மரவள்ளி கிழங்கு நன்மைகள் | Maravalli Kilangu Benefits in Tamil
பொதுவாக அந்தந்த பருவ காலத்தில் கிடைக்கக்கூடிய உணவுகளுக்குத் தனிச் சிறப்புண்டு.
அந்த வரிசையில் வெப்பமண்டல பருவ காலத்தில் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான உணவு, மரவள்ளி கிழங்கு. இதற்க்கு கப்பக்கிழங்கு, மரச்சீனி கிழங்கு என்று பல பெயர்கள் உண்டு.
மரவள்ளி கிழங்கை நாம் பல வகையில் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, பாயசம் போன்ற இனிப்பு உணவுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய ஜவ்வரிசியினுடைய மூலப்பொருள் இந்த மரவள்ளி கிழங்கு.
மரவள்ளி கிழங்கிலிருந்து தான் ஜவ்வரிசி தயாரிக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி, மருந்து தயாரிப்பிலும் இந்த மரவள்ளி கிழங்கு பயன்படுத்துகின்றன.
மரவள்ளி கிழங்கில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. அதைத் தவிர, இதில் பல உயிர்ச்சத்துகளும் தாதுகளும் உண்டு. இத்தகைய பண்புகள் கொண்ட இந்த மரவள்ளி கிழங்கின் மருத்துவ நன்மைகள் பற்றிக் காண்போம்.
வயிற்றுப்போக்கு
பொதுவாக, வயிற்றுப்போக்கு வயிற்றில் இருக்கக்கூடிய நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்களின் அளவு குறையும் போதுதான் வயிற்றுப்போக்கு உண்டாகும்.
மரவள்ளி கிழங்கில் இருக்கக்கூடிய அதிக உயிர்வெளியேற்ற தடுப்பிகள் வயிற்றில் இருக்கக்கூடிய நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்களின் அளவை அதிகரிக்கும்.
இதன் மூலமாக தீமை செய்யக்கூடிய நுண்ணுயிர்களின் அளவுக் குறைந்து வயிற்றுப்போக்கிலிருந்து குணமாகும்.
வயிற்றுப்போக்கு, வயிற்றிரைச்சல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் மரவள்ளி கிழங்கை சாப்பிட்டு வறுவது மிகவும் நல்லது.
ஒற்றைத் தலைவலி
ஒற்றைத் தலைவலி நீண்ட நாட்களாக அவதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவலி. இதற்காகப் பல சிகிச்சைகள் எடுத்தும் கூட குணமாகாத பலரும் உண்டு.
இதுபோல் இருப்பவர்கள், இந்த மரவள்ளி கிழங்கைச் சாப்பிட்டுவருவது மிகவும் நல்லது.
இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான உயிர்ச்சத்து பி2 மற்றும் ரிபோப்லாவின் போன்ற சத்துகள் ஒற்றைத் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கொடுக்கும்.
இது போன்ற பிபிரச்சனைகளினால் அவதிப்படுபவர்கள் 50-100 கிராம் மரவள்ளி கிழங்கை தினசரி உணவுடன் சேர்த்துக்கொள்வது நல்லது.
கண் பார்வை திறன்
மரவள்ளி கிழங்கை உட்கொள்ளும் போது கண் பார்வை திறன் அதிகரிக்கும்.
மரவள்ளி கிழங்கில் கண் பார்வை மேம்படுவதற்கான உயிர்ச்சத்து ஏ அதிகளவில் உள்ளது.
கண் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது. கண்களில் ஏற்படக்கூடிய கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடு, கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த மரவள்ளி கிழங்கைச் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் மேம்படும்.
வயிற்றுப்புழு
மரவள்ளி கிழங்கில் வயிற்றுப் புழுக்களை அழிக்கும் சக்தி உள்ளது. மரவள்ளி கிழங்கில் இருக்கும் வேதிப்பொருள் இயற்கையாகவே வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்கும் ஆற்றல் உண்டு.
எனவே, வயிற்றுப்புழு அல்லது பூச்சி தொல்லையினால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மரவள்ளி கிழங்கைச் சாப்பிட்டு வர வயிற்றில் இருக்கக்கூடிய புழுக்கள் அழிந்து வெளியேறும்.
