மல்லிகை பூ மருத்துவகுணம் | Jasmine Flower in Tamil

மல்லிகை பூ மருத்துவகுணம் | Jasmine Flower in Tamil

மல்லிகை பூ மருத்துவகுணம் Jasmine Flower in Tamil

நாம் சாதாரணமாக நினைக்கும் மல்லிகைப் பூக்கள் நறுமணத்தை தருவது மட்டுமின்றி, உடலிற்கு தோன்ற கூடிய நோய்களை தீர்க்கும் ஆற்றல் வாய்ந்தது. அழகிற்காக தலையில் சூடிக்கொள்ளும் மல்லிகை மலரின் சிறந்த மருத்துவ பயன்கள் பற்றி பாப்போம்.

வயிற்று புண்கள்

மல்லிகை  பூக்களை, பத்து எண்ணிக்கையில் எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் வயிற்றுப் புண்கள், குடல் புண்கள் குணமாகும்.

சிறுநீரகம்

சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை, இந்த மல்லிகை மலருக்கு உண்டு. மல்லிகை பூ கஷாயத்தை தினமும் அருந்தி வரும்பொழுது, சிறுநீர் கடுப்பு, சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

சிறுநீரகத்தில் உள்ள கற்கள் படிப்படியாக கரைந்து காணாமல் போகும்.

மல்லிகை பூ மருத்துவகுணம் Jasmine Flower in Tamil

குடற் புழுக்கள்

மல்லிகை பூ  தேநீரில் சேர்த்து அருந்தி வரும்பொழுது, வயிற்றில் உருவாகும் புழுக்கள், குடற் புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்.

அதிக பால் சுரப்பு

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஏற்படும், அதிக பால் சுரப்பை குறைப்பதற்கு மல்லிகைப் பூவை அரைத்து, மார்பகங்களின் மீது பற்றுப் போட்டு வந்தால் வலி குறைந்து படிப்படியாக பால் சுரப்பது நின்று விடும்.

மல்லிகை பூ மருத்துவகுணம் Jasmine Flower in Tamil

அடிபட்ட புண்

அடிப்பட்ட வீக்கம், புண் போன்றவற்றிற்கு மல்லிகை பூவை அரைத்து பூசி வந்தால் விரைவில் குணமாகிவிடும்.

தோல் பிரட்சனைகள்

மல்லிகை பூவை கொண்டு தயாரிக்கப்படும் தைலத்தை, சொறி, சிரங்கு, கொப்பளங்கள் போன்றவற்றின் மீது தடவி வரும்பொழுது மேற்கூறிய தோல் தொடர்பான நோய்கள் குறைய ஆரம்பிக்கும்.

மல்லிகை பூ மருத்துவகுணம் Jasmine Flower in Tamil

தலைமுடி

தலைமுடி வளர்ச்சிக்கு மல்லிகை பூக்கள் சிறந்த பயன்களை தரக்கூடியது. மல்லிகை பூக்கள், கருவேப்பிலை, நெல்லிக்காய் போன்றவற்றை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் தலையில் ஏற்படும் பொடுகுப் பிரச்சனை, தலைமுடி வறட்சி நீங்கும். தலைமுடி வளர்ச்சியினை அதிகரிக்கும்.

மனஅழுத்தம்

மல்லிகை பூக்களின் வாசனைக்கு, மன அழுத்தம், கோபம் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை உள்ளது.

மல்லிகை பூ மருத்துவகுணம் Jasmine Flower in Tamil

உடற் சூடு

மல்லிகை பூக்களுக்கு உடற் சூட்டை குறைக்கும் தன்மை உள்ளதால்தான், பெண்களால் தலைமுடியில் வைத்து பயன்படுத்தப்படுகிறது.

கண் பார்வை

மல்லிகை பூ கஷாயம் அருந்தி வந்தால், கண் நரம்புகளுக்கு ஊட்டமளித்து கண் பார்வை திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.

மல்லிகை பூ மருத்துவகுணம் Jasmine Flower in Tamil

இதனையும் படிக்கலாமே

மல்லிகை பூ மருத்துவகுணம் Jasmine Flower in Tamil

கண்டிப்பாக வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning