வாந்தி நிற்க பாட்டி வைத்தியம் | How To Stop Vomiting in Tamil
ஒரு சிலருக்கு அதாவது பெண்கள், கர்ப்பிணி பெண்களா இருக்கலாம். இல்லை நமக்கு உடம்பு சரியில்லாத நேரமாக இருக்கலாம். இல்லை பேருந்தில் போகக்கூடிய சூழ்நிலையில குமட்டல் ஏற்படும்.அந்த குமட்டலை எப்படி தடுப்பது என்று பார்ப்போம்.
வாந்தி அறிகுறி
வயிறு சரியில்மால் இருக்க கூடிய நேரங்களில் வாந்தி வரலாம். அந்த சமயங்களில் எச்சரிக்கும் வகையில் குமட்டல் உணர்வு ஏற்படும்,
நமது உடல்ல மூளையினுடைய பின் பகுதியில் மூல குளத்துல வாந்தி மையம் உள்ளது.
இது தூண்டப்படும் போதுதான் வாந்தி வருகிறது.
செரிமானமின்மை, வயிற்று புண், காய்ச்சல் இவை அனைத்தும் வாந்தியினை அல்லது குமட்டலை ஏற்படுத்தும்.
வாந்தி நிற்க பாட்டி வைத்தியம்
எலுமிச்சை
இஞ்சி,சீரகம், எலுமிச்சை, தேன் இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து கொள்ளவும். இஞ்சி விழுதினை நெல்லிக்காய் அளவு நாணற்க்க அரைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும் . அதனுடன் அரை தேக்கரண்டி சீரகப்பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
கொதிக்க வாய்த்த நீரை நன்றாக வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு நின்று விடும்.
கருவேப்பிலை
நாம் அனைவருக்குமே தெரியும் ஒரு சிலர் சாப்பிடும் பொழுது கருவேப்பிலையை ஒதுக்கி விடுவாராகள். ஆனால் இந்த கருவேப்பிலை தான் வாந்தியாக இருந்தாலும் சரி குப்பட்டலாக இருந்தாலும் சரி குணப்படுத்தும்.
கறிவேப்பிலை கசாயம் செய்ய தேவையானவை கறிவேப்பிலை காம்புகள்,பெரிய நெல்லி இலை காம்புகள்,வேப்பிலை காம்புகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தட்டி வைத்து கொள்ளவும்.
அதனுடன் தேக்கரண்டி சீரகம் மற்றும் மிளகு போடி,சுக்கு பொடியினை தேவைக்கு ஏற்ப்ப எடுத்துக்கொண்டு தண்ணீர் சேர்த்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அதனை வைடிக்கட்டி குடித்தால் வாந்தி மற்றும் குமட்டல் சரியாகும்.
சர்க்கரை, உப்பு
மேற்கண்டவை எல்லாம் தயார் செய்வதற்கு நேரம் ஆகும். அனால் வாந்தியை உடனடியாக நிறுத்த ஒரு எளிய முறை சர்க்கரை மற்றும் உப்பு.
சர்க்கரை மற்றும் உப்பினை தண்ணீரில் கலந்து அந்த கலவையை குடித்தால் வாந்தி நிற்கும். மேலும்
ஒரு சிலருக்கு திடீர் என ஏற்படும் பதட்டம், மயக்கம், வாந்தி வருவது போல் குமட்டல் ஏற்படும்.
இந்த சமயங்களில் சர்க்கரை உப்பு கரைசலை குடிக்கலாம். அவ்வாறு குடிப்பதன் மூலமாக உடல் திறமை, செயல்பாடு வரம்புக்கு ஏற்ற மாதிரி சமநிலைப்படும்.
மேலும் உடலில் நீர் வறட்சி இருக்காது. சோர்வடையாமல் பாதுகாக்க உதவி செய்யும்.
இந்த உடனடி தீர்வு எதற்காக என்றால் வாந்தி, மயக்கம் இவை திடீர் என்று ஏற்படுபவை. அந்த சமயங்களில் மற்ற பொறுட்களை தேடியும் அலைய முடியாது ஆனால் சர்க்கரை மற்றும் உப்பு எளிதில் கிடைக்க கூடியது அந்த சமயங்களில் பயன்படுத்தலாம்.
இஞ்சி
ஒரு சிறிய தூண்டி இஞ்சியினை நன்றாக நசுக்கி நீரில் சேர்த்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேனை கலந்து குடிக்கலாம். இந்த இஞ்சி வயிற்றில் இருக்க கூடிய எரிச்சலினை நீக்கி உடனடி நிவாரணம் தருகிறது.
இஞ்சி பித்தத்தை தடுக்கக் கூடியது அதனால வாந்தியைக் கட்டுப்படுத்தி வயிறு பிரச்சனைகலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
இதனையும் படிக்கலாமே
- கூகை கிழங்கு பயன்கள் | Arrowroot in Tamil
- மக்காச்சோளம் பயன்கள் | Makka Cholam in Tami
- துரியன் பழம் பயன்கள் | Durian Fruit in Tamil
- வாய் புண் குணமாக மருந்து | Vai Pun Treatment in Tamil
- ஆப்பிள் சீடர் வினிகர் பயன்கள் | Apple Cider Vinegar Benefits in Tamil Language
- கருவாடு பயன்கள் | Dry Fish Benefits in Tamil
- நன்னாரி பயன்கள் | Nannari benefits in tamil
- சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
41 Comments
Comments are closed.