கரும்பு சாறு நன்மைகள் | Sugarcane Juice Benefits in Tamil
பொதுவாக அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும், பழங்கள் மற்றும் காய்களை தவிர்க்காமல் சாப்பிட்டாலே பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முழுமையான சக்தியை நம்மால் பெற முடியும்.
இதனால் நோயில்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால் நாம் துரித உணவுகள் சாப்பிடுவதில் காட்டும் ஆர்வம் இதில் காட்டுவதில்லை.
கோடை பொறுத்தவரையில் அதிக வெப்பத்தால் உடல் சூடு அதிகமாகிறது. ஆனால், நாம் junk மற்றும் துரித உணவுகளை சாப்பிடு பொழுது நம்முடைய உடல் சூடு, மேலும் அதிகரிப்பதால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
பொதுவாக உடல் சூடு அதிகரிக்கும் பொழுது மஞ்சள் காமாலை, கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், மூலை நோய், செரிமான பிரச்சனை, வயிற்றுப் புண்னால் வலி போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
அதிலும், சில சமயங்களில் உடல் சூடு அதிகரிப்பதால் பித்தப்பை பாதிப்படைந்து கல்லீரலும் பாதிக்கக்கூடும். எனவே நாம் கோடையில் உணவு விஷயத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.
உண்மையில் நம்மை சுற்றி, இயற்கை என்றே நிறைய உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.
நாம் அதை சரியாக பயன்படுத்தினாலே நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
அந்த வகையில் நமக்கு இயற்கை வழங்கிய, நாம் எங்கு சென்றாலும் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான மருத்துவ குணங்கள் அடங்கிய ஒன்று தான் கரும்பு.
இதை தினமும் ஒருடம்ளர் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பல பிரச்சனைகளை போக்க முடியும்.
உடல் சூடு
சாதாரணமாகவே கோடையில் அதிக வெயிலால் உடலானது அதிக சூடாக இருக்கும். மேலும் அதிக வியர்வையின் காரணமாக அதிக நீர் இழப்பு ஏற்படக்கூடும்.
பொதுவாக உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து அவசியம். இந்த நீர் இழப்பை ஈடு செய்ய அதிக தண்ணீர் அருந்துவதோடு, கரும்பு சாரும் அருந்தினால் ஏராளமான மருத்துவ நன்மைகளை நாம் பெற முடியும்.
அதாவது உடல் சூடு மற்றும், அதிகம் தண்ணீர் குடிக்காத காரணங்களால் நீர்த்தாரை எரிச்சல், நீர் குத்தல், தொற்றுகளால் பிறப்புறுப்பில் அரிப்பு போன்றவை ஏற்படக்கூடும்.
இவற்றை சரி செய்யும் தன்மை கரும்பு சாறுக்கு உண்டு. அதிலும், இயல்பாகவே உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இவர்கள தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் குடித்தால் இந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
கல்லீரல் ஆரோக்கியம்
நமது உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக, மிகவும் முக்கிய உறுப்பு இந்த கல்லீரல். நமது உடலில் அதிக பணிகளை செய்வதும் இதுதான்.
சர்க்கரை, கொழுப்பு, இரும்பு சத்து ஆகியவற்றை கட்டுப்படுத்துவது என்று கல்லீரலின் பங்கு மிக அதிகம்.
மேலும் புரத உற்பத்திக்கும் இதன் உதவி அதிகம். கல்லீரல் பாதிப்படைவதற்கு மது அதிகம் அருத்துவதாலும், அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை, தொடர்ந்து சாப்பிடுவதாலும் கல்லீரலில் கொழுப்புகள் அதிகம் சேர்ந்து, பாதிப்பு ஏற்படும்.
பொதுவாக கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளில் மஞ்சள் காமாலையும் ஒன்று. இந்த மஞ்சள் காமாலை நோயிலிருந்து குணமாக தினமும் இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடித்து வந்தால் விரைவில் குணம் தெரியும்.
செரிமானம்
பலருக்கும் சாப்பிட்ட உணவு, முழுமையாக செரிமானம் அடையாமல் போவதற்கு காரணம் அவர் வயிற்றில் உள்ள செரிமான அமிலங்களின் சுரப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குறைபாடுகளே காரணம்.
இதற்கு, கரும்பு சாறு அடிக்கடி பருகி வந்தால் வயிறு மற்றும் குடல் சுத்தமாகிறது. மேலும், வயிற்றில் உணவு செரிமானத்திற்கு உதவும் அமிலங்களின் சுரப்பை அதிகப்படுத்தும்.
எனவே அடிக்கடி செரிமானப் பிரச்சனை ஏற்படுகிறது என்போம் தினமும் கரும்பு சாறு சாப்பிட்டு வருவது நல்லது.
ரத்த சோகை
ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு உடன் தேன் கலந்து குடித்து வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நீங்கும்.
புற்றுநோய்
கரும்பில் இயற்கையாகவே உள்ள alkaline எண்ணும் பொருள் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கக்கூடியது. நம்மை சுற்றிலும், மாசுபடிந்துள்ளதால் நாம் சாப்பிடுகின்ற உணவுகள், அருந்தும் நீர், சுவாசிக்கும் காற்று, இவைகள் மூலம் நமது உடலில் அதிக அளவு மாசுகள் சேர்ந்து விடுகிறது.
நச்சுக்கள்
இந்த கரும்பு சாறு மாசுகளையும் நச்சுத்தன்மையும் நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தரும் ஆற்றல் கொண்டது.
எனவே, தினமும் காலையில் கரும்பு சாறு அருந்தி வரும் பொழுது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறி உடலை தூய்மைப்படுத்துகிறது.
சிறுநீரக கற்கள்
கரும்பின் மிக முக்கியமான நன்மை என்னவென்றால் சிறுநீரக கற்களை குணமாக்குவதுதான். எனவே, தண்ணீர் மட்டுமின்றி கரும்பு சாற்றையும் அருந்தி வந்தால் அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்து வெளியேறிவிடும்.
வாய் துர்நாற்றம்
உணவில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படக்கூடும். இதற்கு, சிறந்த இயற்கை தீர்வும் இந்த கரும்பு சாறு.
மேலும் இதில் நிறைந்திருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், பற்களின் எனமைன்ஐ வலுப்படுத்துவதோடு, பற்களை, ஈறுகளையும் பாதுகாக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
கரும்பு சாறு அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வளம் பெறுகிறது. இதில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட் ரத்தத்தில் கலந்து நிணநீர் சுரப்பிகளில் வெளிப்படுத்தி உடலை எளிதில் தாக்கக்கூடிய தொற்று வியாதியான காய்ச்சல் போன்றவற்றை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.
பெண்கள் ஆரோக்கியம்
குழந்தை இல்லாத பெண்கள் கரும்பு jசாறை அடிக்கடி பருகி வந்தால் அவர்களின் கருப்பையில் கருமுட்டை உற்பத்தி அதிகரித்து விரைவில் அப்பெண்கள் கருவுற உதவுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று கருவுற்றிருக்கும் பெண்கள் அடிக்கடி இந்த கரும்பு சாறு சாப்பிடுவது நல்லது. காரணம் இதில், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் அதிகம் இருப்பதால் இவை குழந்தை குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக பிறக்க உதவும்.
முதுமை தோற்றம்
வயது ஏற ஏற உடலில் இருக்கும் செல்களின் வளர்ச்சி குறைந்து முதுமை தோற்றம் ஏற்படக்கூடும்.
ஆனால் எப்பொழுதும் இளமையாக இருக்க அடிக்கடி கரும்பு சாறு அருந்தி வருவது நல்லது. காரணம், இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் ஃபிளாவனாய்டுகள் சருமத்தில் ஈரப்பதத்தை கூட்டுகிறது.
இதனால் தோலில் ஒரு வித பளபளப்புத் தன்மையைக் கொடுத்து உடலுக்கு இளமைத் தோற்றத்தை தருகிறது.
மூளை
மூளை நமது உடலில் அனைத்து இயக்கங்களையும் நிர்வாகம் செய்கிறது. மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இந்த கரும்பு சாறு உதவுகிறது.
மேலும் கரும்பு சாறு அருந்துவதால் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக வேலை செய்வதற்கான ஆற்றல் கிடக்கிறது.
முக்கியமாக கரும்பில் வைட்டமின் மற்றும் கனிம சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும், பாஸ்பரஸ், இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகளவில் உள்ளதால் இது அடிக்கடி அருந்தும் பொழுது உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடும் இன்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாமா?
கரும்பில் இருக்கும் சுக்ரோஸ் உடனடியாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவே அதிகரிக்காது. என்றும் கொஞ்சம் அதிகமாக அருந்தினாலோ அல்லது அருந்தி நீண்ட நேரத்திற்கு பிறகோதான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும்.
எனவே சர்க்கரை நோயாளிகள் அளவாக அதாவது, அரை டம்ளர் வீதம் வாரத்திற்கு இரண்டு முறை குடிக்கலாம் என்றும், அறிவுறுத்தப்படுகிறது.
முக்கிய குறிப்பு
கரும்பு சாறு கிடைக்கும் இடம் சுகாதாரமாக உள்ளதா? என்று பார்த்து வாங்கி அருந்துவது நல்லது. அதே போன்று வாங்கி, அரை மணி நேரத்தில் அதாவது அதன் நிறம் மாறுவதற்குள் குடித்துவிட வேண்டும்.
எனவே எளிதில் எங்கும் கிடைக்கக்கூடிய மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட இந்த கரும்பு அடிக்கடி சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இதனையும் படிக்கலாமே
- துவரம் பருப்பு பயன்கள் | Thuvaram Paruppu in Tamil(Opens in a new browser tab)
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)
- கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil(Opens in a new browser tab)
- மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்
- உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil
- கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu
- பலாப்பழம் சாப்பிட்டால் கிடைக்க கூடிய நன்மைகள்
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயாம் படிக்கவும்.
15 Comments
Comments are closed.