பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil
நாம் தினசரி பயன்படுத்தும் என்ற சோப்புகளில் சுண்ணாம்புக்கல் சேர்க்கப்படுகின்றன.
இதனால் வரட்சி நகம் மற்றும் தோளும் இனிய கூடிய இடத்தில் வெடிப்பு ஏற்படுதல், பூஞ்சை, பாக்டீரியா கிருமிகள் போன்றவை வளர்தல் போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.
பூந்தி கொட்டை பயன்பாடு
ஆயுர்வேத மருத்துவ குணம் கொண்ட பூந்தி கொட்டையில் தயாரிக்கப்படும் பொருள் என்னவென்றால் சோப்பு, சோப்பு தூள், Hand Wash, Face Wash, Floor Cleaner, All Purpose Cleaner போன்றவை தயாரிக்கலாம்.
அதேபோன்று பூந்திக்கொட்டை வைத்து அதனுடைய சாற்றினை வீட்டில் இருந்து எப்படி எடுப்பது என்பதனை பார்ப்போம்.
பயன்படுத்தும் முறை
இந்த பூந்திக்கொட்டையை அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். பூந்திக் கொட்டையிலுள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு அதன் தோல் பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பூந்திக்கொட்டை பயன்படுத்தும் முறைகள் பூந்திக்கொட்டை விதையை நீக்கிவிட்டு அதன் மேல் பக்கத்தில் உள்ள தோலை எடுத்துக்கொண்டு ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
அந்த நீர் நன்றாக கொதிக்க வைத்த பின் பூந்திக்கொட்டை இன் தோலை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பூந்திக்கொட்டை கொதிக்கும்போது நுரை கட்டும். அப்போது அடுப்பினை மெதுவாக குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழித்து அதற்க்கு பின் அடுப்பினை நிறுத்தவும்.
குளிர்ந்த பின்னர் நீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வடிகட்டிய நீரினை குளிர்சாதன பெட்டியில் எடுத்து வைத்து கொண்டு தேவைப்படும் பொழுது எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
வடிகட்டிய பின் எஞ்சியுள்ள பூந்திக்கொட்டை சக்கையிணை தூக்கி எறிய வேண்டாம்.
ஏனென்றால் அதனை மறுபடியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சக்கையினை நான்கு அல்லது ஐந்து முறை பயன்படுத்தலாம். இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து பராமரிக்கலாம்.
பூந்தி கொட்டையானது பாக்டீரியாவை அளிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.
எனவே இந்த பூந்திக்கொட்டையை குழந்தைகளின் ஆடையினை துவைக்கும் போதும், பாத்திரங்களை கழுவும் போதும் பயன்படுத்தலாம்.
இதன் மூலமாக குழந்தைகளின் துணி மற்றும் பாத்திரங்களில் உள்ள பாக்டீரியாக்கள் அனைத்தும் அழிந்துவிடும்.
குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட சாரத்தை எடுத்து பாத்திரத்தில் சிறிதளவு ஊற்றி அதனுடன் சிறிதளவு ஊற்றினாலே நுரை வருவதை தாராளமாக பார்க்கலாம்.
இந்த சாரத்தை துணி துவைக்கும்போது ஊற்றி துவைக்கலாம். மேலும் இதனை ஏர் கண்டிஷனர் ஆகவும் பயன்படுத்தலாம்.
தலைமுடி
பூந்திக்கொட்டை நன்றாக உடைத்து அதில் உள்ள கொட்டைகளை நீக்கி அதனுடைய தோலை மட்டும் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.
ஊறவைக்கப்பட்ட தண்ணீருடன் சீயக்காய் சேர்த்து தலைக்கு குளித்து வருவதன் மூலமாக தலைமுடி பளபளப்பாகவும், முடி உதிர்வது இல்லாமலும் இருக்கும்.
மேலும் பேன் பொடுகு போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட தினசரி குளியலில் பயன்படுத்தலாம்.
பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து மேலே உள்ள தோலினை உரித்து நன்றாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
சாதம் வடித்த கஞ்சியை கொண்டு அதனுடன் சீயக்காய் பிடித்து வைக்கப்பட்ட பூந்திக்கொட்டை பொடி சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வரலாம்.
மேலும் தோல் நோய்கள் முற்றிலும் நம்மை நெருங்காது.
இதனையும் படிக்கலாமே
- உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil(Opens in a new browser tab)
- மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்(Opens in a new browser tab)
- முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
- ஓரிதழ் தாமரை பயன்கள் | Orithal Thamarai Side Effects(Opens in a new browser tab)
- பிரண்டை மருத்துவ குணங்கள் | Pirandai Benefits in Tamil(Opens in a new browser tab)
- சிறுகீரை பயன்கள் | Siru Keerai Benefits(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைத்ததின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்
24 Comments
Comments are closed.