தக்காளி பயன்கள் | Tomato Benifits in tamil
தக்காளி பயன்கள் நாம் சாப்பிடும் சில காய்கறிகள் மட்டுமே அனைவரும் விரும்பும் சுவை கொண்டதாகவும், அதே சமயத்தில் அதிக சத்துக்கள் கொண்டதாகவும் இருக்கும்.
அதில் ஒன்றுதான் தக்காளி. பொதுவாக எந்த வகை குழம்பு வைத்தாலும் அதில் தக்காளி சேர்க்க விட்டால் அதன் சுவை சற்று குறைவுதான்.
அது மட்டுமல்ல இதில் இல்லாத சத்துகலே இல்லை என்று கூட சொல்லலாம்.
தக்காளியில் உள்ள சத்துக்கள்
- வைடமின் ஏ
- வைடமின் பி
- வைடமின் சி
- வைடமின் கே
- இரும்பு சத்து
- பாஸ்பரஸ்
- குரோமியம்
- பொட்டாசியம்
- புரதசத்து
இதில் கலோரிகள் மற்றும் மாவு சத்து மிகவும் குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் தைரியமாக சாப்பிடலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.
இவ்வளவு தனித்தன்மை வாய்ந்த தக்காளியை தினமும் ஒன்று சாப்பிட்டால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
தக்காளி பயன்கள்
எலும்பு உறுதி
வைடமன் கே மற்றும் கால்சியம் சத்தானது தக்காளியில் அதிக அளவில் உள்ளதால் இதை தினமும் நாம் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதி ஆகின்றன.
முக்கியமாக மூட்டுவலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுவதை நாம் தவிர்க்கலாம். அது மட்டுமல்ல வலுவான எலும்புகளையும் பற்களையும் பெறுவதற்கு இது உதவுகிறது.
எனவே தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டால் நமது எலும்பு உறுதியாகவும், திடமாகவும் மாறும்.
இளமை தோற்றம்
தக்காளியை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமம் இளமையாக இருப்பதுடன், சூரிய ஒளியினால் ஏற்படும் தாக்குதலில் இருந்து சர்மத்தை காக்கும்.
தக்காளி நமது சருமத்தில் உள்ள மைட்டோ காண்ட்ரியல் டி.என்.ஏ வை பாதுகாக்கிறது. இந்த டி.என்.ஏ தான் நமது சருமம் வயதாவதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
எனவே உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தினமும் ஒரு தக்காளியை சாப்பிடுங்கள்.
கண் பார்வை
இதில் உள்ள வைடமன் ஏ சத்தானது கண்பார்வையை மேம்படுத்துகிறது. மாலைக்கண் வியாதி வராமல் தடுக்கிறது.
மேலும் குணப்படுத்தவே முடியாத கோளாறாக இருக்கும். மாக்குலர் டி ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துகளை இந்த தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் தடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதய ஆரோக்கியம்
இதயத்தை பாதிக்கக்கூடிய அதிக கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், உடலில் ஏற்பட்டிருக்கும் தொற்றுநோய்களை சீர் செய்யவும் தக்காளியில் உள்ள நிக்கோடினிக் அமிலம் உதவுகிறது.
தக்காளியில் அதிக அளவு வைடமன் சி உள்ளதால் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவது இதயத்திற்கு நல்லது.
உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும். முக்கியமாக இந்த வைடமன் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
புற்றுநோய் குணமாக
தக்காளியில் மிக மிக அதிக அளவில் உள்ள ஒரு பொருள் லைகோபீன் என்ற சக்தி வாய்ந்த அஆன்டிஆக்ஸிடென்ட் உள்ளது.
இது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும், புற்றுநோய் வராமல் தடுக்கவும், புற்றுநோய் பாதிப்பு அடைந்து உள்ள திசுகளுடன் போராடவும் உதவுகிறது.
உடல் எடை குறைக்க
அதே போன்று தக்காளியை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தமும் சுத்தமாகிறது.
அடுத்து முக்கியமாக இதை தினமும் ஒன்று சாப்பிடும்பொழுது பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது.
இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க முடியும்.
தக்காளியில் நார் சத்து மற்றும் நீர் சத்தானது அதிக அளவில் உள்ளதால் உடல் எடையை குறைக்க இது உதவியாக இருக்கும்.
அதிலும் இது கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள பொருளாகவும் இருப்பதால் எடையைக் குறைக்க டயடில் உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.
சர்க்கரை நோய்
தக்காளியில் குரோமியம் அதிகமாக உள்ளதால் இது நம் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
அதே போன்று கல்லீரலில் ஏற்படும் எந்தவித பாதிப்பையும் போக்கக்கூடியது. முக்கியமாக உடல் பலவீனத்தின்ற்கும் தக்காளி ஜுஸ் தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
மூச்சுக்குழல் நோய்கள்
காச நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் நோய்களும் தக்காளி சாற்றில் குணமாகின்றன.
இதற்கு இரவில் படுக்கும் முன்பு ஒரு டம்ளர் தக்காளி சாற்றுடன் ஒரு டிஸ்புன் தேனும் சிறிது ஏலக்காய் தூளும் கலந்து கொள்ள வேண்டும்.
முதலில் மூன்று உரித்து பூண்டு பற்களை மாத்திரை போன்று தண்ணீர் மூலம் விழுங்க வேண்டும்.
பிறகு இந்த தக்காளி சாற்றை அருந்த வேண்டும். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
சிறுநீரக கல்
பொதுவாக தக்காளியில் இரண்டு வகைகள் உள்ளன.
ஒன்று நாட்டுத்தக்காளி, மற்றோன்று ஹைப்ரிட் வகை இது விதைகள் இருக்காது.
இவற்றில் விதைகள் உள்ள நாட்டு தக்காளியே மருத்துவத் தன்மை கொண்டது.
ஆனால் இதை சமைக்கும் பொழுது விதைகளை நீக்கி சமைத்தால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்கலாம்.
முக்கியமாக தக்காளியை சிறுநீர், கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் அதன் விதையுடன் சாப்பிடக்கூடாது. விதை நீக்கி விட்டு தான் சாப்பிட வே ண்டும்.
விதை இல்லாமல் சாப்பிடும் தக்காளியின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும், பித்தப்பையில் கற்கள் உருவாவதையும் தடுக்கலாம் என்றும் சில ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே தினமும் ஒரு தக்காளியை நன்றாக கழுவிவிட்டு பச்சையாகவோ அல்லது ஜுஸ் போன்று செய்தோ சாப்பிட்டு பாருங்கள் கொஞ்ச நாட்களிலேயே நல்ல பலன் தெரியும்.
இதனையும் படிக்கலாமே
சுண்டலின் நன்மைகள் |Benefits of Chives
கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil
மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்
பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil
உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil
கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu
தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா
English Overview
Here we have தக்காளி பயன்கள் Tomato Benifits in tamil. Is also called use of தக்காளியை In tamil or தக்காளி benefits or தக்காளி benefits in tamil or தக்காளி image or தக்காளி photo or தக்காளி uses or thakkali payangal in tamil or thakkali USEs in tamil or thakkali benefits in tamil or thakkali MARUthuva payangal or thakkali uses in tamil or தக்காளி பயன்கள் or தக்காளி நன்மைகள் or தக்காளி மருத்துவகுணங்கள் or tomato benifits in tamil.
5 Comments
Comments are closed.