செவ்வாழை பழத்தின் நன்மைகள் | Red Banana Benefits in Tamil
நாம் பழங்களில் அதிகம் சாப்பிடக்கூடிய பழம் வாழைப்பழம்.இந்த வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன.இருப்பினும் செவ்வாழை பழத்தில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த செவ்வாழை பழத்தில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய அதிகம் நிறைந்துள்ளது.
இந்த செவ்வாழை பழத்தை சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.
சிறுநீரக கற்கள்
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள், சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பலத்தினை சாப்பிடுவதனால் இதில் உள்ள உயர் தர பொட்டாசியம் சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கும்.
எலும்புகள் வலிமையடைய
தினமும் செவ்வாழை சாப்பிடுவதினால் உடலிற்கு தேவையான கால்சியம் சத்தானது அகிடைக்கின்றது. அதனால், எலும்புகள் வலிமை அடைகிறது.
எனவே, எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தினமும் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.
நரம்புத்தளர்ச்சி
நரம்புத்தளர்ச்சி பிரச்சனை ஏற்பட்டால் உடல் பலம் குறையும். இதனால் ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே, நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழத்தில் இரவு தூங்கும்போது சாப்பிட வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டு வர, நரம்புகள் பலம் பெரும். ஆண்மைக் குறைவு பிரச்சனை சரியாகும்.
உடல் எடை குறைக்க
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது. ஆனால், செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட மிகக்குறைந்த கலோரிகளே உள்ளன.
எனவே, உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வர பசி அதிக நேரம் எடுக்காமல் இருக்கும்.
இதனால், உடல் எடை குறையும்.
சுறுசுறுப்பு
செவ்வாழையில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள்,இரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்கும். உடல் என்றும் சுறுசுறுப்பாக வைத்திருக்க தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுங்கள்.
உடல் என்றும் ஆற்றலுடன் இருக்கும்.
கண் பார்வை
மாலைகண் பிரச்சனை உள்ளவர்கள், கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாழைப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.
எனவே, பார்வை திறனில் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வர கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.
செவ்வாழைப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
புற்றுநோய்
புற்றுநோய் நமக்கு வராமல் இருக்க, தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுங்கள். உடலுக்கு மிகவும் நல்லது.
சுற்றுப்புற சூழ்நிலைகள் மற்றும் தட்பவெப்ப மாறுபாடுகளால் உற்பத்தி ஆகின்ற மனிதர்களை தொற்றும் புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு.
வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பாதிப்பை கட்டுப்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க கூடிய ஆற்றல் செவ்வாழை பழத்திற்கு உள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் உள்ள சுற்றுப்புறசூழல் காரணமாக ஏற்படுகின்ற தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க கூடிய ஆற்றல் இந்த செவ்வாழை பழத்திற்கு உளள்து.
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதய ஆரோக்கியம்
செவ்வாழை பழத்தில் பொட்டாசியம் சத்தானது அதிக அளவில் உள்ளது. இந்த பொட்டாசியமானது நரம்புகளில் இறுக்கம் ஏற்படாமல் தடுக்க கூடிய ஆற்றல் கொண்டது.
இதய ஆரோக்கியத்திற்கும் பொட்டாசியம் சத்தானது மிகவும் அவசியமானதாகும். மேலும் இது இரத்த அழுத்தத்தினை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.
இதயத்திற்கு இரத்தம் சீரான அளவில் சென்று வர பொட்டாசியம் உதவுகிறது. ஆகவே இந்த செவ்வாழை பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
முக்கியமான குறிப்பு
சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக கற்கள் உள்ளவர்கள், மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியவர்கள், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்புதான் இந்த செவ்வாழை பழத்தை சாப்பிட வேண்டும்.
இதனையும் படிக்கலாமே
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil(Opens in a new browser tab)
- இலுப்பை எண்ணெய் பயன்கள் | Iluppai Oil Benefits(Opens in a new browser tab)
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil(Opens in a new browser tab)
- மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்(Opens in a new browser tab)
- பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil(Opens in a new browser tab)
- உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil(Opens in a new browser tab)
- முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்.
21 Comments
Comments are closed.