வால்நட் பயன்கள் | Walnut Benefits in Tamil

வால்நட் பயன்கள் | Walnut Benefits in Tamil

வால்நட் நட்ஸ் வகையை சார்ந்தது. நட்ஸ் வகை உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் நம்மில் பலரும் பாதாம், பிஸ்தா, முந்திரி, வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடும் அளவுக்கு வால்நட் என்று சொல்லக்கூடிய அக்ரூட் பருப்புகளை பலரும் வாங்க விரும்புவது இல்லை.

ஆனால், வால்நட்ல் இருக்கக்கூடிய சத்துக்களையும் அதன் நன்மைகளையும் தெரிந்து கொண்டால் கண்டிப்பாக வாங்கி சாப்பிடாமல் இருக்க மாட்டிர்கள்.

வால்நட் பருப்பில் உள்ள சத்துக்கள்

புரதம், ஒமேகா மூன்று, கொழுப்பு அமிலம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்களும், ஏராளமான அளவு ஆன்டிஆக்ஸிடென்டடுகள் நிறைந்திருக்கிறது.

இவ்வளவு சத்துக்கள் கொண்ட, இந்த வால்நட்ஐ தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வர நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? என்பதனை பற்றி பார்ப்போம்.

வால்நட் பயன்கள் | Walnut Benefits in Tamil

உடல் எடை

அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது வால்நட். வால்நட்டில் நார்ச் சத்து நல்ல அளவில் இருக்கிறது.

இது உடலில் ஆங்காங்கே தேவையில்லாமல் இருக்கக்கூடிய கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்க உதவி செய்கிறது.

இதில் இருக்கக்கூடிய polyunsaturated கொழுப்புகள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். இதன் மூலமாக அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் குறையும்.

எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் diet follow பண்ணுபவர்கள் கண்டிப்பாக இந்த வால்நட்டினை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

மூளை வளர்ச்சி

மூளையின் வளர்ச்சியை அதிகரிக்கும் வால்நட். மூளையின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் நல்லளவில் இருக்கிறது.

இது மூளையின் புதிய செல்கள் உற்பத்தியாவதற்கும், மூளையின் வளர்ச்சிக்கும், மூளையின் செயல்பாட்டிற்கும் மிகவும் நல்லது.

வால்நட்டில் இருக்கக்கூடிய கொழுப்பு அமிலங்கள் மூளையின் நினைவாற்றலை அதிகரிப்பதோடு, மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் குணமாக்கும்.

இது உடலில் தூக்கத்தை உண்டாக்கக்கூடிய மெலடோனின் ஹார்மோன்ஐ உற்பத்தி செய்யக்கூடியது. ஆகவே அடிக்கடி தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கூட, இந்த வால்நட்ஐ சாப்பிட்டு வர மிகவும் நல்லது.

வால்நட் பயன்கள் | Walnut Benefits in Tamil

இரத்த அழுத்தம்

அதிக இரத்த அழுத்தப் பிரச்சினையினால் அவதிப்படுபவர்கள் வால்நட் பருப்புகளை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.

வால்நட்டில் unsaturated கொழுப்புகள் நல்ல அளவில் இருக்கிறது. இது நரம்புகள் சீராக இயங்குவதற்கு உதவி செய்யும். இதன் மூலமாக ரத்த அழுத்தமும் சீராக இருக்கும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் அதிக சர்க்கரை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த வால்நட் சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய, pale unsaturated, மற்றும், மோனோ unsaturated, கொழுப்பு அமிலங்கள் ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவுகளை கட்டுப்பாட்டில் வைத்துகொள்ள உதவி செய்யும்.

எனவே சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் முந்தின நாள் இரவே ஒரு கையளவு வால்நட்ஐ நீரில் ஊற வைத்து கொள்ளவும்.

பின் மறுநாள் காலையில் ஊற வைத்த வால்நட்டை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்த சர்க்கரையின் அளவுகள் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு உதவியாக இருக்கும்.

வால்நட் பயன்கள் | Walnut Benefits in Tamil

எலும்பு

எலும்புகளை வலுவாக்கும். வால்நட்டில் இருக்கக்கூடிய அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள், உடலில் கால்சியம் உறிஞ்சும் திறனை அதிகரிக்கும்.

இதன் மூலமாக எலும்புகளுக்கு தேவையான சத்துகள் நன்றாக கிடைப்பதோடு எலும்புகளும் வலுவாகும்.

உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கக் கூடியது இந்த வால்நட்.

கெட்ட கொலஸ்ட்ரால்

அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வால்நட் பருப்புகளை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் மற்றும் உடலில் HDL என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பு அமிலங்களை அதிகரித்து LDLன்னு சொல்லக்கூடிய கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

இதன் மூலமாக கொலஸ்ட்ரால் l அளவு குறையும். அதிக கொலஸ்ட்ரால் l பிரச்சனையினால் உண்டாகக்கூடிய இருதய வாழ்வு அடைப்பு போன்ற அபாயகரமான பிரச்சனைகள் வருவதும் தடுக்கப்படும்.

வால்நட் பயன்கள் | Walnut Benefits in Tamil

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள் வால்நட்ஐ சாப்பிட்டு வர இது வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியையும் குடலின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கபட்டுள்ளது.

எனவே கர்ப்பிணி பெண்கள் தாராளமாக இந்த வால்நட் சாப்பிட்டு வரலாம்.

புற்றுநோய்

புற்றுநோய் வராமல் தடுக்கும் வால்நட். இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடென்டுகள் நிறைந்திருக்கிறது.
இது உடலில் ஃப்ரீ ரேடிக்கல் என்று சொல்லக்கூடிய நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை தூய்மையாக்கும்.

இதன் மூலமாக புற்றுநோய் உண்டாவதற்கான காரணிகள் அனைத்தும் அளிக்கப்படும். அதிலும் குறிப்பாக கணைய புற்றுநோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியது.

வால்நட் பயன்கள் | Walnut Benefits in Tamil

மன அழுத்தம்

மன அழுத்தத்தை குறைக்கும். இன்றைய வாழ்க்கை சூழ்நிலை காலமாக பலரும் depression சொல்லக்கூடிய மன அழுத்தத்தினால் பலர் அவதிப்படுகிறார்கள்.

இது போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள். வால்நட்ஐ நொறுக்கு தீனி சாப்பிடும் நேரங்களில் சாப்பிட்டு வரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.

இது உடலில் மன அழுத்தத்தினால் உண்டாகக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி மன அழுத்தத்திலிருந்து வெளியேறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

விந்தணுக்களின் தரம்

ஆண்களுக்கு மிகவும் நல்லது. ஆண்கள் வால்நட்ஐ சாப்பிட்டு வர ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை உயர்த்தக் கூடியது என பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல் விந்தணுக்களின் உருவாக்கத்தையும் இயக்கத்தையும் அதிகரிக்கக் கூடியதாக இருக்கிறது இந்த வால்நட். ஆகவே ஆண்கள் தாராளமாக இந்த வால்நட்ஐ சாப்பிட்டு வரலாம்.

தூக்கமின்மை

ஒரு சிலர் இரவு நேரங்களில் தூக்கமின்மை பிரட்சனை காரணமாக அவதிப்படுகின்றனர். முக்கியமாக ஷிப்ட் கணக்கில் பணிபுரிபவர்கள் அதாவது பகல் ஷிப்ட் இரவு ஷிப்ட் என பணியாற்றுபவர்கள் பலருக்கும் இந்த தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகின்றது.

இவர்கள் சாப்பிட பின்னர் வால்நட்டை பாலில் சேர்த்தோ அல்லது தனியாகவோ எடுத்து கொள்ளலாம். இதன் மூலமாக நல்ல ஆரோக்கியமான ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயம் படிக்கவும்

Related Posts

1 Comment

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning