மங்குஸ்தான் பழம் பயன்கள் | Mangustan Fruit Benefits

மங்குஸ்தான் பழம் பயன்கள் | Mangustan Fruit Benefits

மங்குஸ்தான் பழம் பயன்கள் Mangustan Fruit Benefits

ஆரம்பக் காலத்தில் தாய்லாந்து, சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் மட்டுமே பயிரிடப்பட்டு விற்பனைக்கு வந்த மங்குஸ்தான் பழம், இப்பொழுது இந்தியாவிலும் பயிரிடப்பட்டு தமிழகம் எங்கும் கிடைக்கின்றது.

உங்கள் ஊரில் உள்ள பழ அங்காடி அல்லது பழமுதிர்சோலையில் இப்பழத்தைப் பார்த்தால் கண்டிப்பாக அதனை வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள், மிகவும் சுவையாக இருக்கும்.

அதுமட்டுமின்றி, மங்குஸ்தான் பழத்தில் எண்ணிலடங்கா மருத்துவ நன்மைகள் இருக்கிறது.

இப்பதிவில் மங்குஸ்தான் பழத்தின் அற்புதமான மருத்துவ பயன்களைப் பற்றிப் பார்ப்போம்.

உடல் இடை

உடற் கொழுப்பை அல்லது உடல் இடையைக் குறைக்க நினைக்கும் அனைத்து மக்களும் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒரு பழமாக மங்குஸ்தான் இருக்கிறது.

இந்த மங்குஸ்தான் பழத்தைத் தினம் ஒரு முறை மூன்று வாரங்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் இடையை எட்டு கிலோ வரைக் குறைக்க முடியும்.

மங்குஸ்தான் பழம் பயன்கள் Mangustan Fruit Benefits

இதயம்

நம் உடலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய முக்கிய உறுப்புகளில் ஒன்று இதயம் என்று சொன்னால் மிகையாகாது.

உடலில் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை அனுப்பும் அற்புதமான பணியைச் செய்யும் இதயம் ஆரோக்கியமாக இருக்க மங்குஸ்தான் பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.

இதில் உள்ள ஒமேகா 6 வேதிப் பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தியைக் கொண்டதாகும்.

உடற் கொழுப்பு

நன்மை பயக்கும் கொழுப்புகள் உடலில் அளவுக்கு அதிகமாகச் சேர்ந்து விட்டால் அதனை கொலஸ்டிரால் என்பர்.

இந்த தேவையற்ற உடற் கொழுப்பு பிரச்சனையைப் போக்க மங்குஸ்தான் பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது.

இதில் உள்ள பெக்டின் எனப்படும் நார்ச் சத்துப் பொருள் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளைக் கரைத்து கொலஸ்டிரால் அளவை சமப்படுத்துகின்றது.

மங்குஸ்தான் பழம் பயன்கள்  Mangustan Fruit Benefits

காசநோய்

மங்குஸ்தான் பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால் காசநோய் என்ற பெரும் நோய் வேகமாகக் குணம் அடையும்.

சான்தொன்ஸ் என்னும் முக்கியமான ஒரு திரவம் மங்குஸ்தான் பழத்தில் இருக்கிறது. இந்த திரவம் காசநோயைக் குணமாக்கும் மருத்துவ பலனைக் கொண்டது.

புற்று நோய்

உலகிலேயே மிகவும் மோசமான நோயாகப் பார்க்கப்படுவது, புற்று நோய். அந்த கொடூரமான புற்று நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மருதுவா குணம் நிறைந்த பழமாக மங்குஸ்தான் திகழ்கிறது.

கண் பார்வை

நமது உடலின் முக்கிய உருப்பான கண்களின் பார்வைத் திறன் தெளிவாக இருக்க உயிர்ச்சத்து A (விட்டமின் A), அஸ்கார்பிக் அமிலம், நிகோடினிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியமாகும்.

மங்குஸ்தான் போன்ற பழங்களில் இந்த சத்துகள் அதிகம் இருக்கின்றன. எனவே, மங்குஸ்தான் பழங்களைத் தினம்தோறும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிடுவது கண் பார்வை திறனை மேம்பட வைக்க உதவும்.

மங்குஸ்தான் பழம் பயன்கள்  Mangustan Fruit Benefits

தோல் சுருக்கம்

வயதாவதாலும் அல்லது ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் சிலருக்குத் தோலில் வறட்சி ஏற்பட்டுத் தோல் சுருக்கங்களும் வயதான தோற்றமும் ஏற்படுகின்றது.

இது போன்ற நிலையில் இருப்பவர்கள் மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் தோலில் பளபளப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாகும். தோல் சுருக்கங்கள் நீங்கும்.

மலச்சிக்கல்

மங்குஸ்தான் பழத்தில் நார்ச் சத்து அதிகம் இருக்கிறது. எனவே, இந்த மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.

மங்குஸ்தான் பழம் பயன்கள் Mangustan Fruit Benefits

வயிற்றுப் புண்

குடலின் சீரான இயக்கத்திற்கும் குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த மங்குஸ்தான் பழம் உதவுகிறது.

மங்குஸ்தான் பழத்தைச் சுவைத்துச் சாப்பிட்டு விட்டு அதன் தோலைக் காயவைத்துப் பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும், வயிற்றுப் புண், வாய்ப் புண் குணமடையும்.

உணவு குழையில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் கொள்ளும். சிறுநீர் நன்றாக வெளியேற்றக் கூடிய சக்தி மங்குஸ்தான் பழத்தின் மருத்துவ தன்மைகளுள் ஒன்றாகும்.

உதிரப் போக்கு

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிக ரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவும். பருவ காலங்களில் மங்குஸ்தான் பழங்களை வாங்கி சாப்பிடுவது நல்லது.

அல்லது, இதனைப் பானகமாகக் குடிக்க, மங்குஸ்தான் பழத்தின் தோலை உரித்து, அதனை காயவைத்துப் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் அதிக ரத்தப் போக்கு குறையும்.

மங்குஸ்தான் பழம் பயன்கள் Mangustan Fruit Benefits

தலைவலி

கணினியில் வேலை செய்யும் இளையத் தலைமுறையினருக்குப் பொதுவாகக் கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சல் உண்டாகும்.

இதனால், சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்கு உள்ளவர்கள். இது போன்ற வலிகள் இருப்பவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி நரம்புகள் மறு மலர்ச்சி பெரும்.

கல்லீரல்

உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்க மங்குஸ்தான் பழம் பெரும் உதவிபுரிகிறது.

மங்குஸ்தான் பழம் கல்லீரலில் சேரப்படும் போதைப் பொருட்களின் நச்சுகள் சுத்திகரிப்பு செய்து உடலைச் சீரான வேலை செய்ய உதவுகிறது.

மங்குஸ்தான் பழம் பயன்கள்  Mangustan Fruit Benefits

இதனையும் படிக்கலாமே

கட்டாயம் அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை படிக்கவும்.

Click to play Video 

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning