பனங்கிழங்கு பயன்கள் | Pana Kilangu Benefits in Tamil
பனங்கிழங்கு அப்படின்னா என்ன? அதை எப்படி சாப்பிடலாம்? பனங்கிழங்கை சாப்பிட்டா நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதனை பற்றி விரிவாக பார்ப்போம்
பனங்கிழங்கு என்பது நேரடியாக மரத்தில் இருந்து கிடைப்பது கிடையாது. பனை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய பனம்பழத்தை மண்ணில் புதைத்து வைத்த பின்னர் ஒரு சில மாதங்களில் முளை விட்டு வளர ஆரம்பித்துவிடும்.
இப்படி முளைவிட ஆரம்பித்த உடனே நாம் அதனை தோண்டி பார்த்தல் நீளமான குச்சி போல இருக்கும். அதுதான் பனங்கிழங்கு.
இதை எப்படி சாப்பிடலாம்? என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றுகிறதா? அதன் தோலை நீக்கிய பின்னர் ஒரு பாத்திரத்திலே தண்ணீர் விட்டு சிறிது உப்பு மஞ்சள் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
கிழங்கு வெந்த பின்னர் அதன் நாரை மட்டும் நீக்கிவிட்டு அப்படியே சாப்பிடலாம். இல்லையெனில் வெந்தக்கிழங்கு கொஞ்சம் ஈரம் உலர்நத பிறகு அதனுடன் பூண்டு சீரகம் மிளகாய் உப்பு சேர்த்து அதனை நன்றாக அரைத்து உருண்டை உருண்டைகளா பிடித்து சாப்பிடலாம்.
இவ்வாறு சாப்பிடும்பொழுது மிகவும் ருசியுடனும் இருக்கும். பொதுவா, கிழங்கு வாயுவை உண்டாக்கும் என்று கூறுவார்கள். இதனுடன் நாம் நம்ம பூண்டு சேர்த்து சாப்பிடும்போது, இந்த வாய்த்தொல்லை பிரச்சனை கண்டிப்பாக வராது.
வேறு எப்படி எல்லாம் இந்த கிழங்கை பயன்படுத்தி சாப்பிடலாம்? என்று பார்ப்போம்.
பனங்கிழங்கை அப்படியே தோலோடு அவித்து வெந்த பிறகு அதன் தோலை மட்டும் நீக்கி சிறு சிறு துண்டுகளா நறுக்கி நன்கு காய வைக்க வேண்டும்.
நன்கு காய்ந்த பிறகு மாவு அறைக்கப்டும் இடத்தில கொடுத்தால் பனங்கிழங்கு மாவினை நமக்கு நன்றாக அரைத்து கொடுப்பார்கள். இதை பயன்படுத்தி, கூழ், கஞ்சி, தோசை என விதவிதமாக காலை உணவினை , செய்து சாப்பிட்டு வரலாம். மிகவும் உடலுக்கு நல்லது.
யாரெல்லாம் சாப்பிடலாம் என்றால் மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் உடல் எடையானது விரைவில அதிகரிக்கும்.
உடல் உஷ்ணம்
அது மட்டும் இல்லாமல், பனங்கிழங்கு, உடல் சூட்டை குறைக்கக்கூடியது. அதிக உடல் உஷ்ணத்தினால் அவதிப்படுபவர்கள் இந்த பனங்கிழங்கை சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறையும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுவர்கள் இந்த பனங்கிழங்கை சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக இயக்கி மலச்சிக்கலை போக்கும்.
கர்ப்பப்பை
பலகீனமான கர்ப்பப்பை உடைய பெண்கள் தேங்காய் பாலுடன் பனங்கிழங்கு மாவு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை வலுப்பெறும்.
இரும்புச்சத்து
அதிக இரும்புச்சத்து கொண்டது இந்த பனங்கிழங்கு என்பதனால். இரும்புச்சத்து குறைபாட்டினால் உண்டாகக்கூடிய ரத்த சோகை பிரச்சனையை குணமாக்கும்.
ரத்த சோகை பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் இந்த பனங்கிழங்கை சாப்பிட்டு வர ரத்த சோகை குணமாகும். அதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகளும் இந்த பனங்கிழங்கை தாராளமாக சாப்பிட்டு வரலாம். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பூமிக்கு அடியில் விளையக்கூடிய எந்த கிழங்கையும் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள்.
ஆனால் பனங்கிழங்கில் இருக்கக்கூடிய சில வேதிப்பொருட்கள் இன்சுலின் உற்பத்தியை தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்யும்.
ஆகவே இதன் மூலமாக ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு சீராக வைத்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
ஆகவே சர்க்கரை நோயாளிகளும் இந்த பனங்கிழங்கை சாப்பிட்டு வரலாம்.
வளரும் குழந்தைகள்
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது பசும்பாலுடன் பனங்கிழங்கு மாவு சேர்த்து காய்ச்ச , பிறகு அந்த பாலை குழந்தைகளுக்கு கொடுத்து வர குழந்தைகளின் உடல் வளர்ச்சி அதிகரிக்கும். உடல் வலிமை பெறும்.
இதனையும் படிக்கலாமே
- இலுப்பை எண்ணெய் பயன்கள் | Iluppai Oil Benefits(Opens in a new browser tab)
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil(Opens in a new browser tab)
- மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்(Opens in a new browser tab)
- பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil(Opens in a new browser tab)
- உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil(Opens in a new browser tab)
- முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்.
8 Comments
Comments are closed.