அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்
கரும்பு ஜூஸ் பயன்கள்
உடலிற்கு ஏராளமான நன்மைகளை அளிக்கும் கரும்பின் எண்ணற்ற மருத்துவ குணங்களைப் பற்றி பார்க்கலாம்.
தை மாதத்தில் அதிகமாக கிடைக்கும் கரும்பில் உடலுக்கு தேவையான அணைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.
கரும்பில் உள்ள சத்துக்கள்
- இரும்புச்சத்து
- பொட்டாசியம்
- தாமிரம்
- மெக்னீசியம்
- பாஸ்பரஸ்
- துத்தநாகம்
- வைடமன் ஏ
- வைடமன் பி
- காம்ப்லெக்ஸ்
- வைடமன் சி
எனவே கரும்பு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிகச் சிறந்த உணவாக பயன்படுகிறது.
கரும்பில் உள்ள அன்டிஆக்ஸடன்ட் குணங்கள் புற்றுநோய் செல்களுக்கு சிறந்த எதிர்ப்பு பொருளாக பயன்படுகிறது.
கரும்புச்சாறு அடிக்கடி அறிந்து பவர்களுக்கு கல்லீரல் புற்றுநோய், நுரையீரல் மற்றும் சிறுநீரக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
கரும்புச் சாற்றினை அருந்தி வரும்பொழுது உடலில் ஏற்படும் டி என் ஏ சேதத்தை தடுத்து உடல் உறுப்புகளை வலுப்படுத்துகிறது.
சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்புச் சாற்றினை அடிக்கடி அருந்துவது நல்லது.
இது சிறுநீரகங்களை சிறப்பாக செயல்பட உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது.
சிறுநீர் பாதை தொற்று மற்றும் எரிச்சலை சரி செய்யக் கூடியது.
உடல் வறட்சி உள்ளவர்கள் அடிக்கடி கரும்புச் சாறு அருந்துவது சிறந்தது.
இதில் உள்ள அதிக நீர்ச்சத்தும், மருத்துவ பண்புகளும் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து அளித்து உடல் வறட்சியை தடுக்கிறது.
கரும்பில் மஞ்சள் காமாலையை எதிர்த்துப் போராடும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளதால், கரும்பு சாற்றில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து அருந்தி வந்தால், கல்லீரல் மற்றும் பித்தப்பையின் ஆரோக்கியத்தை அதிகரித்து, மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பை குறைக்கிறது.
கரும்பு செரிமான பிரச்சனைகளை சரி செய்யக்கூடியது. கரும்பு சாப்பிடுவதன் மூலமாக நாம் சாப்பிட்ட உணவுகள் எளிதில் செரிமானம் அடைய உதவுகின்றது.
பசியைத் தூண்டி, வயிறு மற்றும் குடல் போன்ற செரிமான உறுப்புகளை பலப்படுத்துகிறது.
கரும்பில் செங் கரும்பு மற்றும் வெண் கரும்பு என்ற இரு வகைகள் உள்ளன.
வெண் கரும்பில் உள்ள பண்புகள் இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக கலக்கும் தன்மை கொண்டுள்ளதால், சர்க்கரை சத்து உள்ளவர்கள் இதனை அளவுடன் சாப்பிட்டு வருவது நல்லது.
கரும்பை கடித்து சாப்பிடும் பொழுது, பற்கள் மற்றும் வாய் பகுதியில் உள்ள கிருமிகள் அழிந்து பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது.
கரும்பில் உள்ள இயற்கையான வேதிப்பொருள், இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் பண்பு கொண்டது.
உடற்பருமன் உள்ளவர்களுக்கு கரும்பும் அதன் சாறும் சிறந்த உணவாக பயன்படுகிறது.
உடலில் உள்ள அதிக அளவு பித்தத்தை சீராக்கி, சமநிலைப்படுத்துகிறது.
உடல் சூட்டைக் குறைத்து, உடலின் தட்பவெப்ப நிலையை சீராக்குகிறது.
இத்தனை நன்மைகளை அளிக்கக்கூடிய கரும்பு மற்றும் அதன் சாற்றை அனைவரும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க முடியும்.
நமது உடலில் அதிக பலம் தசை பகுதிகளில் உள்ளது. தசை பகுதி வலுவுடன் இருக்க குளுக்கோஸ் சத்து சமநிலையில் இருக்க வேண்டும்.
தினமும் ரும்புச் சாறு அருந்துவதால் உடலிற்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்கிறது.
நாம் தினசரி சாப்பிடுகின்ற உணவிலும், சுவாசிக்க கூடிய காற்றினிலும்,அருந்தக்கூடிய நீரிலும் மாசு கலந்து இருக்கிறது.
கரும்பானது உடலில் உள்ள நச்சுக்களையும் மாசுகளையும் நீக்க உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது.
கரும்பு சாப்பிடுவதனால் உடலில் உள்ள தேவைற்ற நச்சுகள் வியர்வை சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.
இதனையும் படிக்கலாமே
முருகை மரத்தின் பயன்கள் | Moringa Tree Benefits
தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா
மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits
நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?
முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?
English Overview
17 Comments
Comments are closed.