பழைய சோறு பயன்கள் | Palaya Soru Benefits Tamil

பழைய சோறு பயன்கள் | Palaya Soru Benefits Tamil

பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல் நலத்திற்கு பக்க பலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

அமெரிக்கன், நியூட்ரிஷன் அசோசியேட் கூட இதன் பெருமைகளையும், நன்மைகளையும் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளது.

இந்த உணவு அமெரிக்கர்களுக்கும் பிற நாட்டினருக்கும் வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம். நம் முன்னோர்களுக்கு அன்றாடம் பார்த்து, பார்த்து பழகிப்போன இதம் தரும் காலை உணவு.

முதல் நாள் வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் சாப்பிடு இந்த பழைய சாதத்தை அமுதம் என்றே சொல்லலாம்.

நிறைய பேருக்கு இது உடலுக்கு நல்லது என்று மட்டும்தான் தெரியும். இதன் உண்மையான நன்மைகளை தெரிந்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்.

முதல் நாள் சாதத்தில் நீர் ஊற்றி, மறுநாள் சாப்பிடு இந்த பழைய சாதத்தில்தான் அரிய வைட்டமின்களான B6, B12, ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க மருத்துவர் ஒருவர்.

அது மட்டுமல்ல உடலுக்கு குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் பிரகாசம் பெருகி நம் உணவு பாதையை ஆரோக்கியமாக வைக்கிறது.

பழைய சோறு பயன்கள்

அமுதம் போன்ற பழையசாதம்

இன்றும் கிராமப்புறங்களில் மண்பானையில்தான் பழைய சாதம், போட்டு வைப்பார்கள். முக்கியமாக பழைய சாத மிகவும் சிறந்தது. பழுப்பு அரிசி என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான் சிறந்தது.

ஒரு மண்சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு சுத்தமான தண்ணீரை ஊற்றி வைத்து மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து சிறிது மோர் சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடு பொழுது அமுதமாக இருக்கும்.

இதில் உள்ள மோர் மற்றும் வெங்காயம் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் என்பதால் இதை சாப்பிட்டு வந்தால், நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

பழையசாதம் உடன் இரண்டு சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடு பொழுது, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. அதனால்தான் அந்த காலத்தில் நம் முன்ன ஆரோக்கியமாக இருந்தார்கள்.

இன்றைக்கு, குறிப்பிட்ட காலம்வந்தாலே, டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல் என்று ஒவ்வொரு வருடமும் தப்பிப் பிழைப்பதே பெரும்பாடாக உள்ளது.

இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதே இதற்கு காரணமாகும். சில பேர் சொல்வார்கள் பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும். உடல் பருமன் உண்டாகும் என்பதெல்லாம். ஆனால் அது உண்மை அல்ல.

இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியதுதான். எதையுமே உழைப்பிற்கு ஏற்றார் போல் அளவோடு சாப்பிட்டால் எந்த நோயும் வராது.

palaya soru benefits tamil

செரிமான மண்டலம்

இந்த பழைய சாதத்தை, சாப்பிடு பொழுது இதில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால் இதை சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கி செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

நோய் தொற்றிலுருந்து பாதுகாக்கும்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் நோய் எதிர்ப்பிற்கான காரணிகள் அதிகம் உள்ளதால் இதை சாப்பிடும் பொழுது இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பதோடு உடலைத் தாக்கும் நோய்க் கிருமிகளை எதிர்க்கும் தன்மை உடையது.

இதனால் உடலில் அடிக்கடி ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கலாம். முக்கியமாக தினமும் காலையில் பழைய சோற்றினை சாப்பிட்டு வந்தால் விரைவில் முதுமை தோற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.

எலும்புகள் வலிமை

இன்று நிறைய பேருக்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அடிக்கடி பழைய சாதம் சாப்பிட்டால் எலும்பு பலம் பெறும் என்று ஆய்வில் கூறப்படுகிறது.

உடல் சூடு

அதிலும் இன்று நிறைய பேருக்கு உள்ள ஒரு பெரும் பிரச்சனை உடல் சூடு. இதனால்தான் அல்சர் முதல் முடி கொட்டுவது வரை, பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எனவே, உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் காலை உணவாக பழைய சாதம் கொஞ்சம் சாப்பிட்டு பாருங்கள். அன்று முழுவதும்,உடல் குழுவென்று இருக்கும்.

மலசிக்கல்

பழைய சாதத்தில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால் இதை தினமும் சாப்பிடு பொழுது மலச்சிக்கல் பிரச்சனை என்பது, இருக்கவே இருக்காது.

பொதுவாக மலச்சிக்கல் என்பது மனிதனை முடக்கி விடும் மோசமான ஒன்றாகும்.

பழைய சோறு

உடல் சோர்வு

காலையில் இதை சாப்பிடு பொழுது நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குறிப்பாக சோர்வு என்பது எட்டிக்கூட பார்க்காது.

இரத்த அழுத்தம்

இன்று பலரும் இரத்த அழுத்தத்தால், பாதிக்கப்பட்டுள்ளனர். பழைய சாதம் இந்த ரத்த அழுத்தத்தை குறைக்கும் என்றும் கூறபடுகிறது.

அல்சர்

முறையற்ற உணவு முறையினால் ஏற்படும் அல்சர் இக்கால தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகும்.

இவர்கள் பழைய சாதத்தை தினமும் சாப்பிடு பொழுது, அல்சர் குணமாகிவிடும். இதற்கு காரணம் இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள்தான்.

ஆங்கிலேயர்கள், நம் நாட்டிற்குள் வந்து காபி, டீ யை என்று அறிமுகம் படுத்தினாரோ அன்றே நீராகாரமும் மறைந்து விட்டது.

அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் காலையில் அருந்தும் முதல் பானம் இந்த நீராகாரம்தான். இது அத்தனை மருத்துவ குணம் வாய்ந்தது. அதனால்தான் நம் தாத்தா, பாட்டிகள் அத்தனை வைத்து வரை,நோய் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தார்கள்.

இதில் என்ன ஒரு வருத்தத்திற்குரிய விஷயம் என்றால் நம் சத்துள்ள பாரம்பரிய உணவை வெளிநாட்டினர் சொல்லி தெரிந்து கொள்வதுதான்.

பரவாயில்லை அவர்களுக்கு நம் உணவின் மதிப்பு தெரிந்திருப்பது நமக்கும் பெருமைதான்.

மண்பானையில், தண்ணீர் ஊற்று செய்யப்படும் பழைய சோறு இன்னும் அதிக சுவையுடன் மணம் கொண்டதாக இருக்கும்.

மேலும்

கோடைக்காலத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்கும் ஒரே காலை உணவு என்றால் அது இந்த பழைய சாதம்தான். எனவே இனி பழைய சாதத்தை அலட்சியப்படுத்தாமல் தினமும் முடியவில்லை என்றாலும் வாரத்தில் மூன்று நாட்களாவது சாப்பிட்டு இதன் அற்புத நன்மைகளை பெற்றிடுங்கள்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்.

 

 

Related Posts

5 Comments

  1. Pingback: quik 2000
  2. Pingback: dee88
  3. Pingback: url

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning