.
மஞ்சள்காமாலை
முக்கியமாக பாதிப்புகளில் மஞ்சள்காமாலையும் ஒன்று. இந்த ம ஞ்சள்காமாலை குணமாக தினமும் 2 டம்ளர் கரும்பு ஜூஸ் உடன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு கல் உப்பு சேர்த்து குடித்து வந்தால், விரைவில் நல்ல குணம் தெரியும்.
கரும்பின் மிக முக்கியமான நன்மை சிறுநீரக கற்களை குணமாக்குவதுதான். எனவே தண்ணீர் மட்டுமின்றி கரும்பு சாற்றையும் அருந்தி வந்தால் அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்து வெளியேறிவிடும்.
மூளை ஆரோக்கியம்
இதுதான் நமது உடலில் அனைத்து இயக்கங்களையும் நிர்வாகம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இந்த கரும்பு சாறு உதவுகிறது. மேலும் கரும்பு சாறு அருந்துவதால் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக வேலை செய்வதற்கான ஆற்றல் கிடக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா?
கரும்பு இனிப்பாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட தயக்கம் காட்டுவார்கள். உண்மையில், இருக்கும் இனிப்பானது, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும்.
மேலும் இது குறைந்த கிளைசெமிக் பண்புகளையும் கொண்டுள்ளது. சொல்லப் போனால் சர்க்கரை நோயாளிகள் கடைகளில் விற்கும் செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை குடிப்பதை விட இந்த கரும்பு ஜூஸ் குடிக்கலாம்.
இதில் இயற்கை சர்க்கரை அடங்கி உள்ளதால் சர்க்கரை உடலில் மெதுவாக உறிஞ்சப்படுகிறது. எனவே அளவாக அவ்வப்போது சாப்பிட்டு வரலாம்.
முக்கிய குறிப்பு
முக்கியமாக, கரும்பு சாறு கிடைக்கும் இடம், சுகாதாரமாக உள்ளதா? என்று, பார்த்து வாங்கி அருந்துவது நல்லது. அதே போன்று, வாங்கிய அரை மணி நேரத்தில், அதாவது, அதன் நிறம் மாறுவதற்குள், குடித்து விட வேண்டும்.
உண்மையில் கெடுதல் தரும் செயற்கை குளிர்பானங்களை இந்த கரும்பு ஜூஸை தினமும் சாப்பிட்டுப் பாருங்கள். அதன் நன்மைகள் கண்கூடாக தெரிய ஆரம்பிக்கும்.
தினமும் கரும்பு ஜூஸ் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்
இதனையும் படிக்கலாமே
- ஆளி விதை பயன்கள் | Ali Vithai Benefits in Tamil
- சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம் | Kidney Stone Treatment in Tamil
- கால் நரம்பு வலி குணமாக | Paati Vaithiyam For Leg Pain in Tamil
- ஊமத்தங்காய் பயன்கள் | Umathai benefits in tamil
- நார்ச்சத்து மிகுந்த உணவுகள் | Fiber Rich Foods in Tamil
- பூங்கார் அரிசி பயன்கள் | Poongar Rice Benefits in Tamil
- மைதா மாவு தீமைகள் | Maida Side Effects in Tamil
அனைவரும் நமது வலைத்ததளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்
3 Comments
Comments are closed.