அரிவாள்மனை பூண்டு பயன்கள் | Sida Acuta Medicinal Uses
நம்முடைய முன்னோர்கள் பல நோய்களுக்கு தீர்வு கண்டது மூலிகை மருத்துவத்தை வைத்து தான். ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது.
சில மூலிகைகள் பல விதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அப்படி ஒரு முக்கியமான மூலிகைதான் அரிவாள்மனை பூண்டு. இதை குறுந்தொட்டி, சிரமொட்டி எனவும் அழைக்கிறார்கள்.
இதனுடைய இலை, வேர், பூ ஆகியவை மருத்துவத்தில் பயன்பட்டு வந்துள்ளது. இந்த அரிவாள்மனை பூண்டு குணமாக்கும் நோய்களையும், அதற்கு நம்முடைய முன்னோர்கள் எப்படி இதை தீர்வாக பயன்படுத்தினார் என்பதை பற்றியும் பார்ப்போம்.
வெட்டு காயம்
வெட்டுக் காயத்தினால் ஏற்படும் ரத்த பெருக்கை கட்டுப்படுத்த இதை பயன்படுத்தினார்கள். இதற்கு நம்முடைய முன்னோர்கள் இதனுடைய பசுமையான இலைகளை நன்கு இடித்து, அதனுடைய சாற்றை காயத்தின் மீது பிழிந்து வைத்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் காயம் குணமாவதற்கு இதனுடைய இடித்த இலைகளை, காயத்தின் மேல் வைத்து கட்டினார்கள்.
இலைகளை அரைத்து, காயத்தின் மேல் பூசியும் இதை பயன்படுத்தினார்கள். இதனால், வெட்டுக்காயத்தினால் ஏற்படும் ரத்தப்பெருக்கு விரைவில் கட்டுப்பட்டது.
புண்கள்
புண்கள், காயங்கள் ஆற பயன்படுத்தினார்கள். இதனுடைய இலையை நிழலில் காய வைத்து அதை இடித்த பொடியுடன் சம அளவு தேன் மிளகு, சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து களிம்பு செய்து அதைக் கொண்டு காயங்கள் மீது பூசி காயங்களை ஆற்றியுள்ளார்கள்.
ஈறுகளில் இரத்தம் கசிதல்
ஈறுகளில் இருந்து ரத்தம் வருவதை கட்டுப்படுத்தி உள்ளார்கள் நமது முன்னோர்கள். இதற்கு அவர்கள் இருபது பூக்களை அதை இரண்டு டம்ளர் நீரிலிட்டு ஒரு டம்ளராக சுண்டைக்காய்ச்சி அதை இளஞ்சூடாக வாய் கொப்பளித்து வந்துஉள்ளார்கள்.
இதன் மூலமாக, ஈறுகளில் இருந்து ரத்தம் வருவது கட்டுப்பட்டுள்ளது.
வெள்ளைப்படுதல்
அரிவாள்மனை பூண்டு வெள்ளைப்படுதல் குணமாக பயன்படுத்தியுள்ளார்கள்.
இதற்கு அவர்கள் அரிவாள்மனை பூண்டு இலையினை உலர்த்தி, அதை இடித்து பொடியாக்கி, பால் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிட கொடுத்துள்ளார்கள்.
மூட்டு வலி
மூட்டு வலி குணமாகவும் பயன்படுத்தி உள்ளார்கள். இதற்கு அரிவாள்மனை பூண்டின் இலைகளை, நன்கு அரைத்து, அதை, வலி உள்ள இடத்தில் பூசி உள்ளார்கள்.
தொடர்ந்து செய்து வரும் பொழுது எந்த வகையான மூட்டு வலியும் குணமாகுமாம்.
இளம் குழந்தை
சுவாசத்தை எளிமையாக்கவும், தசை பிடிப்பிற்கு பயன்படுத்தியுள்ளார்கள். அருவாள் மனை பூண்டின் வேர், பால், நல்லெண்ணெய் இந்த மூன்றையும் கலந்து காய்ச்சி இதை நன்றாக வடிகட்டி குழந்தை பிறந்தவுடன், உடல் தடவி உள்ளார்கள்.
இதன் மூலமாக பிறந்த குழந்தைகளின் தசைப்பிடிப்பு மகப்பேற்றின் போது ஏற்பட்ட கஷ்டத்தை நீக்கி, உடனே வெளிக்காற்றை தாங்கும் சக்தியும் கிடைத்துள்ளது.
உடல் வலி
உடல் வலி தீரவும், சிரமம் குறையவும் பயன்படுத்தியுள்ளார்கள். இந்த அரிவாள் மனை பூண்டின் வேர் இருபது கிராம் அதை நன்றாக தட்டி, நான்கு பங்கு நீர் விட்டு, அதை ஒரு பங்காக சண்ட காய்ச்சி இரண்டு வேளை ஐம்பது மில்லி அளவாக கொடுத்து பிரசவித்த பெண்களுக்கு சிரமத்தை குறைத்துள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல் இதை குடித்து வரும் பொழுது உடல் வலியும் தீருமாம்.
கரு சிதைவு
கரு சிதைவு பயன்படுத்தியுள்ளார்கள். இதற்கு அரிவாள் மனை பூண்டை இருபது கிராம் எடுத்து அதை நன்றாக இடித்து, அதை நான்கு பங்கு நீர் விட்டு, ஒரு பங்காக சுண்டைக்காய்ச்சி இதை சம அளவு பாலுடன் கலந்து கொடுக்கும் பொழுது கரு சிதைவை தடுத்துள்ளது.
கருப்பை ரத்த கசிவு
கருப்பை ரத்த கசிவை குறைத்துள்ளது. கருப்பையிலிருந்து மாதவிடாய் அல்லாத போது, ஒழுகும் ரத்தக் கசிவிற்கு அரிவாள் மனை பூண்டு வேரை இடித்து, அதை தூள் செய்து அரை தேக்கரண்டி அளவு, தேன கலந்து கொடுத்து, அதன் பிறகு பால் குடித்து வரும் பொழுது கருப்பை ரத்தக் கசிவு குறையுமாம்.
மேலும்
குழந்தைகளுக்கான இழுப்பு பதிப்பிற்கு கொடுத்துள்ளார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த நோய்க்கு, அரிவாள் மனைப் பூண்டின் வேரை, வெண்ணெயுடன் அரைத்து, உச்சந்தலையில் தடவ நோய் குணமாகி இருக்கிறது.
அது போல நஞ்சுகள் முறியவும் இதை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதன் இலையுடன் மிளகும், பூண்டும் சிறிதளவு சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு சாப்பிட நஞ்சு முறியுமாம்.
இப்படி, நம்முடைய முன்னோர்கள் பல நோய்களுக்கு மூலிகை இலையை மருந்தாக பயன்படுத்தி உள்ளனர்.
இதனால் எந்தவித பக்கவிளைவும் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை.
இதனையும் படிக்கலாமே
- உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil(Opens in a new browser tab)
- காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?(Opens in a new browser tab)
- நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
- அழுகண்ணி மூலிகை | Alukanni Mooligai(Opens in a new browser tab)
அனைவரும் ம,நமது வலைதளத்தின் பக்கத்தினைகட்டாயமாக படிக்கவும்.
17 Comments
Comments are closed.