நிலவேம்பானது இந்தியா இலங்கை தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளிலும் மேலும் கிராம பகுதிகளிலும் மற்றும் இயற்கை வளம் நிறைந்த காட்டுப் பகுதிகளிலும் விளையக்கூடிய ஒரு அற்புதமான மூலிகையாகும்.
இந்த நிலவேம்பு காலங்காலமாக சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் நம்மில் பலரை பாதித்தது. அந்த சமயத்தில் நிலவேம்பு கசாயம் ஆனது ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது.
தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலவேம்பு கசாயத்தினை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது.
நிலவேம்பு கசாயம் செய்முறை
நிலவேம்பு, விலாமிச்சை வேர், வெட்டி வேர், கோரைக்கிழங்கு, சந்தனம், பேய்ப்புடல், சுக்கு, மிளகு, பற்பாடகம் ஆகியவற்றை சரியான அளவில் சேர்த்து தயாரிக்கப்பட கூடிய கலவை நிலவேம்பு கசாயம் ஆகும்.
ஆரோக்கியம் நிறைந்த நிலவேம்பு கசாயத்தின் குடிப்பதனால் நமது உடலுக்கு ஏற்படக் கூடிய நன்மைகளை பற்றி பார்ப்போம்.
டெங்கு
டெங்குக் காய்ச்சலானது ஒரு வகை வைரஸ் ஆகும். இந்த வைரசை சுமந்து சுற்றக்கூடிய கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் பொழுது இந்த வைரஸ் ஆனது கொசுவிலிருந்து மனிதனுக்கு பரவி கடுமையான காய்ச்சல், உடல் வலி, ரத்தம் உறைதல் போன்ற உபாதைகளுக்கு உள்ளாக்குகிறது.
ஒரு கட்டத்தில் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகை வைரஸ் ஆகும். இந்த டெங்கு வியாதிக்கு ஆங்கில மருந்துகளை காட்டிலும் இந்த நிலவேம்பு கசாயம் ஆனது ஒரு சிறந்த அருமருந்தாக விளங்குகிறது.
இந்த நிலவேம்பில் இருக்கக் கூடிய வேதிப் பொருட்கள் இந்த வைரஸினை உடலிலிருந்து அளிப்பதற்கு சிறப்பாக செயல்படுகிறது.
நிலவேம்பு நன்றாக பொடி செய்து கஷாயம் காய்ச்சி இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து வருவதன் மூலமாக உடலில் உள்ள டெங்கு வைரஸ் கிருமிகள் அழிந்து உடல் நலம் ஆரோக்கியம் பெறும்.
மேலும் இது உடலை நன்றாக வலுப்படுத்தி மீண்டும் பழைய உடலினை பெற வைக்கின்றது.
ஜுரம்
ஜுரம், காய்ச்சல் இவற்றில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒரு சில வகை வைரஸ் கிருமிகளினால் தொற்று ஏற்படுகின்றது.
சில சமயங்களில் எந்தவித காரணமும் இல்லாமல் விட்டு விட்டு அடிக்கடி காய்ச்சல் ஏற்படும் சமயங்களில் சிறந்த இயற்கை மருந்தான நிலவேம்பு கசாயத்தை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்துவதன் மூலமாக அடிக்கடி விட்டுவிட்டு வரும் காய்ச்சல் முற்றிலும் குணமாகும்.
பசி உணர்வு
ஒரு சிலருக்கு நீண்ட நாள் காய்ச்சல், ஜூரம் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டு இருப்பர். அது மட்டுமில்லாமல் உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்பவர்களுக்கும் பசி உணர்வு ஆனது சற்று குறைந்தே காணப்படும்.
இதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் நமது கல்லீரல் நாம் சாப்பிடக்கூடிய உணவினை செரிமானம் செய்வதற்கு பித்த நீர் சுரப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
ஆனால் உடல் உபாதைகள் காரணமாக பித்த நீர் சுரப்பு குறைந்து விடுகிறது.
இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் நிலவேம்பை மருத்துவரின் ஆலோசனை படி சரியான கால இடைவெளியில் சாப்பிட்டு வருவதன் மூலமாக வயிற்றிலுள்ள அமிலத்தின் சுரப்பு அதிகரித்து பசி உணர்வு நன்றாக ஏற்படும்.
வயிற்று புழுக்கள்
நாம் கடைகளில் வாங்கி சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் நமது கண்ணுக்கு தெரியாத அளவில் மிகச்சிறிய அளவில் புழுக்கள் உள்ளன. அவை அபப்டியே நமது குடலில் தங்கி விடுகின்றன.
இந்தப் புழுக்கள் நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சி கொள்கிறது.
மேலும் நமது உடல் நலத்தின் ஆரோக்கியமும் பாதிக்கிறது. இத்தகைய உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புழுக்கள் நம் உடலில் இருந்து வெளியேற்ற நிலவேம்பு அருமருந்தாக விளங்குகிறது.
நில வேம்பு இலை நன்றாக பொடி செய்து நன்கு கொதிக்க வைத்த நீரில் கலந்து தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு காலை, மாலை என இரு வேளைகளும் அருந்தி வரவேண்டும்.
அவ்வாறு அருந்தி வருவதன் மூலமாக உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புழுக்கள் அழிந்து மலத்தின் வழியாக வெளியேறி விடும்.
இதனையும் படிக்கலாமே
- திராட்சை ஏன் சாப்பிடவேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
- பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்(Opens in a new browser tab)
- கத்திரிக்காய் சாப்பிடுவார்களா நீங்கள் கட்டாயம் படியுங்கள்(Opens in a new browser tab)
- நிலக்கடலை பயன்கள் | Nilakadalai payangal in Tamil(Opens in a new browser tab
அனைவரும் நமது வலைதளத்தின் பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்.
15 Comments
Comments are closed.