கருப்பு கவுனி அரிசி பயன்கள் | Karuppu Kavuni Rice Benefits in Tamil

கருப்பு கவுனி அரிசி பயன்கள்  | Karuppu Kavuni Rice Benefits in Tamil

கருப்பு கவுனி அரிசி ஒரு காலத்தில் அரசர்களும் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்திட்டு வந்த ஒரு அற்புதமான அரிசிதான் இந்த கருப்பு கவுனி அரிசி.

அதிக மருத்துவ குணம் வாய்ந்த அரிசி என்பதினால் இதன் பயனை அறிந்து சாமானிய மக்களும் பயன்படுத்த ஆரம்பித்த போது இந்த அரிசிக்கு, தட்டுப்பாடு ஏற்பட சாமானிய மக்கள் இந்த அரிசியை பயன்படுத்தக் கூடாது என்ற தடைச்சட்டம் இயற்றப்பட்ட வரலாறும் இந்த அரிசிக்கு உண்டு.

இதன் காரணமாகத்தான் இதனை தடை செய்யப்பட்ட அரிசி அல்லது foreign rice எனவும் அழைக்கப்படுகிறது.

அப்படி இந்த அரிசியில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதனை பற்றி பார்ப்போம்.

இதில் அதிகப்படியான புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாசின், கால்சியம், மெக்னீசியம் என கருப்பு கவுனி அரிசியில் இல்லாத சத்துக்களே இல்லை என்று சொல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு உடலுக்குத் தேவையான ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல்களைக் கொண்டது கருப்பு கவுனி அரிசி.

black rice in tamil

கெட்ட கொலஸ்ட்ரால்

கருப்பு கவுனி அரிசியில் அந்தோசயனின்,ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் நார்ச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது.

இது உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றும். குறிப்பாக உடலில் இருக்கக்கூடிய LDL மற்றும் ட்ரைகிளிசரைடு போன்ற கெட்ட கொலஸ்ட்ரால் கரைத்து HDL என்ற நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

இரத்த குழாய்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பையும் கரைத்து வெளியேற்றும் ஆற்றல் இந்த கருப்பு கவுனி அரிசிக்கு உண்டு.

ஆகவே இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்களும், இந்த கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டு வரலாம். மிகவும் நல்லது.

புற்றுநோய்

கருப்பு கவுனி அரிசி கருப்பு நிறத்தில் இருப்பதற்கு இதில் இருக்கக் கூடிய அந்தோசயனின் சொல்லக்கூடிய நிறமிச் சத்து அதிகம் இருப்பதுதான் காரணம்.

இது ஒரு, சிறந்த அழற்சி எதிர்ப்பு மட்டும் இல்லாமல் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகம் கொண்ட அரிசி.

இது உடலில் புற்றுநோய் உண்டாக்கக் கூடிய காரணிகளை அழிப்பதோடு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தும்.

குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமலும் தடுக்கும் ஆற்றல் இந்த கருப்பு கவுனி அரிசிக்கு உண்டு.

கருப்பு கவுனி அரிசி மருத்துவ பயன்கள்

செரிமானம்

செரிமானம் சீராக நடைபெற உதவி செய்யும். நூறு கிராம் கருப்பு கவுனி அரிசியில் 4.9 கிராம், நார்ச்சத்து அடங்கி உள்ளது.

இது மற்ற அரிசிகளை விட நான்கு மடங்கு அதிகம். நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணம் ஆக நார்ச்சத்து மிகவும் அவசியமான ஒன்று.

ஆகவே செரிமானம் சார்ந்த பிரச்சனைகளான வயிறு உப்புசம், வயிறு இரைச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சனையினால், அடிக்கடி அவதிப்படுபவர்கள் இந்த கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டு வர மிகவும் நல்லது.

கலீரல்

கருப்பு கவுனி அரிசியை ஒரு இயற்கை நச்சு என்று தான் சொல்லணும். ஏன் என்று பார்த்தால் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் அமினோ அமிலங்கள் உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றி கல்லீரலை சுத்தப்படுத்தும்.

கல்லீரலில் இருக்கக்கூடிய செல்களையும் புதுப்பிக்கும் ஆற்றல் இந்த கருப்பு கவுனி அரிசிக்கு உண்டு.

இது உடலில் இருக்கக்கூடிய மெட்டபாலிசத்தை சீராக இயக்கி ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

karuppu kavuni rice benefits in tamil

சர்க்கரை நோய்

அரிசி வயதிலேயே மிகக் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மிக அதிக அளவிலான நார்ச்சத்தும் கொண்ட அரிசி இந்த கருப்பு கவுனி அரிசி.

இது ஒரு குறைந்த கிளைசெமிக் குறியீடு அரிசி. இது ரத்தத்தில் மெல்ல, மெல்ல சர்க்கரையாக மாறும் தன்மை உடையது.

இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவது தடுக்கப்படும். எனவே சர்க்கரை நோயாளிகளும் எந்த பயமும் இல்லாமல் இந்த கருப்பு கவுனி அரிசியை சாப்பிட்டு வரலாம்.

இரத்த சோகை

உடலில் புதிய சிவப்பணுக்களின் உற்பத்திக்கு மிகவும் அவசியமான சத்து இரும்புச்சத்து. கருப்பு கவுனி அரிசியில் மிக அதிக அளவிலான இரும்பு சத்து அடங்கி உள்ளது.

எனவே இரத்த சோகை போன்ற பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் இந்த கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டு வர ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

உடல் எடை

அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்கள் இந்த கருப்பு கவுனி அரிசியை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.

இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் ஆங்காங்கே தேவையில்லாமல் இருக்கும் கொழுப்பையும் கரைத்து வெளியேற்றும்.

இதன் மூலமாக உடல் எடையும் வேகமாக குறையும்.

kavuni arisi benefits in tamil

நோய் எதிர்ப்பு சக்தி

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான புரதம், இரும்பு சத்து என பல்லூட்டச்சத்துக்கள் நிறைந்த அரிசி இந்த கருப்பு கவுனி அரிசி.

இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும்.

இதன் மூலமாக பல்வேறு நோயிலிருந்தும், நம்மை பாதுகாக்கக்கூடியது, இந்த கருப்பு கவுனி அரிசி.

அலர்ஜி

தோலில்அலர்ஜி எரிச்சல் புண்கள் என அலர்ஜி சார்ந்த பிரச்சனையால் அவதிப்படுறவங்களுக்கு மிகச்சிறந்த உணவு இந்த கருப்பு கவுனி அரிசி.

உடலில் உள்ள ரசாயன கழிவுகளின் மாற்றமே உடலில் பல்வேறு விதமான அலர்ஜி உண்டாவதற்கு காரணம்.

ரசாயன மாற்றங்களை கட்டுப்படுத்தி உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளையும் வெளியேற்றும் ஆற்றல் இந்த கருப்பு கவுனி அரிசிக்கு உண்டு.

 இதனையும் படிக்கலாமே

அனைவரையும் வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning