ஓமம் மருத்துவ பயன்கள் | Omam Benefits in Tamil

ஓமம் மருத்துவ பயன்கள் | Omam Benefits in Tamil

மிகச்சிறிய அளவிலான நறுமணம் மிக்க ஒரு மூலிகை விதைதான், ஓமம். இந்த ஓமம் அனைத்து வீட்டு சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள்.

ஓமம், வட இந்திய நாடுகளில் அதிகம் விளையக்கூடியது. வட இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஓமம் விதைகளானது நம் தினம் தோறும் சமையலில் சேர்த்து கொண்டு வருவதன் மூலமாக நல்ல சுவையினையும் மனத்தினையும் தருகிறது.

ஓமம் மருத்துவ பயன்கள் Omam Benefits in Tamil

செரிமானத்தை சீராக்குவதில் இருந்து பல் மற்றும் காது வலிகளை சரி செய்வது வரை பல நன்மைகளை வழங்கும்.

இதற்காக ஓமத்தை அன்றாட உணவில் சேர்த்து வரலாம். இல்லையெனில் ஓமத்திணை நீரில் நன்றாக ஊற வைத்து அந்த நீரினை குடித்து வரலாம்.

ஓமம் மருத்துவ பயன்கள் Omam Benefits in Tamil

ஓம நீர் தயாரிக்கும் முறை

ஓமத்தில் உள்ள முழு சத்துக்களையும் நீரின் மூலம் எளிதில் பெற முடியும். அதற்கு இரண்டு தேக்கரண்டி ஓமத்தை லேசாக வறுத்து, ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அடுத்த நாள் காலையில் ஓமத்தினை நன்றாக நசுக்கி தண்ணீரில் ஊற வைத்து அதனை வடிகட்டி குடிக்க வேண்டும்.

வாயு பிரச்சனை

வாயுத் தொல்லை நீங்க நாள்பட்ட வாயுத் தொல்லையால் கஷ்டப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால், ஓம நீரை தினமும் குடித்து வாருங்கள்.

இதனால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபடலாம். வாயுத் தொல்லை ஒருவருக்கும் ஏற்படுவதற்கு, உண்ணும் உணவுகள் அல்லது உடல் உழைப்பு இல்லாத, பல வாழ்க்கை முறை போன்றவை காரணங்களாகும்.

இந்த பிரச்சனையிலிருந்து நல்ல நிவாரணத்தை ஓம நீர் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஓமம் மருத்துவ பயன்கள் Omam Benefits in Tamil

எடை குறைய

எடை குறைய ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க வேண்டுமானால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும்.

எப்பொழுது உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகி முறையாக வெளியேற்றப்படுகிறதோ அப்போது உடல் பருமன் அடைவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.

ஓம நீரினை தினசரை குடித்து வருவதன் மூலமாக உண்ட உணவுகள் நன்கு செரிமானம் ஆகி உடல் எடையினை குறைப்பதற்கு பேருதவி புரிகிறது.

ஆரோக்கியமான செரிமானம்

ஓமம் ஒருவரது செரிமான சக்தியை மேம்படுத்தும். பொதுவாக எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு உப்புசத்தினால் அவஸ்தைப் படுவோம்.

அப்போது ஓமத்தை அல்லது ஓம நீரை ஒருவர் சாப்பிடும்போது அதில் உள்ள தைமூள் எனும் பொருளானதுவயிற்று பகுதியில் உள்ள செரிமான திரவத்தின் சுரப்பிற்கு உதவுகிறது. எனவே இது செரிமான செயல்பாட்டினை சீராக்கும்.

ஓமம் மருத்துவ பயன்கள் Omam Benefits in Tamil

அசிடிட்டி

அசிடிட்டி எனும் நிலை இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தால் ஏற்படுவதாகும். அசிடிட்டி வயிற்றில் கடுமையான எரிச்சலை உண்டாக்கும்.

சில சமயங்களில் நெஞ்சு, தொண்டை போன்ற பகுதிகளும் எரிச்சலுக்கு உள்ளாகும்.

ஒருவருக்கு அசிடிட்டியானது சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பது மற்றும் அளவுக்கு அதிகமாக கார உணவை உண்பது போன்றவற்றால் ஏற்படுவதாகும்.

எனவே அளவுக்கு அதிகமாக உட்கொண்டு அசிடிட்டி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், சோம்பு மற்றும் ஓமத்தை ஒன்றாக வாயில் போட்டு மெல்லுங்கள்.

இல்லாவிட்டால் ஓம நீரை குடியுங்கள்.

ஓமம் மருத்துவ பயன்கள் Omam Benefits in Tamil

நெஞ்சு சளி

சளி மற்றும் இருமலுக்கான ஒரு பாரம்பரிய வீட்டு வைத்தியம்தான். ஒரு டம்ளர் ஓமநீர்.அதிலும் நீரில் ஓமத்துடன், சிறிது துளசி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி பருகினால் நெஞ்சு சளி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

இதனையும் படிக்கலாமே

அவைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும.

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning