வெள்ளை பூசணிக்காய் பயன்கள் | Vellai Poosanikai Benefits in Tamil
வெண்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், கால்சியம்,பொட்டாசியம் இரும்புச் சத்து, துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.
இக்காயை தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் பல்வேறு நோய்களை எளிதில் குணமாக்க முடியும்.
உடல் எடை குறைய
வெள்ளை பூசணிக்காய் உள்ள நீர்ச்சத்துக்கள் உடல் எடையை விரைவாக குறைப்பதற்கு உதவுகிறது.
வெண்பூசணியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து ஒரு டம்ளர் அளவிற்கு காலை வெறும் வயிற்றில் தினமும் அருந்தி வரும் பொழுது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
வயிற்றுப்புழுக்கள்
வெண்பூசணி சாற்றை தினமும் அருந்தி வரும் பொழுது வயிறு குடற்பகுதியில் உள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வயிற்றுப்புழுக்கள், நாடா புழுக்கள் அனைத்தும் அழிந்து வெளியேறிடும்.
வெள்ளை பூசணிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வரும் பொழுது கண் பார்வை திறன் அதிகரிக்க தொடங்கும்.
இரத்த சுத்திகரிப்பு
வெள்ளை பூசணிக்காய் ரத்தத்தில் உள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் வெளியேற்றி ரத்தத்தினை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
ரத்த சோகை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை பூசணிக்காய் சாறு சிறந்த நிவாரணத்தை அளிக்கிறது.
அல்சர்
அல்சர் பிரச்சனையால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல், வவயிற்று ஏரிச்சல் போன்ற பாதிப்புகள் வெண்பூசணி சாற்றை தொடர்ந்து அருந்தி வரும் பொழுது குணமாகும்.
வயிற்றில் உருவாகும் அதிகப்படியான அமிலச்சுரத்தின் தீவிரத்தை குறைது சமநிலைப்படுத்தி வயிற்றை குளிரச் செய்கிறது.
உடல் குளிர்ச்சி
வெண்பூசணி சாற்றை தொடர்ந்து அருந்தி வரும்பொழுது, இதிலுள்ள அதிக நீர்ச்சத்தின் காரணமாக, உடல் சூடு, பித்தம், உடல் சோர்வு, தீராத தாகம் போன்ற பாதிப்புகள் குறைந்து உடலை குளிரச் செய்கிறது.
சிறுநீரக பிரச்சனை
வெண்பூசணி சாறு சிறுநீரக கோளாறுகளை குறைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. சிறுநீரகத்தில் உருவாகும் தொற்றுக்கள், சிறுநீருடன் கலந்து வரும் ரத்தப்போக்கு, மூலநோயால் வரும் ரத்தக் கசிவு போன்றவற்றிற்கு வெண்பூசணி சாற்றை தினமும் அருந்தி வருவதன் மூலம் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
மேலும் சிறுநீரக கற்கள் உருவாகாமலும், தடுக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.
இதய ஆரோக்கியம்
வெண்பூசணி சாற்றை தொடர்ந்து அருந்தி வருவதன் மூலம், ரத்த ஓட்டம் சீராகி, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
வெண்பூசணிக்காய், இதய பலவீனத்தை தடுக்கக்கூடியது. இதய நாளங்களில் ஏற்படும் அடைப்பை, படிப்படியாக குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நரம்பு தளர்ச்சி
வெள்ளை பூசணிக்காய் சாறு எலும்பு நரம்புகளை வலுப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
நரம்புத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள், வெண்பூசணியை சாறு வடிவிலோ அல்லது சமையலிலோ அடிக்கடி எடுத்துக்கொண்டால், நரம்புத்தளர்ச்சியால் ஏற்பட்ட பாதிப்புகள் வெகுவாக குறைந்து வரும்.
மாதவிடாய்
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளை வெண்பூசணிச்சாற்றை தொடர்ந்து அருந்தி வருவதன் மூலம் குணமாகும்.
ஆரோக்கியம்
காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுக்கடுப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் காலங்களில் உருவாகும் அதிக நீர்ச்சத்து இழப்பு உடற்சோர்வு போன்றவற்றிற்கு வெண்பூசணி சாற்றை அடிக்கடி அருந்தி வருவதன் மூலம் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
தோல் பிரட்சனை
வெண்பூசணிச்சாறு ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதால், இதனை அருந்தி வரும் பொழுது தோல் அலர்ஜி, தோல் சுருக்கம் போன்ற தோல் தொடர்பான நோய்கள் படிப்படியாக குறைந்து வரும்.
மனஅழுத்தம்
வெண்பூசணிச்சாறு மூளையின் செயல்பாடுகளை தூண்டி மூளை நரம்புகளை பலப்படுத்துகிறது. இதன் மூலம் மனஅழுத்தம் போன்றவற்றை குறைத்து ஆரோக்கியமான மனநிலையை அளிக்கிறது.
புற்றுநோய்
வெண்பூசணிக்காய் புற்றுநோய்க்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது, பல்வேறு வகையான புற்றுநோய்கள் வருவதில் இருந்து, உடலை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இதனையும் படிக்கலாமே
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil(Opens in a new browser tab)
- இலுப்பை எண்ணெய் பயன்கள் | Iluppai Oil Benefits(Opens in a new browser tab)
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.
2 Comments
Comments are closed.