மரவள்ளி கிழங்கின் இலைச்சாறுகளுக்கும் வயிற்றுப்புழுக்களை அழிக்கும் ஆற்றல்கொண்டது.
மரவள்ளி கிழங்கில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து உடலின் உட்பகுதியைச் சுத்தப்படுத்தும். இதன் மூலமாகச் செரிமானச் சக்தியை அதிகரிக்கலாம்.
கர்ப்பிணிப் பெண்கள்
மரவள்ளி கிழங்கு கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. பொதுவாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு உயிர்ச்சத்து சி, இரும்புச் சத்து, சாம்பல் சத்து போன்ற சத்துகள் அவசியம் தேவை.
எனவே, கர்ப்பிணிப் பெண்கள் இந்த மரவள்ளி கிழங்கை சாப்பிட்டு வந்தால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமின்றி, கருவில் வளரக்கூடிய குழந்தையின் வளர்ச்சியும் சீராக இருக்கும்.
சருமப் பிரச்சனைகள்
சருமத்தில் ஏற்படக்கூடிய வெண் புள்ளிகள், சரும வறட்சி, தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் கொடுக்கக்கூடியது இந்த மரவள்ளி கிழங்கு.
மரவள்ளி கிழங்கிலிருந்து கிடைக்கக்கூடிய மரவள்ளி மாவிலிருந்து தயாரிக்கக்கூடிய முகப்பூச்சுத் தூள், உடல் குழைமம் போன்ற பொருட்கள் தயாரிக்க மரவள்ளி கிழங்கைப் பயன்படுத்துகின்றன.
எனவே, மரவள்ளி கிழங்கைச் சாப்பிட்டு வருவதால் தோல் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி முகப்பொலிவாகவும் இளமைத் தோற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.
உடல் சத்து
மரவள்ளி கிழங்கில் எண்பது சதவீதத்திற்கும் அதிகமாக மாவுச்சத்து இருக்கிறது. இது உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது.
எனவே, தினமும் கடினமான உடலுழைப்பு செய்வோர் காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது.
ஒரு நாளைக்கு தேவையான உடல் சத்தை கொடுக்கிறது. இது போன்ற பல வகையான நன்மைகளைக் கொடுக்கக்கூடியது இந்த மரவள்ளி கிழங்கு.
மரவள்ளி கிழங்கின் தீமைகள்
மரவள்ளி கிழங்கில் அதிக சத்துகளும் மருத்துவ நன்மைகளும் இருந்தாலும் சில பேருக்கு அல்லது சில வகையாகச் சாப்பிட்டால், பக்கவிளைவுகள் அல்லது பிரச்சனைகள் வரக்கூடும்.
மூளை பக்கவாதம் உள்ளவர்கள் அல்லது மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகள், கல்லீரல் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் உடையவர்கள் இந்த மரவள்ளி கிழங்கைச் சாப்பிடக்கூடாது.
மரவள்ளி கிழங்கைப் பச்சையாக அதிகளவில் சாப்பிடக்கூடாது. அது வயிற்றுக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடும்.
மரவள்ளி கிழங்கில் முக்கியமாக கவனிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஆனால் மரவள்ளி கிழங்கிற்கு இயற்கையாகவே சயனசன் சர்க்கரைக்கூட்டு என்ற நச்சுப்பொருள் இருக்கும் ஆற்றல் உண்டு.
இது போன்ற நச்சு உருவாகிய மரவள்ளி கிழங்குகளைச் சாப்பிடும்போது பக்கவாதம், மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கவும் வாய்ப்புகள் உண்டு.
எனவே, சமையலுக்குப் பயன்படுத்தும் போது மரவள்ளி கிழங்கை நன்றாகப் பார்த்து எடுத்துச் சமைக்கவும். அதுபோல, மரவள்ளி கிழங்கை சாப்பிட்டபின் இஞ்சி, சுக்கு போன்ற உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது.
இதனையும் படிக்கலாமே
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
- கம்பு பயன்கள் | Kambu Benefits in Tamil(Opens in a new browser tab)
- நாயுருவி பயன்கள் | Nayuruvi Plant Uses in Tamil(Opens in a new browser tab)
- உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா(Opens in a new browser tab)
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
6 Comments
Comments are closed.