நாவல் பழம் பயன்கள் தீமைகள் | Naaval Pazham in Tamil

நாவல் பழம் பயன்கள் தீமைகள் | Naaval Pazham in Tamil

நாவல் பழம் பயன்கள் தீமைகள் Naaval Pazham in Tamil

அந்தந்த கால நிலைக்கு ஏற்ப கிடைக்க கூடிய கிடைக்கும் பழங்களை தவறாமல் உட்கொண்டு வந்தாலே பல நோய்கள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

பொதுவாக பழங்களில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் நார்ச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியவை.

அதிலும் நாவல் பழத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் புரதம், கால்சியம் வைட்டமின் பி, வைட்டமின் சி , பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளன.

நாவல் மரத்தின், பழம், விதை, இலை, பட்டை என அனைத்து பகுதிகளும் மிகுந்த மருத்துவ குணங்களை உடையவை.

நாவல் பழத்தை அளவுடன் சாப்பிட்டால், அதிக நன்மைகள் கிடைக்கும். அதே போன்று அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் அஜீரணம் பசியின்மை என ஒரு சில உடல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இப்போது நாவல் பழத்தின் சிறந்த மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம்.

நாவல் பழம்  பயன்கள் தீமைகள்  Naaval Pazham in Tamil

உடல் சூடு

நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அளவுடன் தினமும் எடுத்துக் கொண்டு வந்தால் உடலில் உள்ள பித்தம் மற்றும் உடற் சூட்டை தணிக்கும். நாவல் பழம் அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. அதனால் இதை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதய ஆரோக்கியம்

இதயம் சீராக இயங்குவதற்கும், இதயம் தொடர்பான நோய்கள் வராம இருப்பதற்கும் துவர்ப்பு சுவை அவசியம் தேவைப்படுகிறது.

நாவல் பழத்தில் துவர்ப்பு சுவை அதிகம் நிறைந்துள்ளதால், இப்பழத்தை உட்கொண்டு வருவதன் மூலம், இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

நாவல் பழம்  பயன்கள் தீமைகள்  Naaval Pazham in Tamil

சிறுநீரக கற்கள்

சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்களுக்கு, நாவல் பழம் மற்றும் அதனுடைய விதை சிறந்தாக பயன்படுகிறது.

நாவல் பழம் உட்கொண்டு வரும்பொழுது, சிறுநீரக கற்கள் படிப்படியாக கரைய தொடங்கும்.

வயிற்று புண்

வயிற்று புண், குடற்புண், நெஞ்சு எரிச்சல் போன்ற பாதிப்புகளை, குனமாக்கும் தன்மை, நாவல் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது.

சர்க்கரை சத்து அதிகம் உள்ளவர்கள் நாவல் பழம் கிடைக்கும் காலங்களில், தவறாமல் எடுத்து கொண்டு வருவது சிறந்தது.

நாவல் பழம்  பயன்கள் தீமைகள்  Naaval Pazham in Tamil

சர்கரை

நாவல் பழத்தின் விதைய, பொடி செய்து, அதை சிறிதளவு மட்டும் வெந்நீரில் கலந்து, தினமும் அருந்தி வரும் பொழுது ரத்தத்தில் உள்ள அதிக அளவு சர்க்கரை அளவு குறைய தொடங்கும்.

கல்லீரல் பாதுகாப்பு

கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல் தொடர்பான பாதிப்புகளை சரி செய்யும் தன்மை, நாவல் பழத்திற்கு உண்டு.

இப்பழத்தை உட்கொண்டு வரும் பொழுது கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தை குறைத்து அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

நாவல் பழம்  பயன்கள் தீமைகள்  Naaval Pazham in Tamil

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நாவல் பழத்தை உட்கொண்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைந்து சீராக இருக்கும்.

எலும்புகளின் வலிமை

இப்பழத்தில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்து காணப்படுவதால், எலும்புகளின் வலிமை மற்றும் எலும்பின் ஆரோக்கியத்தினை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

ரத்த சோகை

நாவல் பழத்தில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் ரத்தத்தில் இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவதற்கு துணையாக உள்ளது.

இதனால் அதிக அளவில் ரத்த அணுக்கள் உற்பத்தியாகி, ரத்த சோகையை விரைவில் குறைககிறது.

புற்று நோய்

நாவல் பழத்தில் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் வளமாக நிறைந்துள்ளன.

இப்பழத்தை உட்கொண்டு வரும்பொழுது, புற்று நோய்க்கு தேவையான எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குகிறது.

நாவல் பழம்  பயன்கள் தீமைகள்  Naaval Pazham in Tamil

மிக முக்கியாமாக

நாவல் பழத்தை, கர்ப்பிணிப் பெண்கள் முதல் நான்கு மாதங்கள் வரைக்கும் தவிர்ப்பது சிறந்தது.

நான்கு மாதத்திற்குப் பிறகு இப்பழத்தை நான்கு அல்லது ஐந்து என அளவுடன் உட்கொண்டு வருவது நன்மையை கொடுக்கும்.

இதனையும் படிக்கலாமே

கட்டாயம் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை படிக்கவும்

Related Posts

2 Comments

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning