உயிர்க்கே ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள் | Dangerous Foods in Tamil
Dangerous Foods in Tamil நமது ஆரோக்கியம் என்பது நிச்சயம் நாம் சாப்பிடும் உணவில்தான் உள்ளது. ஆனால் நாம் இன்றோ உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிடுகிறோம்.
உண்மையில் இது போன்ற உணவுகளை தொடர்ந்து சாப்பிடு பொழுது, உடல் பருமனில் ஆரம்பித்து, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட பல ஆபத்தான நோய்களை கொண்டு வந்து விடுகிறது.
அதே சமயம் இன்றைக்கு நாம் திரும்பும் பக்கமெல்லாம் இந்த உணவுகள்தான். இதன் சுவை, நிறம் போன்றவை மீண்டும் சாப்பிடத் தூண்டும் வகையில் உள்ளது.
ஆனால் இந்த உணவுகள் நம் உடலில் என்னவெல்லாம் தீமைகள் செய்கிறது? என்று உங்களுக்குத் தெரிந்தால் இந்த உணவுகளின் பக்கம் திரும்ப கூட மாட்டீர்கள்.
மோரிஸ் வாழைப்பழம்
பெங்களூர் வாழைப்பழம் என்று அழைக்கப்படும் இந்த மோரிஸ் பழங்கள் பார்க்க கண்ணைக் கவரும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
இவைகள் திசு வளர்ப்பு என்னும் முறையில் நடவு செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு வாழையாகும். இது முற்றிலும் வியாபார நோக்கத்திற்காக மட்டுமே விளைவிக்கப்பட்டதாகும்.
இதன் உருவாக்கத்தில் கரப்பான் பூச்சி மற்றும் காட்டுப்பூச்சிகளின் ஜீன்கள் சேர்க்கப்படுவதாகக் கூறபடுகிறது.
அதாவது வாழையில் பூச்சிகளால் வரும் தண்டு அழுகல் நோயை கட்டுப்படுத்தி, விளைச்சலை துரிதப்படுத்தி, பொருளாதார நோக்கத்திற்கு மட்டுமே உருவாக்கப்பட்டது.
முக்கியமாக இதில் ஒரு வாழைமரம் ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணு மற்றம் செய்ய பட்டு செயற்கையாக மரமாக்கபட்டது.
இந்த பழத்தை தினமும் சாப்பிடு பொழுது நமக்கும் மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல ஒவ்வாமை, தோல் அழற்சி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
எனவே இந்த மோரிஸ் பழங்களை சாப்பிடுவதை தவிர்த்து நம் நாட்டு பழங்களை வாங்கி சாப்பிடுங்கள்.
உயிர்க்கே ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள் | Dangerous Foods in Tamil
செயற்கை குளிர்பானங்கள்
செயற்கை சர்க்கரை கலந்த பழச்சாறுகள் குளிர்பானங்கள் மூளைக்கு முற்றிலும் தீங்கு விளைவிக்கக்கூடியவை.
கடைகளில் விற்கப்படும் குளிர்பானம் என்பது அதிக அளவில் பிரக்டோஸ்எனும் சர்க்கரையும், கார்பன் டை ஆக்சைடும் கலக்கப்பட்ட உடலுக்கு கெடுதல் தரும் பானமாகும்.
இதில் எந்தவித ஊட்டச்சத்தும் இருக்காது. இவற்றி குடிப்பதால் உடலுக்கு எந்தவித ஆற்றலும் கிடைக்காது. உண்மையில் இவைகளெல்லாம் எடையை அதிகரிப்பதோடு எலும்புகளில் உள்ள கால்சியத்தையும் குறைக்க செய்கிறது.
மேலும் அல்சைமர் நோய் என்ற மறதி நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயையும், ஏற்படுத்தக்கூடியவை.
முக்கியமாக இதில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்புகள் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தி இரைப்பை மற்றும் நாளமில்லா சுரப்பிகளை செயலிழக்க செய்கிறது.
அதுமட்டுமல்ல இதில் செயற்கை சுவையூட்டிகள் செயற்கை நிறமூட்டிகள், பதப்படுத்தும் வேதிப்பொருட்கள் போன்றவையும் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன.
இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தை தரக்கூடிய இந்த வேதிப்பொருட்கள் நிச்சயம் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
மைதா உணவுகள்
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மைதா உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு தொண்ணூறு சதவீதம் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது.
எனவே, எந்த சத்தும் இல்லாத, வெறும் carbohydrate மட்டும் உள்ள மைதா உணவுகளை அதிகம் எடுத்து வந்தால் முதலில் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்.
இதனால் உடல் பருமனில் தொடங்கி, இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் வரக்கூடும். அதிலும் இன்று உடல் உழைப்பு குறைந்து வரும் நிலையில் தொடர்ந்து சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.
முக்கியமாக இது அதிக அளவு கிளைசெமிக் கொண்டது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது ரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும்.
அதுமட்டுமல்ல செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும். எனவே சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல அனைவருமே மைதா உணவுகளை தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகள்
அப்பொழுதெல்லாம் தீனிகளை வீட்டில் செய்து கொடுப்பார்கள். சிறுதானியத்தில் செய்த உணவுகள் அவல் போன்ற உணவுகள் இப்படி ஆரோக்கியமான உணவுகளை செய்து கொடுப்பார்கள்.
இன்றோ அப்படி இல்லை. இன்றைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவே பாக்கெட் உணவுகள்தான். உருளைக்கிழங்குசிப்ஸ் விதவிதமான பிஸ்கட் போன்றவை.
இன்னும் சொல்லப் போனால் இதை சாப்பிட்டுவிட்டு சத்தான உணவுகளின் மீது ஆர்வம் போய்விடுகிறது. பொதுவா பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகள் பிஸ்கட், கேக் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கும், மூளைக்கும், தீங்கு விளைவிப்பவை.
அவற்றுள் அபரிமிதமான கொழுப்பு கலந்திருக்கும். தொடர்ந்து சாப்பிடு பொழுது இதயத்திற்கு கேடு தரும்.
உயிர்க்கே ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள் | Dangerous Foods in Tamil
துரித உணவுகள்
இந்த துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு, சர்க்கரை நோய், உடல் பருமன் உட்பட, பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக இந்த வகை உணவுகள் பெரும்பாலும் மைதாவில்தான் செய்யப்படுகிறது.
அது மட்டுமல்ல இந்த உணவுகள் சாப்பிடு பொழுது கூடவே குளிர்பானங்களையும் குடிக்கிறார்கள். இதில் உள்ள செயற்கை சர்க்கரை கார்பன் டை ஆக்சைடு, சில ரசாயன கலவைகள் போன்றவை உடலுக்கு கெடுதல் தரக்கூடியவை.
முக்கியமாக உடலுக்கு கேடு தரும் அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு போன்றவையும் இதில் அதிகம் இருக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவு
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் அதன் சுவை காரணமாக பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனுடன் சீஸ், மயோனைசே மற்றும் சாஸ் வகைகள் என உடலுக்கு கேடு தரும் விஷயங்களும் சேர்க்கப்படுகின்றன.
இவைகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகும். முக்கியமாக இவைகள் மூளையின் செயல்பாட்டையும் மந்தப்படுத்தும்.
இவைகளில் கலோரிகள் அதிகமாக உள்ளதால் உடல் எடையையும் அதிகப்படுத்தும். அதே போன்று இறைச்சியை பாதுகாக்க நைட்ரேட் என்ற தனிம சேர்க்கப்படுகிறது.
அது நுரையீரலில் வீக்கம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது.
அதே போன்று மீண்டும் மீண்டும் பொறித்த எண்ணெயில் தயார் செய்யப்படும் உணவுகள் அதிகப்படியான கழிவுகளையும் நச்சுத்தன்மைகளையும் ரத்தத்தில் கலக்க செய்கிறது.
எண்ணெயில் பலமுறை நன்றாக பொறித்த உருளைக்கிழங்கு துண்டுகளைத்தான் பிரஞ்சு ஃபிரை என்கிறார்கள். இந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு, உடல் பருமன், பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு, கெட்ட கொழுப்பு,அல்சைமர், பார்கின்சன் மற்றும் கல்லீரல் நோய்கள் ஏற்படும்.
உணவுகளில் எந்த உணவாவது பாரம்பரிய உணவுகளாக இருக்கா? என்று பார்த்தால் நிச்சயம் இருக்காது. உண்மையில் இந்த உணவுகள் அனைத்துமே ஆபத்தான நோய்களை ஏற்படுத்தக் கூடியவை. இந்த உணவுகளை தவிர்த்தாலே நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.
உங்களில் யாராவது இவற்றை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளுங்கள்.
உயிர்க்கே ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள் | Dangerous Foods in Tamil
இதனையும் படிக்கலாமே
- பேரிக்காய் பயன்கள் | Pear Fruit in Tamil
- கலாக்காய் பயன்கள் | Kalakai Benefits in Tamil
- அழுகண்ணி மூலிகை | பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil tab)
- சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
- பேரிக்காய் பயன்கள் | Pear Fruit in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் பக்கத்தினை Disclaimer கட்டயமாக படிக்கவும்.
15 Comments
Comments are closed.