வில்வம் மருத்துவ குணங்கள் | Vilvam Benefits in Tamil
வில்வ மரம் நீங்கள் எளிதில் பல தெய்வத் தளங்களில் இது ஒரு புனித மரமாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அந்த மரத்தின் இலைகள் அதிக மூலிகை தன்மை உடையவையாகும்.
அதன் இலைகள் சிவனின் நெற்றிக்கண் போல் காட்சியளிக்கும். வில்வ மரம் இலையுதிர் கால மரத்தின் வகையைச் சார்ந்தவை.
வில்வ மரத்தின் புனித தன்மையைத் தவிர்த்து இதன் இலை, பழம், வேர், பட்டை, மரம், பழ கூழ், பிஞ்சு மற்றும் மலர் என அனைத்திலும் மருத்துவ பயன்கள் இருக்கிறது. இப்பதிவில் வில்வத்தின் மருத்துவ பயன்பாட்டுகளைப் பற்றி பார்ப்போம்.
மஞ்ச காமாலை
வில்வ மரத்தின் இலைகள் காமாலையைப் போக்கும் சிறப்புத் தன்மை உடையவை ஆகும். வில்வ இளம் இலைகளைச் சாறு பிழிந்து மிளகுடன் சேர்த்து அருந்தினால் மஞ்ச காமாலை நோய் விரைவில் குணமாகும்.
இந்த கசாயம் காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற பல நோய்களுக்கு மருந்தாக விலங்குகிறது.
வயிற்று வலி
வில்வம் வயிற்று வலிக்கு மிக உகந்த மருந்தாக கூறப்படுகிறது. வயிற்று வலியைப் போக்க வில்வ இளம் இலைகளச் சாறு எடுத்து அதனை தேனுடன் கலந்து குடித்தால் வயிற்றுப் போக்கு எளிதில் குணம் ஆகிவிடும்.
இந்த மருந்து வாந்தி எடுப்பவர்களுக்கு விரைவில் குணமாக்கும் மருத்துவ குணம் உடையது.
மூச்சு பிரச்சனைகள்
வில்வ மரம் காசம், மூச்சி குழாய் அழற்சி போன்ற பல மூச்சு பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கிறது.
வில்வ மரத்தின் வேர்களை ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீரில் ஊற வைத்து,அதனை அருந்தினால் மூச்சு பிரச்சனைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
இந்த மருந்து நுரையீரல், தொண்டை பகுதியில் இருக்கும் பிரச்சனைகளை எளிதில் குணம் ஆக்கிவிடும்.
போதைப் பழக்கம்
குடிப்பழக்கம் இருக்கும் நபர்களுக்கு அப்பழக்கத்தை முற்றிலுமாக மறக்க வைக்கும் மருத்துவ குணங்கள் வில்வ மரத்தின் இலைகளுக்கு உண்டு.
குடிப்பழக்கத்தை முற்றிலுமாக நீக்க, கொதிக்கும் தண்ணீரில் சிறிது வில்வம் இலைகளை போட்டு, மல்லி விதைகள் மற்றும் தனியாவை நன்றாக இடித்து அதன் தூளை வேகும் வில்வ இலைகளுடன் சேர்த்து அருந்தினால் போதைப் பழக்கத்தை முற்றிலுமாக நீக்கிவிடலாம்.
இதனுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்துக் கொண்டால் குடிக்கச் சுவையாகவும் மருத்துவ குணமாகவும் இருக்கும்.
இந்த கசாயத்தை 48 நாட்கள் அருந்தி வந்தால் குடிப்பழக்கம் இருப்பவர்களுக்குக் குடிக்கும் முன் ஒவ்வாமை வந்து அவர்களைக் குடிக்க விடாமல் தடுத்துவிடும்.
குடல் புண்
குடல் புண், வயிற்றுப் புண் நோய்களுக்கு வில்வ இலைகள் மிக அருமையான மருந்தாகக் காணப்படுகிறது.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒன்பது இலைகளை போட்டு, ஊறவைத்து அந்த இலைகளுடன் கூடிய தண்ணீரைக் குடித்தால் குடல் புண் மிக விரைவில் குணம் ஆகிவிடும்.
இந்த மருந்தை வாரம் ஒருமுறை குடித்து வந்தால் குடல் புண் என்னும் நோயைப் பற்றி நீங்கள் உங்கள் வாழ்நாளில் கவலைப் படவேண்டாம்.
கண் எரிச்சல்
வில்வப் பூ அல்லது வில்வ காயை அரைத்து பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வரப் பித்தம், தலைவலி, கண் எரிச்சல் போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாக இருக்கிறது.
அல்லது, வில்வப் பழத்திலிருந்து தைலம் தயாரித்து அதனை தலைக்குத் தேய்த்துக் குளித்து வரத் தலைவலி பிரச்சனைகள் பறந்தோடிவிடும்.
வில்வ தளிர்களை ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கிய பின், ஒரு துணியில் கட்டி கண்ணைச் சுற்றி ஒத்தணம் கொடுத்தால் கண் எரிச்சல், மெட்ராஸ் ஐ போன்ற கண் சம்பந்தப் பட்ட நோய்களுக்கு மருந்தாகத் திகழ்கிறது.
மூட்டு வலி
வில்வ இலைகள் முதியோர்களின் மூட்டு வலிக்கு நல்ல மருந்தாகப் பார்க்கப் படுகிறது. வில்வ இலைகளை வதக்கி ஒரு துணியில் கட்டி மூட்டுக்கு ஒத்தணம் கொடுத்து வந்தால் மூட்டு வலி சறியாகிவிடும்.
உதிரப்போக்கு
நிறையப் பெண்களுக்கு அதிகமாக உதிரப் போக்கு ஏற்படும் பொழுது, இந்த வில்வ மரத்தின் பிஞ்சை நன்றாக அரைத்து சிறிய அளவு தயிரில் போட்டுச் சாப்பிட்டு வந்தால் மாதவிடாயின் போது உதிரப்போக்குக் குறையும்.
அல்லது, வில்வ மரத்தின் பட்டையை நன்றாக அரைத்து கசாயம் போல் குடித்தால் உதிரப்போக்கு குறையும்.
சர்க்கரை
நீரிழிவு நோய் இருக்கும் நபர்களுக்கு சர்க்கரை அளவை குறைக்கும் அற்புத மருந்தாக வில்வ இலைகள் திகழ்கிறது.
சர்க்கரை அளவை குறைக்க, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இடித்த மிளகு சேர்த்து, வில்வம் இலைகளை போட்டு, சிறிதளவு கருப்பட்டி சேர்த்து நல்ல கொதிக்க வைத்தால் வில்வ டீ தயாராகிவிடும்.
தினமும், தேநீர்க்குப் பதிலாக வில்வ தேநீரையை குடித்து வந்தால் உடலில் உள்ள சர்க்கரை அளவு கணிசமாகக் குறைந்துவிடும்.
தோல் பிரச்சனைகள்
இந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிதும் பாதிக்கப்படும் நோய் என்றால் அது தோல் வியாதிகள் தான்.
முகப்பரு, தோல் எரிச்சல், தலைப் பொடுகு, படை போன்ற பல வகையான தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வில்வம் ஒன்றே ஒரே தீர்வாக இருக்கிறது.
வில்வ இலைகளைச் சட்னியாகச் செய்து இட்லி அல்லது தோசைக்குத் தொட்டு சாப்பிட்டால் தோல் பிரச்சனைகள் வேகமாகக் குணம் அடைந்துவிடும்.
தாய்ப் பால்
வில்வப் பழத்தில் தாய்ப் பால் சுரக்கும் சுரபிகளை அதிக படுத்தும் அற்புதமான மருத்துவ குணம் இருக்கிறது. வில்வம் பழத்தை அரைத்து சிறிது இஞ்சி, வெல்லம் சேர்த்துக் குடித்தால் தாய்ப் பால் அதிகமாகச் சுரக்கும்.
ரத்த சுத்தம்
வில்வம் பழ கூழ் சிறிதளவு எடுத்துக் கொண்டு அதனுடன் கொதிக்க வைத்த தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து அருந்தினால் ரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும்.
இதனையும் படிக்கலாமே
- பெருஞ்சீரகம் பயன்கள் | PerunJeeragam Uses(Opens in a new browser tab)
- திராட்சை ஏன் சாப்பிடவேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
- முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
- மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits(Opens in a new browser tab)
- நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)
- காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?(Opens in a new browser tab)
- தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா(Opens in a new browser tab)
கட்டாயம் நமது வலைதளத்தின் Discalimer பக்கத்தினை படிக்கவும்.
12 Comments
Comments are closed.