தண்ணீரின் பயன்கள் | Benefits of Drinking Water
தண்ணீரின் பயன்கள் | benefits of drinking water உடலில் என்பது சதவீதம் தண்ணீர் நிறைந்து உள்ளது. எனவே தான் இவ்வுலகில் உணவு இல்லாவிட்டாலும் வாழ முடியும்.ஆனால் தண்ணீர் இன்றி வாழ முடியாது.
நமது உடல் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் எனில் நமது உடலில் தண்ணீரின் அளவானது சம அளவில் இருக்க வேண்டும்.
உங்களுக்கு தெரியுமா? தண்ணீர் அதிகம் குடித்தால் உடலில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை தடுக்கலாம். மருத்துவர்கள் தண்ணீரை அதிகம் குடிக்க அறிவுரைப்பது இதற்காக தான்.
ஆகவே குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீராவது குடிக்கவேண்டும். இவ்வாறு குடிப்பதால் உடலானது நன்கு செயல்படும் .
அதிலும் கோடை காலம் என்றால் குறைந்தது நான்கிலிருந்து ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்கவேண்டும்.
உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்
மனித உடலில் உள்ள பாகங்கள் அனைத்து பகுதிக்கும் வேண்டிய ஊட்டச்சத்துக்களை கொண்டு சேர்ப்பது தண்ணீர் தான். எனவே உடலுக்கு ஆற்றல் வேண்டுமெனில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
கழிவுகளை வெளியேற்றும்
தற்போதைய விங்ஞான உலகில் மாசுக்கள் நிறைந்து இருப்பதானால் ஒவ்வொருவர் உடலிலும் குறைந்தது ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் கழிவுகள் சேருகின்றன.
ஹோட்டலில் உணவு உண்பது மற்றும் பதப்படுத்தப்பட்ட ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதன் காரணமாக உடலில் அதிகம் கழிவுகள் சேரும்.
எனவே தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலமாக நமது உடலில் உள்ள கழிவுகளை முறையாக வெளியேற்றும்.
உடல் வெப்பத்தை சீராக வைக்கும்
உடல் வெப்பத்தினை அளவினை சீராக வைத்துக்கொள்ள வேண்டுமெனில் போதிய அளவு நீரினை தினசரி குடிக்க வேண்டும்.
இல்லையெனில் உடலில் அதிகப்படியான வெப்பம் ஏற்பட்டு ஆபத்தை விளைவிக்கும்.
மெடபாலிசம் அதிகமாக்கும்
உடலில் மெடபாலிசதித்தினை அதிகரிப்பதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது.
தசைப் பிடிப்புகளை தடுக்கும்
எழுபது சதவீத தசைகள் நீரால் சூழப்பட்டுள்ளது.
தசை பிடிப்புகள் நமது உடலில் அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணம் உடலில் நீரின் அளவு பற்றயக்குறையாக இருப்பதனால்தான்.
ஏனெனில் நீருக்கு பதிலாக கழிவுகள் தங்கி பிடிப்புகளை ஏற்படுத்தும். எனவே அவற்றை வெளியேற்ற நீர் மிகவும் அவசியமாகும்.
மலசிக்கல் சரிசெய்யும்
முறையான குடல் இயக்கம் நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.
மலசிக்கலினால் அவதிப்படுபவர்கள் அதிக அளவில் தண்ணீர் குடிப்பதன் மூலமாக சரியாகும்.
ஏனெனில் தண்ணீர் குடல் இயக்கத்தை சீராக வைக்கும்.
பொலிவான சருமம்
முகத்தில் முகப்பருக்கள், அதிகப்படியான அழுக்குகள் எண்ணெய் காரணமாகத்தான் ஏற்படுகிறது.
முகத்தில் உள்ள அழுக்குகளினை வெளியேற்றுவதற்கும் முகப்பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
மூளை செயல்பாடுகள்
மூலையில் தொண்ணூறு சதவீத தண்ணீர் உள்ளது. தலைவலி, உடல் சோர்வு போன்றவை அதிகம் ஏற்படுவதற்கு மிகமுக்கிய காரணம் உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் இருப்பது தான்.
மூட்டு உராய்வை தடுக்கும்
உடலிலேயே மூட்டுக்கள் மிகவும் முக்கியமான ஒன்று. எப்படி இயந்திரங்களில் இணைப்புகள் உள்ளதோ, அதேபோல் உடலில் ஒவ்வொரு பாகத்தையும் இணைப்பது மூட்டுகள் தான்.
இத்தகைய மூட்டுகளில் ஏற்படும் உராய்வை தடுப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் மூட்டு வலிகள் ஏற்பட ஆரம்பிக்கும்.
ஊட்டச்சத்துக்களை கொடுப்பதற்கு
மனித உடலுக்கு அணைத்து ஊட்டச்சத்துக்களையும் தண்ணீர் மற்றும் இரத்த அணுக்கள் தான் கொண்டுசெல்கின்றன.
ஆகவே, தண்ணீர் குறைவாக இருந்தால் உடலின் பாகங்களுக்கும் ஊட்டச் சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
உடல் எடை குறைப்பதற்கு
தண்ணீர் வயிற்றை நிரப்புவதில் தோடு, மெட்டபாலிசத்தின் அளவையும் அதிகரிப்பதால் அது உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.
இதனையும் படிக்கலாமே
- திரிபலா சூரணம் பயன்கள் | Triphala Suranam Uses in Tamil
- நரம்பு தளர்ச்சி குணமடைய என்ன செய்ய வேண்டும் | Narambu Thalarchi Solution in Tamil
- உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tamil
- இயற்கை உணவு பட்டியல் | Healthy Food in Tamil
- சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
- மொச்சை கொட்டை பயன்கள் | Mochai Kottai Health Benefits
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
15 Comments
Comments are closed.