அருகம்புல் பொடி பயன்கள் | Arugampul Powder Benefits in Tamil
அருகம்புல் அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடிய ஒன்று. அருகம்புல் குறுகலான நீண்ட இலைகளையும் கொண்டு உள்ளது.
நேராக வளரக்கூடிய தண்டுகளையும் கொண்டுள்ளது. இது வயல் வெளிகளிலும்,வரப்புகளிலும், வெட்டவெளி நிலப்பரப்புகளில் வளரக்கூடிய ஒரு புல் வகையாகும்.
இது விதைகளின் மூலமாகவும், சல்லி வேர் முடிச்சுகள் மூலமாகவும் இனவிருத்தி ஆகின்றது.
அருகம்புல்லை வைத்து, ஒரு சில நோய்களுக்கு எப்படி எதனோடு சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
புற்றுநோய்
ஆரம்ப கால் புற்றுநோய்க்கு காலை, மாலை சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன், ஒரு தேக்கரண்டி அருகம்புல் பொடியை அரை தேக்கரண்டி வெண்ணையுடன் சாப்பிட, ஆரம்ப புற்றுநோய் சரியாகும்.
சிறுநீர் பிரச்சனை
அடிக்கடி சிறுநீர் கழிப்பது அடிப்பது அல்லது சிறுநீர் தடைபடுவது, சொட்டு சொட்டாக சிறுநீர் போவது இதற்கெல்லாம் அருகம்புல் சாறு சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்
இதய நோய்
ரத்த அடைப்பு, உள்ளவர்கள் வெந்நீரில் அருகம்புல் பொடியினை சாப்பிட சரியாகும்.
வாதம்
கபத்தை தடுக்க அருகம்புல் பொடி தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். கபம் வாதம் பித்தம் இவை மூன்றையும் சமன் செய்வதற்கு உதவுகிறது. வாதத்திற்கு அருகம்புல் பொடி உடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட வேண்டும். பித்தத்திற்கு அருகம்புல் பொடி உடன் இஞ்சி சேர்த்து சாப்பிட வேண்டும். கபத்திற்கு அருகம்புல் பொடி உடன் திப்பிலி பொடியுடன் சாப்பிட வேண்டும்.
வெள்ளை வெட்டை
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை வெட்டைக்கு, ஐம்பது அருகம்புல் பொடி ஐம்பது கிராம் ககடுக்காய் பொடி சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
அதனை தினமும் காலை, மாலை, சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன், ஒருடம்ளர் தண்ணீரில், ஒரு தேக்க்கரண்டி பொடி போட்டுகுடித்து வரவும்.
அவ்வாறு குடித்து வருவதன் மூலமாக நாளடைவில் வெள்ளை வெட்டை குணமாகும்.
சரும பிரட்சனை
சொறி,சிரங்கு, படை , பூச்சிக்கடி, தேள், பூரான் கடிக்கு, ஐம்பது கிராம் அருகம்புல், ஐம்பது கிராம் குப்பை மேலயும் போடி செய்து கலந்து எடுத்து வைத்து கொள்ளவும்.
காலை, மாலை சாப்பிட்டு வருவதன் மூலமாக சரும பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
படை,அரிப்பு
ஐம்பது கிராம் அருகம்புல், ஐம்பது கிராம் மருதாணி பொடி, ஐம்பது கிராம் மஞ்சத்தூள் இவை மூன்றையும் கலந்து வைத்து கொள்ளவும்.
தினசரி இரவு மற்றும் காலை வேளைகளில் இந்த போடி கொண்டு குளிப்பதன் மூலமாக சரியாகும்.
தீராத சளி இருமல்
குழந்தைகளுக்கு தீராத சளி இருமலுக்கு அருகம்புல் துளசி இரண்டையும் சிறிதளவு சேர்த்து அதனை சிறிது தண்ணீரில் ஊற வைத்து காலையில் குழந்தைகளுக்கு கொடுக்க சளி, இருமல் தீராத சளி,இருமல் சரியாகும்.
உடல் உஷ்ணம்
அருகம்புல் பொடி, கஸ்தூரி மஞ்சள் தூள், பச்சை பயிறு மூன்றும் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். கலந்து வைத்த பொடி கொண்டு குளித்து வருவதன் மூலமாக உடல் உஷ்ணம், சொறி, சிரங்கு, அலர்ஜி, அரிப்பு, அனைத்தும் சரியாகும்.
தேவையற்ற கொழுப்பு
அருகம்புல் பவுடரை காலை மாலை சாப்பிடுவதன் மூலமாக உடலில் உள்ள தேவையற்ற நீர், தேவையற்ற கொழுப்பை குறைக்கும். கை கால் வீக்கத்திற்கும், அருகம் புல் சாப்பிட சரியாகும்.
பசி உணர்வு
எவ்வளவு சாப்பிட்டாலும் ஒரு சிலருக்கு பசி உன்வர்வானது அடங்காது. இவர்கள் அதிக அடிக்கடி சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் அதீத பசி உணர்வினை கட்டுப்படுத்த தினசரி அருகம்புல் ஜூஸ் அருந்தி வந்தால் போதும்.
எலும்பு உறுதி
க்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் எலும்பின் உறுதிக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இந்த இரண்டும் அருகம் புல்லில் நிறைந்து காணப்படுகிறது. எனவே அருகம் புல் ஜூஸை காலை குடித்து வருபவர்களுக்கு எலும்பு உறுதியாக இருக்கும்.
நச்சு நீக்கி
நாம் சுவாசிக்கின்ற காற்று, உண்ணக்கூடிய உணவு, குடிக்கும் நீர் இவை அனைத்துமே நச்சு நிறைந்தே உள்ளது.
அருகம்புல் ஜூசினை தினசரி குடித்து வருவதன் மூலமாக உடலில் தங்கி இருக்க கூடிய நச்சுக்கள் அனைத்தும் வியர்வை மற்றும் சிறுநீர் மூலமாக உடலை விட்டு வெளியேறும்.
சுவாச பிரச்சனை
நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளான ஆஸ்துமா மற்றும் பிராங்கைடிஸ் உள்ளவர்கள் மூச்சு விட மிகவும் சிரமப்படுவர். இவர்கள் அருகம்புல் ஜூஸ் குடித்து வருவதன் மூலமாக நல்ல நிவாரணம் உடலுக்கு கிடைக்கும்.
மூலம்
மூலம் என்பது மலத்துவாரத்தில் உள்ள தோல்பகுதியில் ஒரு புடைப்பு ஏற்படுவது. மூல நோய்களில் பல வகை உள்ளது.
எந்த வித மூல நோயாக இருந்தாலும் அருகம்புல் ஜூஸ் குடித்து வருவதன் மூலமாக மூல நோய்க்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இதனையும் படிக்கலாமே
- முட்டை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா(Opens in a new browser tab)
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)
- அழுகண்ணி மூலிகை | Alukanni Mooligai(Opens in a new browser tab)
- ஓரிதழ் தாமரை பயன்கள் | Orithal Thamarai Side Effects(Opens in a new browser tab)
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
தயவு செய்து எங்களது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை படிக்கவும்.
6 Comments
Comments are closed.