கீழாநெல்லி மருத்துவ பயன்கள் | Keelanelli Uses in Tamil
கீழாநெல்லியைப் பிழிந்து சாறு எடுத்து அதனை தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நின்றுவிடும்.
முறையான மாதவிலக்கு
கீழாநெல்லி இலை, தும்பை இலை, சம அளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து இரண்டு வேளை குடித்து வர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.
மஞ்சள் காமாலை
கீழாநெல்லி இலை, தும்பை இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சம அளவாக எடுத்து அரைத்து பாக்கு அளவு ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து இரண்டு வேளை குடித்து வர எப்பேற்பட்ட மஞ்சள் காமாலை ஆனாலும் குணமாகும்.
தோல் வியாதிகள்
கீழாநெல்லி, வெள்ளை பரங்கிபட்டை, ஆடுதீண்டா பாலை, பெரியாநங்கை வகைக்கு சம அளவாக எடுத்து இடித்து, பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி அளவாக தொடர்ந்து, இரண்டு வேளை சாப்பிட்டு வரதோல் வியாதிகள், கருங்குற்றம், வெண்குஷ்டம், சிறுநீர் வழியில் புண், சர்க்கரை வியாதி குணமாகும்.
சிறுநீர் எரிச்சல்
கீழாநெல்லி இலை, ஓரிதழ் தாமரை இலை, யானை நெருஞ்சில் மூன்றையும் வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஒரு டம்ளர் எருமை தயிரில் பத்து நாட்கள் காலையில் சாப்பிட்ட வர. சிறுநீர் எரிச்சல், ரணம், வெள்ளை ஒழுக்கு குணமாகும். மருந்து செரிமானம் ஆன பிறகு காரமும், சூடும் இல்லாத உணவு உண்ணலாம்.
சொறி, சிரங்கு
கீழாநெல்லி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு உள்ள இடங்களில் தடவினால் குணமாகும்.
நீர் சுருக்கு நோயினால் அவதிப்படுகிறவர்கள் கீழாநெல்லி இலையுடன் சீனா கற்கண்டு சேர்த்து மை போல அரைத்து இரு வேளைகள் என ஒரு வாரம் சாப்பிட்டால் உடனே சரியாகிவிடும்.
கீழாநெல்லி இலையுடன் உப்பு சேர்த்து தடவி, குளிக்க, சொறி, சிரங்கு, நமைச்சல் நீங்கும்.
பல் கூச்சம்
பல் கூச்சம் இருந்தால் கீழாநெல்லியின் வேரை வாயில் போட்டு இரண்டு நிமிடம் நேரம் மென்றால் போதும். உடனே, பல் கூச்சம் போய்விடும்.
கல்லீரல்
சிறிது சீரகத்துடன் கீழாநெல்லியை வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்த்து பருகி வர, கல்லீரல் கோளாறுகள் குணமாகும்.
இரத்தம் அதிகரிக்க
கீழாநெல்லியின் வேர், பட்டை, செடி, அனைத்தும் சமூளம் அரைத்து ஒரு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து காய்ச்சின பசும்பாலில் கலக்கி இரண்டு வேளை தினம் உண்டு வர மேக வெட்டை என்ன AIDS தீர்வதுடன் ரத்தம் உடலில் அதிகரிக்கும். மருந்து உண்ணும் காலத்தில் சைவ உணவு வகைகள் உண்பது மிகவும் நல்லது.
கணை நோய்
கீழாநெல்லியின் இலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை வெள்ளாட்டு பாலிலோ அல்லது பசும்பாலிலோ கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை கணை நோய் சம்பந்தப்பட்ட ரோகங்கள் விலகும்.
கடும் ஜுரம்
கீழாநெல்லி சமூலம் முப்பது கிராம், நாலு மிளகுடன் சிதைத்து இரண்டு டம்ளர் நீரில் போட்டு ஒரு டம்ளராக சுண்ட காய்ச்சி மூன்று வேளை குடித்து வர கடும் ஜுரம், தேக எரிச்சல் நீங்கும்.
சீதபேதி
கீழாநெல்லி இலையுடன் மாதுளம், நாவல் கொழுந்து இவைகளை சம அளவாக எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மோரில் கலக்கி குடித்து வர சீதபேதியை நிறுத்தும்.
கண்
மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து நீங்க வேண்டுமானால் கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலையை சம அளவாக எடுத்து அரைத்து கழற்சிக்காய் அளவு ஒரு டம்ளர் மோரில் கலக்கி நாற்பத்தி ஐந்து நாட்கள் சாப்பிட வேண்டும். இதை பயன்படுத்தி நற்பலன் பெறுங்கள்.
மேலும்
கீழாநெல்லியுடன் சிவனார் வேம்பு, குப்பைமேனி இவற்றை சம அளவாக எடுத்து வெயிலில் ஈரம் போக லேசாக உலர்த்தி அதை மறுபடியும் பசுமை போகாத பதத்துடன் நிழலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி சுண்டக்காய் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் அல்லது வெந்நீரில் கலந்து இரண்டு வேளை குடித்து வர படை, பற்று, சொறி, சிர கரப்பான் பூச்சிக்கடி, விஷம் நீங்கும். தொடர்ந்து குடித்து வர உடல் சூடு, வீக்கம், சிறுநீர் தடை, சர்க்கரை நோய், சீதபேதி, கண் பார்வை குறைவு குணமாகும்.
இதனையும் படிக்கலாமே
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil(Opens in a new browser tab)
- இலுப்பை எண்ணெய் பயன்கள் | Iluppai Oil Benefits(Opens in a new browser tab)
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil(Opens in a new browser tab)
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
11 Comments
Comments are closed.