வெற்றிலை பயன்கள் | Vetrilai Benefits in Tamil
வாயுத் தொல்லை
வெற்றிலை சாப்பிடுவதில் கிடைக்கும் நன்மைகளில் முதலில் பார்க்கப்போவது வாயுத் தொல்லை. நமது உடலில் வாதம் தன்மை அதிகரிக்கும்போது வயிற்றில் வாயுத் தொல்லை போன்றவை ஏற்படுகின்றது.
மலசிக்கல்
மேலும், சிறு குழந்தைகள் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு அது அவர்களை மிகுந்த அவதிக்கு உள்ளாக்கும்.
இந்த சமயங்களில் ஒரு சில வெற்றிலைகளை எடுத்துக்கொண்டு அதில் விளக்கெண்ணெய் தடவி கொடுப்பதன் மூலம் சரியாகும்.
பல் ஆரோக்கியம்
உணவுத் துணுக்குகள் ஆகியவை பல் இடுக்குகளில் மாட்டிக் கொள்கின்றது. எத்தகைய உணவை சாப்பிட்ட பிறகும், வெற்றிலைகளை நன்கு மென்று சாப்பிட்டால் அதன் சாறுகள் பற்கள் ஈறுகளில் தங்கியிருக்கும் கிருமிகளை அழிக்கின்றது.
பல் சொத்தை, பற்கூச்சம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுமால் தடுக்கின்றது.
கிருமி நாசினி
அது மட்டும் இல்லை வெற்றிலை ஒரு சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகின்றது. வெற்றிலை இயற்கையிலேயே மனிதர்களின் உடல் நலத்திற்கு உதவும் இயற்கை ரசாயனங்கள் அதிகம் கொண்ட ஒரு பயிர் செடியாகும்.
தொற்றுக்கிருமிகளால் நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சில துளிகள் வெற்றிலை அருந்துவது, அந்த நோய்க் கிருமிகள் அழிவதற்கு உதவும்.
காயங்கள், ஆறி வரும் புண்கள் போன்றவற்றிலும் வெற்றிலை சாறுகளை விட்டு வர, அதில் இருக்கும் கிருமிகள் அழியும். வலி, எரிச்சல் போன்றவையும் குறையும்.
சிறுநீரக பிரட்சனை
இதைவிட முக்கியமாக, சிறுநீரக கோளாறுகளையும் நீக்குகின்றது. சிறுநீரக உறுப்புகளில் பிரச்சனைகள் உள்ளவர்கள் கவலையயை விடுங்கள். வெற்றிலை இருக்கு.
தலை வலி
ஜுரம் போன்ற நோய்கள் ஏற்பட்ட காலங்களிலும், மற்ற வகையான உடல் நல பிரச்சனைகளாலும், சிலருக்கு தலை வலி உண்டாகின்றது.
தலை வலி ஏற்பட்ட சமயங்களில் வெற்றிலைகளை நன்கு கசக்கி அதன் சாற்றினை அருந்துவதால், உடனடியாக தலை வலி குறையும்.
மேலும், வெற்றிலை நெற்றியில் வைத்து ஒரு துணியால் கட்டிக்கொண்டு தூங்கினால், மீண்டும் எழுந்திருக்கும்போது தலை வலி முற்றிலும் நீங்கி இருக்கும்.
காது வலி
குளிர்காலங்களில், சிலருக்கு காதுகளில் வலி ஏற்படும். குறிப்பாக குழந்தைகளுக்கு, காதுகளில் வலி மற்றும் குடைச்சல் உணர்வு ஏற்படும்.
இந்த சமயங்களில் சிறிது வெற்றிலைகளை கொண்டு நன்றாக அரைத்து அதன் சாறுகளை இரண்டு காதுகளிலும் விடுவதால் காது வலி குறையும்.
காது குடைச்சல்கள் நீங்கி காதுகளில் இருக்கின்ற கிருமிகளையும் அழிக்கும்.
முக்கிய குறிப்பு
மேற்கண்ட விஷயங்கள் தாண்டி விருந்து போட்ட பிறகு வெற்றிலை போட முக்கிய காரணமே உணவு ஜீரணமாகத்தான்.
ஏனென்றால், நாம் உண்ணும் உணவுகள், நன்கு செரிமானம் ஆனால் மட்டுமே, உடலுக்கு தேவையான சக்திகள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
வெற்றிலைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் அந்த வெற்றிலையில் இருக்கும் இயற்கையான அமிலங்கள், வயிறு, குடல் போன்றவற்றில் இருக்கும் நச்சுக்கள், அழுக்குகள் நீக்கி, உணவு செரிமானம் செய்யும் திறனை அதிகரிக்கின்றது.
வெற்றிலை எலும்பையும் வலிமையாக்குகின்றது. இப்படி வெற்றிலையின் நன்மைகள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இதனையும் படிக்கலாமே
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil
- சுண்டலின் நன்மைகள் |Benefits of Chives
- நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)
- சுண்டைக்காய் பற்றி இது வரை அறியாத மறுத்துவ பயன்களின் பட்டியல்(Opens in a new browser tab)
- திராட்சை ஏன் சாப்பிடவேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
- பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்(Opens in a new browser tab)
- கத்திரிக்காய் சாப்பிடுவார்களா நீங்கள் கட்டாயம் படியுங்கள்(Opens in a new browser tab)
- நிலக்கடலை பயன்கள் | Nilakadalai payangal in Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்
12 Comments
Comments are closed.