விக்கல் நிற்க பாட்டி வைத்தியம் | Vikkal Nikka Enna seiya vendum

விக்கல் நிற்க பாட்டி வைத்தியம் | Vikkal Nikka Enna seiya vendum

ஜீரண மண்டலத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதற்கான அறிகுறி தான் விக்கல். வயிற்றிற்கும் மார்பு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் உதரவிதானம் எனப்படும் ஒரு தடுப்புச் சுவர் உள்ளது.

இந்த தடுப்புச் சுவர் வயிற்றையும் நுரையீரலையும் தனித்தனியாக பிரிக்கிறது. இயற்கையாகவே நாம் மூச்சை இழுக்கும் பொழுது நுரையீரலுக்கு ஆக்சிஜன் ஆனது செல்வதற்கு இந்த தடுப்புச் சுவர் மேலும், கீழும் ஆக இயங்கும்.

ஒரு சில சமயங்களில் மூச்சு விடும் பொழுது தடுப்புச் சுவர் மேலும், கீழும் ஆக இயங்கக்கூடிய சமயங்களில் நமது குரல்வளையானது மூடி இருக்கும் பொழுது விக்கல் ஆனது ஏற்படுகின்றது.

vikkal nikka enna seiya vendum

விக்கல் ஏற்பட காரணம்

நீண்ட நேரம் பசியுடன் இருந்த பின்பு உணவு கிடைத்ததும், அது காரமாக உணவாக இருந்தாலும் அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டோம் எனில் திடீரென விக்கல் ஏற்படும்.

ஒரு சிலருக்கு வயிறு நிறைய சாப்பிட்டால் விக்கல் உண்டாகும். இன்னும் ஒரு சிலருக்கு வயிறு முட்ட தண்ணீர் குடிப்பதனால் விக்கல் உருவாகும்.

கண்ணில் தண்ணீர் வரும் அளவுக்கு விழுந்து விழுந்து சிரிப்பதனால் கூட விக்கல் ஏற்படும்.

மேலும் ஒரு சிலருக்கு மன அழுத்தத்தால் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளால் கூட விக்கல் ஏற்படும்.

அனைவருக்குமே தெரிந்த ஒன்று விக்கல் வந்தால் சிறிது தண்ணீர் அருந்தினால் நின்று விடும் என்று, ஆனால் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் விக்கல் நிற்கவில்லை எனில் மருத்துவரை நாடித்தான் ஆக வேண்டும்.

தொடர் விக்கல் வர காரணம்

தண்ணீர் குடித்தும் விக்கல் நிற்கவில்லை

விக்கல் ஏற்பட்டால் ஒரு சில நிமிடங்களில் அது நின்று விட்டால் எந்த ஓத பிரச்சினையும் இல்லை.ஏனென்றால் அது சாதாரண விக்கலாக தான் இருக்கும்.

ஆனால் விக்கல் வந்து இரண்டு நாட்கள் ஆகியும் நிக்காமல் நீடித்தால் கண்டிப்பாக உடலில் ஏதோ பிரச்சினை உள்ளது என்றுதான் அர்த்தம்

அது காசநோய், கேன்சர், நுரையீரல் நெறி கட்டுதல், நரம்பு பாதிப்பு இதுபோன்ற தீவிரமான நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே விக்கல் நிற்காமல் நீடிக்கும் சமயங்களில் மருத்துவரை உடனடியாக சென்று பார்ப்பதே நல்லது.

விக்கல் நிற்க பாட்டி வைத்தியம்

சாதாரணமாக விக்கல் ஏற்படும்பொழுது இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தாலே நின்று விடும் இதனை கிராமப் பகுதிகளில் ஏழு மடக்கு தண்ணீர் 9 மடக்கு தண்ணீர் என்று சொல்வார்கள்.

விக்கல் ஏற்பட்ட உடனே ஒரு பெரிய டம்ளரில் தண்ணீரினை எடுத்து மூச்சு விடாமல் ஏழு முதல் ஒன்பது மடக்கோ குடித்தோம் என்றால் விக்கல் நின்றுவிடும் என்பார்கள்.

ஒரு சில விக்கல் வந்ததும் ஒரு தேக்கரண்டி நிறைய சர்க்கரை  அள்ளி வாயில் போட்டு சுவைத்து விழுங்கி விட்டு நீர் அருந்துவார்கள் அவ்வாறு செய்தாலும் விக்கல் நிற்கும்.

கை குழந்தைகளுக்கு விக்கல் ஏற்பட்டால் அவர்களின் உச்சந்தலையில் சிறு துரும்பினை கில்லி வைக்கச் சொல்வார்கள் முன்னோர்கள்.

இளம் குழந்தைகளின் தலையானது மிகவும் மென்மையான பகுதி, அந்தப் பகுதியில் துரும்பு வைப்பதன் மூலமாக விக்கல் நிற்கும் என்பது ஐதீகம்.

விக்கல் நிற்க பாட்டி வைத்தியம்

இது இன்று வரை பாட்டி வைத்திய முறையில் கையாளப்படுகின்றது, ஆனால் இது சரிவர யாரும் செய்வதில்லை.

அகத்திக் கீரை என்னை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டோம் என்றால் குடல் புண் ஏற்படுவதை தடுக்கலாம்.

அகில்கட்டை, சுக்கு, திப்பிலி மற்றும் சித்தரத்தை ஆகியவற்றினை சம அளவில் எடுத்து கசாயமாக செய்து குடித்து வந்தோம் என்றால் நுரையீரல் சார்ந்த நோய்கள் எதுவும் ஏற்படாது.

அம்மான் பச்சரிசி கீரையுடன் ஓமம், மஞ்சள் ஆகிய இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் ஆனது குணமாகும்.

அருகம்புல் சாறு குடித்து வந்தோம் எனில் வயிற்றுப்புண் ஏற்படாது.

அல்லி கிழங்கினை நன்றாக பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தோம் என்றால் தாகம் நீங்கும்

அன்னாசிப் பழ இழையினை நன்றாக இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து குடித்து வந்தோம் எனில் தீராத விக்கல் நிற்கும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

 

Related Posts

3 Comments

  1. Pingback: researchers

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning