அரைக்கீரை பயன்கள் | Arai Keerai Benefits in Tamil
இயற்கையான உணவுகளை அதிகம் சாப்பிடருகின்ற விலங்குகள், மற்றும் மனிதர்கள் அதிகம் நோய் தாக்குதல்களுக்கு உள்ளாவதில்லை.
இத்தகைய நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள, சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது சிறந்தது. அவ்வாறு சத்து நிறைந்த உணவு வகைகளாக கீரை வகையை சாப்பிடலாம். கீரைவகைகளில் அரைக்கீரை பயன்கள் பற்றி பாப்போம்.
நமது உடல் சீராக செயல்படுவதற்கு வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மேலும் இதர தாது சத்துக்கள் மிகவும் அவசியமாக இருக்கின்றன.
அரைக்கீரையில் இந்த அணைத்து சத்துக்களும் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. எனவே, அனைவரும் அடிக்கடி சாப்பிட்டு வருவது அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது.
வயிற்று புண்
காலை உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட தவறுவதும், சாப்பிடாமல் இருப்பதாலும் அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடுவதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகின்றது.
இது உணவை செரிமானம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. அரைக்கீரை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்கள் ஆற்றப்படுகிறது.
கடுமையான மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கின்றது.
ஜுரம் காய்ச்சல்
ஜுரம் போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படு பவர்களுக்கு உடல் சூடு அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும்.
மேலும் கை, கால்களில் வலியையும் உண்டாக்கும்
கடுமையான ஜுரம் மற்றும் காய்ச்சல் சரியான பின்னர் உடலிற்கு பழைய பலம் திரும்ப பெறுவதற்கு அரைக்கீரை அடிக்கடி சாப்பிட்டு வரவேண்டும்.அவ்வாறு சாப்பிட்டு வந்தால் உடலுக்கும், மனதிற்கு பலம் உண்டாகும்.
கல்லீரல் காக்க
கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான், மஞ்சள் காமாலைஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றது.
மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு, அரைக்கீரை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டாலே கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
சிறுநீரகம் சீராக செயல்பட
குறைந்த அளவில் நீரை குடிப்பதாலும், அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும், சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலை உண்டாகின்றது.
அரைக்கீரையை தினசரி உணவில் சிறிதளவேனும் எடுத்து வருபவர்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் எதுவும் இருப்பின் நாளடைவில் கரைந்துவிடும்.
சிறுநீரை நன்கு பெருக்கும் திறன் கொண்டது எனவே இது உடலில் சேர்ந்திருக்க கூடிய நச்சுக்களை அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேற்றும்.
கருப்பை பலம் பெற
திருமணமாகி பல ஆண்டுகளாக ஒரு சில பெண்களுக்கு கருத்தரிக்க இயலாத நிலை இருக்கும். இவர்கள் தங்கள் உணவில், வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது, அரைக்கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால், அவர்களின் கருப்பை பலம் பெரும்.
கருப்பை உள்ளே தங்கி இருக்கும், நச்சுக்கள் எல்லாம் வெளியேறி கூடிய விரைவில் கருத்தரிக்கும் நிலை உண்டாகும்.
புற்றுநோய் எதிர்ப்பு
பலவகையான புற்றுநோய்களில் வயிற்றுப் புற்று ஒன்று. இந்த புற்றுநோய் வயிறு பகுதியினை மட்டும் தாக்குவதில்லை. அதனுடன் தொடர்பு உடைய குடல் பகுதி மற்றும் கணையம் போன்ற அணைத்து பகுதிகளையும் பாதிக்கும் தன்மை கொண்டது.
அரைக்கீரையை அதிக அளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகின்றது.
ஏற்கனவே புதுறுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அரைக்கீரையை அதிக அளவில் சாப்பிட வேண்டும்.
விஷக்கடி நிவர்த்தி
நகரங்களை விட, கிராமங்களில் இயற்கை வளம், மரம், செடி, கொடிகள் அதிகம் இருப்பதால் பலவகையான வண்டுகள் விஷ பூச்சிகள் போன்றவை அதிகம் இருக்கின்றன.
இவை சில சமயங்களில் சிறியவர், பெரியவர்கள் என அனைவரையும் தீண்டி விடுகின்றது.
இத்தகைய பூச்சிகளின் நஞ்சை முறிக்கும் திறன் அரைக்கீரையில் உள்ளது.
விரைவான நோய் எதிர்ப்பு சக்தி
இந்த கீரைகளின் இலைகளை, தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, அவர்களின் உடலில், இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கின்றது.
தொற்று நோய்கள், சுலபத்தில் உடலைத் தாக்காதவாறும் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகின்றது.
இதனையும் படிக்கலாமே
- International Doctor wishers
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
- முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
- பலாப்பழம் சாப்பிட்டால் கிடைக்க கூடிய நன்மைகள்(Opens in a new browser tab)
- திராட்சை ஏன் சாப்பிடவேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
- தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா(Opens in a new browser tab)
- உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil(Opens in a new browser tab)
- கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu(Opens in a new browser tab)
15 Comments
Comments are closed.