துரியன் பழம் பயன்கள் | Durian Fruit in Tamil
இன்று தூரியான் பழத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்க்கலாம். தூரியான் ஒரு விசித்திரமான பழம். சிலர் அதை தீவிரமாக விரும்புகிறார்கள்.
பலர் அதை தீவிரமாக வெறுக்கிறார்கள். இந்த விருப்பு, வெறுப்புகளுக்கு காரணம் தூரியான் பழம் எழுப்பும் வாசனைதான்.
துரியன் பழம் கிடைக்கும் இடம்
தூரியான் பழம் இந்தியாவில் நீலகிரியிலும் மேற்கு கடலோரத்தின் சில இடங்களிலும், கேரளாவில் பயிரிட படுகிறது.
தூரியானில் முப்பது இனங்கள் உள்ளன. இவற்றில் ஒன்பது இனங்களை மட்டுமே, உண்ணத் தகுந்த பழங்களைத் தருகின்றன.
தூரியான் பழம் எப்படி இருக்கும்
தூரியான் மரங்கள் பெரியவை. இருபத்து ஐந்திலிருந்து ஐம்பது மீட்ர் உயரம் வளர்பவை. நட்ட ஏழு வருடங்களில் தூரியான் மரம் பழம் தரத் தொடங்கும்.
தற்போது நான்கு அல்லது ஐந்து வருடங்களில் பழம் தரும் ரகங்களும் உண்டு. தூரியான் பழங்கள், மரத்தின் எல்லா கிளைகளிலிருந்தும் தொங்கும்.
மகரந்தச் சேர்க்கை நிகழ்ந்த மூன்று மாதங்களில் பழங்கள் முதிர்ச்சி அடையும். பழம் முப்பது சென்டிமீட்டர் நீளம் பதினைந்து சென்டிமீட்டர் சுற்றளவு இருக்கும்.
எடை ஒன்றிலிருந்து மூன்று கிலோ இருக்கும். வடிவம், அகலத்தைக் காட்டிலும் நீளமாக இருக்கும். இதன் தோல், பச்சை பழுப்பு நிறம்.
பழத்தின் உள்ளே ஐந்து அறைகளில் வெண்மை கிரீம் வெளிர் மஞ்சள், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களில் இனத்தைப் பொறுத்து காணப்படும்.
ஒன்றிலிருந்து ஏழு விதைகள் இருக்கும். இதன் பழச்சதை வெண்ணெய் நெய் போல் மிகுந்த மணத்துடன் இருக்கும். இந்த மனம்தான் சிலரை சுண்டி இழுக்கும். பலருக்கு பிடிக்காமல் போகும்.
தூரியான் பழம் தோற்றம்
தூரியான் பழம் பலாப்பழம் போலிருக்கும். பலாப்பழத்தின் வெளிப்புற முட்களை விட தூரியான் பழ வெளிப்புற தோலின் முட்கள் கூர்மையானவை.
தூரியான் பழம் சீக்கிரமே கெட்டுவிடும். மரத்திலிருந்து தானாகவே விழும் பழங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பழுத்திருக்கும். ஐந்து அல்லது ஆறு நாட்களில் அழுகிவிடும்.
பொதுவாக தூரியான் பழங்கள் புதிதாக நேரடியாக உண்ணப்படுகின்றன. சில சமயங்களில், சர்க்கரையுடன் சேர்த்து, வேக வைக்கப்படுகின்றன. இல்லை என்றால் இளநீருடன் சேர்த்து, சமைக்கப்படுகின்றன.
ஐஸ் கிரீம்களில் துரியன் சேர்க்க படுகிறது. துண்டு, துண்டாக பழத்தையும் வெங்காயத்தையும் வெட்டி உப்பு vinegar சேர்த்து,உண்பதும் வழக்கம்.
பழுக்காத தூரியான், காய்கறி வேகவைத்து உண்ணப்படுகிறது. தூரியான் மரத்தின் இளம் தளிர்கள் அதாவது இலைகள் சில சமயங்களில் கீரை போல் சமைத்து உண்ணப்படுகின்றன.
தூரியான் பழத்தைக் கொண்டு,கேக், பழ வகை இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. தூரியான் பழம் சத்துக்கள் செறிந்தது.
இருந்தாலும் அதிகமாக உண்பது கூடாது. கர்ப்பிணிகள் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தூரியான் பழத்தை உண்ணக்கூடாது.
தூரியானின் மருத்துவ பயன்கள்
தூரியானில் ஈஸ்ட்ரோஜென் சேர்ந்துள்ளன இது பெண்கள் ஹார்மோன். இதனால், பெண்களின் குழந்தை குறையை போக்கும் சக்தி தூரியானில் இருப்பதாக கருதப்படுகிறது.
பொதுவாகவே பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் தூரியான். அதாவது அதில் வைட்டமின் சி, பொட்டாசியம், புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் முதலியன உள்ளன.
அது ஒரு பாலுணர்வைத் தூண்டும் உணவாக பரவலாக நம்பப்படுகிறது. அதனால் பாலியல் மற்றும் குழந்தையின்மை குறைபாடுகளுக்கு தூரியான் மருந்தாகக் கருதப்படுகிறது.
நோய்களால் அவதிப்படும் நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தை மீட்டுத் தருவதற்கு டானிக்காக தூரியான் பலம் உதவுகிறது.
மேலும் நரம்புகளுக்கு வலுவூட்டும். இதில் உள்ள தாது பலத்தை பெருக்கும். உடலுறவில் ஈடுபடும் திறமைய அதிகரிக்கும்.
தூரியானில் உள்ள வேதிப்பொருள் மன அழுத்தம் மனச்சோர்வு, தூக்கமினமை போக்கி மகிழ்ச்சியை உண்டாக்கும்.
காரணம், இந்தப் பொருள் மூளையின் செரோடோனின் அளவை அதிகரிக்கிறது.
தசை வளர்ச்சிக்கு, தூரியான் உதவுகிறது.
இதனையும் படிக்கலாமே
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்
- அழுகண்ணி மூலிகை | Alukanni Mooligai
- திரிபலா சூரணம் பயன்கள் | Triphala Suranam Uses in Tamil
- பேரிக்காய் பயன்கள் | Pear Fruit in Tamil
- சேப்பங்கிழங்கு பயன்கள் | Seppankilangu Uses in Tamil
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை படிக்கவும்.
13 Comments
Comments are closed.